Search This Blog

Showing posts with label விமர்சனம். Show all posts

Monday, October 17, 2011

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - விமர்சனம் - துக்ளக், அக்டோபர் 12, 2011

12-10-2011 தேதியிட்ட துக்ளக் இதழில், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ஸ்பெக்ட்ரம் சர்ச்சை’ புத்தக விமர்சனம் வெளியாகியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை  புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-625-4.html

Wednesday, September 7, 2011

உயிர் எழுத்து செப் 2011ல் வெளியாகியுள்ள ‘மருந்து’ நூல் மதிப்புரை

நூல் மதிப்புரை

மருத்துவப் பெருங்கதையாடல்களுக்குள் உருக்குலையும் உதிரிகள்: 'மருந்து’ நாவலை முன்வைத்து ஒரு வரைவு

இரத்தினக்குமார்

கேரள நவீனத்துவப் (ஆதுனிகத) படைப்பாளிகளில் மிக முக்கிய ஆளுமையாகப் பரிணமித்திருப்பவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா. இவரது படைப்புகள் மலையாள எழுத்துலகில் மட்டுமல்லாது தமிழ் இலக்கியப்பரப்பிலும் சமீபமாகக் கவனத்தைப் பெற்று வருகின்றன. மருத்துவராகப் பணிபுரியும் புனத்தில் குஞ்ஞப்துல்லா கோழிக்கோடு மாவட்டம் வடகராப்பள்ளிக்கருகே உள்ள ஒஞ்சியத்தில் பிறந்தவர் சிறுகதை, நாவல், பயணக்கட்டுரைகள், அனுபவக்குறிப்புகள் எனத் தன் எழுத்தின் எல்லைகளை விஸ்தரித்து வருகிறார். சாகித்ய அகாதெமி, முட்டத்து வர்க்கி விருது, விஸ்வதீபம் விருது போன்றவற்றைத் தன்னுடைய எழுத்து வாழ்க்கைக்காகப் பெற்றவர். இவரது மீஸான்கற்கள், கண்யாவனங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழில், தற்போது வெளிவந்திருக்கும் நாவல் ‘மருந்து’. இவரது படைப்புகளில் படைப்பூக்கம் மிகுந்த ஆக்கம் இது.

யமுனைக் கரையில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ஒரு பொது மருத்துவமனையின் அன்றாட நிகழ்வுகளே, மருந்து நாவலின் மைய எடுத்துரைப்பியலாக விரிவு கொண்டுள்ளன. நவீனச் சமூகம் தனது தேவைக்காகத் தோற்றுவித்துக்கொண்ட அறிவியல் தொழிற்பாடு மருத்துவமனை. அது மனிதனது சுயநலத்திற்காகவும் பொருள் சார்ந்த பெரு விருப்பத்திற்காகவும் தனிப்பட்ட பேராசைகளைப் பிரதிபலிக்கும் இடமாகிப் போயிருக்கும் அவலங்களைக் கச்சாப்பொருளாக்கியுள்ளது இந்நாவல். மருத்துவமனையை மையமிட்ட வாழ்வுசார்ப் புனைவுகள் குறைவு. சட்டென்று நினைவில் புரளக்கூடிய படைப்புகளான தாராசங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ (வங்க நாவல்), செகாவின் ‘பதினாறாம் நம்பர் வார்டு (சிறுகதை), அலெக்சாண்டர் சோலிசெனிட்சின் ‘கேன்சர் வார்டு’, நகுலனின் ‘வாக்குமூலம்’, சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். அந்த வரிசையை முன்னகர்த்தும் படைப்பாக்கமாக ‘மருந்து’ அமைந்திருப்பது கவனத்திற்குரியது.

நாவலின் தொடக்கம் அதீதப் புனைவுத்தன்மையுடையது. முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த ஒரு விதவையின் கிளிகள் நோய் தாக்கி இறந்ததைத் தொடர்ந்து அவளும் மரணத்தைத் தழுவுகிறாள். உருவும் அருவுமற்ற மாயமனிதன் ஒருவன் விதைகள் தேடி ஊருக்குள் நுழைந்து இரவும் பகலும் உயிர்களைக் குடிக்கின்றான். விதவையைத் தொடர்ந்து கிராம மனிதர்கள் அனைவரையும் காலரா வடிவில் அவன் அழிக்க, இறுதியில் பெருவெள்ளம் அனைத்தையும் வாரிச்சுருட்டிச் சென்றுவிடுகிறது. இரண்டு குடம் சாராயத்துடன், இரண்டு கடையர்கள் மட்டுமே எஞ்சுகின்றனர். யு.ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’, காம்யுவின் ‘பிளேக்’ ஆகிய நாவல்கள் காட்சிப்படுத்திய பெரும் நோய்ச் சித்திரத்தை 'மருந்து'வின் தொடக்கப்பகுதி கிளர்த்துகிறது. நோய் உடல்களை மட்டுமல்ல உலகில் மனிதவாடையைக்கூட உறிஞ்சிவிடும் வல்லமைபெற்றதென அவதானிக்கச் செய்கிறது இப்பகுதி. மண்ணில் புதைந்த கிராமத்தின் மணல்வெளிக்குமேல், கட்டப்பட்ட பெருங்கட்டடத்தில் நாவலின் பிந்திய கதைநிகழ்வுகள் பின்னப்படுகின்றன.

