போபால் அழிவின் அரசியல்
மருதன்
பக் : 200
விலை : 135/-
மருதன்
பக் : 200
விலை : 135/-
1984, டிசம்பர் 2-3ம் தேதி, நள்ளிரவு
யூனியன் கார்பைட் ஆலையில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவால் இன்று வரை இருபத்து மூன்றாயிரம்
பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நிரந்தரமாக மற்றும் பகுதியளவில் முடமாகிப் போனவர்களிள்
எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தாண்டுகிறது.
இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட
நிலையில், ஜூன்
7, 2010
அன்று போபால் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. சில முக்கிய அம்சங்கள்.
- மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தால்தான் அமெரிக்கா யூனியன் கார்பைட் தொழிற்சாலையை இந்தியாவில் அமைத்தது.
- அமெரிக்காவில் பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. எனவே, ஆபத்தான ரசாயனத் தொழிற்சாலைகளை, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்கா அமைத்து வருகிறது.
- யூனியன் கார்பைட் நிறுவனம் போதுமான பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடிக்கவில்லை. இதனை அமெரிக்க நிறுவனமோ உள்ளூர் நிர்வாகமோ பொருட்படுத்தவில்லை.
- விஷவாயு கசிவு ஏற்படும் பட்சத்தில், அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை திட்டம் எதுவும் அந்த நிறுவனத்திடம் இல்லை.
- விஷவாயு கசிந்தபோது உள்ளூர் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் ஏராளமான மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.
மொத்தம் ஏழு பேரை நீதிபதி
குற்றவாளி என்று அறிவித்தார்.
ஆனால், அந்த ஏழு
பேரில், வாரன்
ஆண்டர்சன் பெயர் இல்லை. அவரை அப்ஸ்காண்டர் என்று அழைத்தது நீதிமன்றம். அதாவது, வழக்கில்
கலந்து கொள்ளாமல் நழுவியவர்.
ஆக, சட்டத்தின்
நீண்ட கரம், வாரன்
ஆண்டர்சனைத் தீண்டவில்லை. கேஷுப் மஹிந்திரா உள்ளிட்ட இந்தியக் குற்றவாளிகளைத் தீண்டவில்லை.
யுசிசி அமெரிக்கா, யுசிஐஎல் இந்தியா இரண்டையும் தீண்டவில்லை.
*********************
‘நடு
இரவில் வெளியில் இருந்து பல சத்தங்கள் கேட்டன. ‘எழுந்திரு!’, ‘ஓடு!’ ‘ஓடு!’ என்று
மக்கள் கத்திக்-கொண்டிருந்தார்கள். ‘வாயு கசிந்துவிட்டது!’ என்று
ஒரு குரல். நான் கண்களைத் திறந்து பார்த்தேன். எங்கள் அறை முழுவதும் புகை
நிரம்பியிருந்தது. என் முகத்தில் போர்த்தப்பட்டிருந்த துணியை விலக்கினேன். கண்கள்
எரிய ஆரம்பித்தன...
என்
அப்பா வீட்டைவிட்டு வெளியேற மறுத்துவிட்டார். அம்மா அவருடனே
ஒண்டிக்கொண்டுவிட்டார். எனவே, நாங்கள் ஆறு பேர் வெளியேறினோம். சுடு-காட்டை
நோக்கி ஓடினோம். சிறிது நேரத்தில், என் இளைய தங்கை-யும் சகோதரனும்
எங்களிடம் இருந்து பிரிந்து சென்று-விட்டார்கள். இப்போது நாங்கள் நால்வர்-தான்
எஞ்சி-யிருந்தோம். புகை அடர்த்தியாக இருந்தது. எதுவுமே தெரியவில்லை. ஆனாலும், ஓடிக்கொண்டிருந்-தோம்.’
- ஒன்பது
வயது ரமேஷின் வாக்குமூலம்
‘புகை
வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. எல்லோரும் எதிர் திசையில் ஓடிக்கொண்டிருந்தபோது, நான்
தொழிற்-சாலையை நோக்கி விரைந்தேன். அவர்களிடம் கேட்டேன்.
வெளியேறிக்-கொண்டிருப்பது எப்படிப்-பட்ட வாயு? இதை சுவாசித்தவர்-களுக்கு என்ன
சிகிச்சை அளிக்கவேண்டும்? அப்போது மணி இரவு 12 இருக்கும். ஆனால், அவர்கள்
வாயைத் திறக்கவேயில்லை. விடி-காலை மூன்று மணிக்கு, தொழிற்சாலையில் இருந்து
ஒருவர் வந்து விஷயத்தைச் சொன்னார். வெளியேறிய வாயுவின் பெயர், மெத்தில்
ஐசோ சயனேட் என்று.’
சுவரஜ்
பூரி, மாவட்ட
காவல்துறை ஆணையர், போபால்.
கிரீன்பீஸ்
வெளியிட்ட அறிக்கையில் இருந்து
‘யூனியன்
கார்பைட் பாதுகாப்பற்ற முறையில் இயங்கு-கிறது என்று எங்கிருந்து தகவல் வந்தாலும்
சரி, அப்படிப்-பட்ட
ஒரு தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டுவிடும்.’
வாரன்
ஆண்டர்சன், முன்னாள்
சேர்மன்,
யூனியன்
கார்பைட் கார்ப்பரேஷன். மார்ச் 1985ம் ஆண்டு
நடைபெற்ற
பத்திரிகை-யாளர் சந்திப்பின்-போது
‘ஆடம்பரமான
நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் இந்த அதிகாரிகள் யார்? எங்களில்
யாருக்கு 400 ரூபாய்
வழங்க-வேண்டும்,
யாருக்கு 200 ரூபாய் வழங்கவேண்டும், யாருக்கு
100 போதும்
என்று எந்த அடிப்படையில் இவர்கள் முடிவெடுக்கிறார்கள்? எங்களை
ஏன் இவர்கள் கழிவுகளைப் போல் நடத்துகிறார்கள்?’
ஜே.பி.
நகரில் இருந்து சாவித்திரி. ராதிகா ராமசேஷன்,
எகனாமிக்
அண்ட் பொலிட்டிகல் வீக்லி, டிசம்பர் 22-29, 1984
No comments:
Post a Comment