மருத்துவப் படிப்பிற்காக அப்பெரும் வளாகத்தில் நுழையும் தேவதாஸ், லட்சுமி இருவரது தோழமையை மையமிட்டு நகரும் கதாச்சுருள் அவர்களின் படிப்பு முடியும் தறுவாயில் நிறைவடைகிறது. தலைவலி முதல் பாலியல்வரை பதினாறு கட்டடங்களில் நடக்கும் மருத்துவ நிகழ்வுகளை நுண்ணிய விவரிப்புத்தன்மையில் பொழிந்துள்ளது நாவல். அப்பொழிதலிற்குப் பின்னிருக்கும் வாழ்வியல் நெருக்கடிகளும் இருத்தலுக்காக நடைபெறும் போராட்டங்களும் அவஸ்தைகளும் பயங்கரமானவை. மரணத்தையும் புலன்களின் நிலையாமையையும் மருத்துவத்துறை கட்டமைக்கும் நுண்ணரசியல் செயல்பாடுகளையும் இணைத்து கிருமிகளால் எளிதில் நசிவடைந்துவிடக்கூடிய இவ்வாழ்வு பெறும் மதிப்பு என்ன? என்ற கேள்வியை முன்வைத்து நகர்ந்துள்ளது மருந்து. கதாநிகழ்வுகள் பல்வேறு சம்பவங்களாகக் கோர்க்கப்பட்டுள்ளன. நட்பு, காதல், தந்தையின் ஆதிக்கம், ஊழல், உடல் வேட்கையைத் தணிக்க அலையும் உடல்கள், அதிகார மீறல்களால் அலைக்கழிக்கப்படும் தாதிகள், நோயாளிகளின் வாதைகள் எனச் சம்பவங்களை உணர்ச்சிகளின் சுழிப்புகளாக்கி லாவகமாகக் கையாள்வதோடு மருத்துவ சக்திகள் தனக்குக் கீழே இயங்கும் உதிரிகள்மீது அதிகாரம் செலுத்தும் இழிநிலைகளையும் கிளைக்கதைகளாகக் கட்டமைத்துள்ளது.

உடலியல் மருத்துவர் ஸ்ரீகுமார், டாக்டர்கள் க்வாஜா, தனுஜா, ஹெலன்சிங், ஹஸன், எக்ஸாமினர் சௌத்திரி, நுட்ப அறிவுத்திறம் பெற்ற சாந்தகுமார் ஆகிய துறைசார் மருத்துவர்களின் பின்னணிகளைப் பல்வேறு தளங்களில் பதிவு செய்கிறது. தனது சாதுப்பிராணிக்குக் கொடுக்கவேண்டிய மருந்தை, சோதிக்கத் தானே குடித்து உயிரிழந்து ஆய்விற்கு எலும்புக்கூடாய் நிற்கும் டாக்டர் ஹஸன், கஸல் கேட்டு அயற்சியை மறக்கும் டாக்டர் தனுஜாவின் கடும் உழைப்பு முன்னுதாரணமானவைகள். பிணவறையில் சிதைந்த உடல்களோடிருக்கும் சட்டர்ஜி, இசைநிகழ்ச்சிகளையும் அழகிய பூந்தோட்டத்தையும் நடத்திவருவது வாழ்வு தரும் முரண். தன் அழகையும் இளமையையும் தனிமையில் உழற்றி வரும் டாக்டர் மேட்ரன் ஹெலன் சிங், மனதில் கசியும் கடந்துபோன காதலை அகற்றமுடியாமல் பெத்தடின் வழி தனது பிரக்ஞையின் நூலிழைகளை முடைந்து நசியும் மருத்துவர். மேஜர் சர்ஜன் ஆச்சாரியார் லஞ்சம், பாலியல் சுரண்டலுடன் ஆதிக்க மனம் படைத்தவர். அறுவைச் சிகிச்சையில் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே ருசிக்கத் தெரிந்தவர். இவ்வெற்றி பிசகும்போது செல்ல வளர்ப்பு நாயை அறுவைசிகிச்சை செய்யும் மனோவியல் சிக்கலுக்குள்ளாகிறார். அலோபதி மருத்துவம் மனிதனை இயந்திரத்தனமாக்கிவிடுகிறது என்பதற்கு ஆச்சாரியார் மாதிரி. மருத்துவத் துறை தந்த புகழ் அவரை மிருக நிலைக்குக் கொண்டு செல்கிறது. தனது நோய்க்கு, பிறர் மருத்துவம் பார்ப்பதைக்கூட ஏற்றுக் கொள்ளமுடியாமல் நோய்முற்றி மரணிக்கிறார். மருந்தும் நோயைக் குணப்படுத்தாது என்பதற்கு ஆச்சாரியார் ஒரு குறியீடு. “மருந்தும் மரணமும் இணை கலந்த ஒரு பெரிய உலகம். மரணம் நுழைந்துவிட்டால் அங்கு மருந்துக்கு எந்த மதிப்பும் இல்லை. என்றாலும் மரணத்துக்கு மருந்தைக் கண்டால் எப்போதுமே ஒரு பயம்தான். மருந்தின் உலகத்தில் மரணம் ஒரு கழுகைப்போல் வட்டமிட்டுக்கொண்டேஇருக்கும். இறுதியில் வெற்றி பெறுவது மரணம்தான்”...(ப.344) என்ற சொல்லாடல்கள் நாவலின் மையம். உடல்களை முழுமையாகப் படித்த மருத்துவர்கள் தங்களது உடல்களைக் காப்பாற்ற முடியாது நோய்க்கிருமிகளால் சிதைவது மருத்துவத்துறையின் யதார்த்தம். மருத்துவத்துறையின் ஜாம்பவான், ஆச்சாரியாரால் தன் நோயையும் மரணத்தையும் தன்னிலிருந்து விலக்கமுடியவில்லை என்ற புனைவுத்தருக்கம் நுட்பமானது. மனிதன் சேகரிக்கும் புகழ், பணம், அதிகாரம் என்னும் மாய பிம்பங்களைக் கிருமிகள் கலைத்துவிடுகின்றன. அந்தப் பிம்பம் அவர்கள் குடும்பத்தையும் அமைதிப்படுத்துவதில்லை. ஆச்சாரியாரின் மகளும் பயிற்சி மருத்துவருமான இலட்சுமி, தேவதாஸைக் காதலித்துவிட்டுத் தந்தையின் அதிகாரக் கோடுகளைத் தாண்டமுடியாமல் விருப்பமற்ற ஆணை மணந்து, முதல் புணர்வை பலாத்காரமாக உணரும் எத்தனையோ இந்தியப் பெண்களின் பிரதிநிதியாகிப் போகிறாள். தேவதாசும் மனப் பிறழ்விற்குள்ளாகிறான். மருத்துவர்களின் பணிகளும் சரிவுகளும் விரிவாக எழுதப்பட்டுள்ளதால் அவை மாறுபட்ட அனுபவங்களைத் தருகின்றன.

காரிருளில் மூழ்கிக் கிடக்கும் மருத்துவமனையின் அறைகளுக்குள் உடல்வாதைகளால் விழித்துக்கொண்டிருக்கும் நோயாளிகளின் பயங்களும் ஆசைகளும் கடும் துயர்களாகப் பெரும் கட்டடங்கள் முழுதும் கசிந்துகொண்டிருக்கின்றன. வயிற்றுவலியால் இரவெல்லாம் ஓலமிடும் ஜான் பல்தேவ் மிர்ஸா ஒருமுறைகூட அம்மாவையோ, உறவினர் பெயரையோ அழைக்காது அநாதையாக மரணிப்பவன். என்ன நோயென்றே அறியாது நோயளியான ஒருவனின் கதை, (200நோய்களுக்கு மருத்துவத்துறையில் மருந்தில்லையாம்) பைபிளைத் திறந்தாலும் சாத்தான் வெளிக்கிளம்புவதைத் தரிசிக்கும் ஒரு சீக்காளியின் பரிதாபம் என உருக்குலையும் உடல்களிலிருந்து கசப்புகள் பொங்கிப் பிரவகிக்கின்றன. வயிற்று வலியுடன் வரும் மூதாட்டி தொப்புளோடு தங்க நகைகளை மூட்டையாகக் கட்டித் தொடைகளுக்கிடையே தொங்கவிட்டிருக்கிறாள். தனது இறப்புச் சடங்கிற்கு இது இல்லையென்றால் என் பிள்ளைகள் என்னை அழுகிய பிணமாக விட்டுவிடுவார்கள் என்று அவள் அரற்றுவது முதுமையின் அவலம். கணவனால் காயப்படுத்தப்பட்ட இரவுகளில் தன்னை நகைகளால் அலங்கரித்து கண்ணாடிமுன் பேசும் டாக்டர் ஆச்சாரியாவின் மனைவி இராணியம்மாளின் உளச்செயல்பாட்டை எப்படிப் புரிந்துகொள்வது. பெண்கள் தங்கள் சிக்கல்களுக்கு தங்கம் தீர்வாக அமையும் என்று நம்பி வாழும் நம் சமூக அமைப்பு எத்தகையது?. மூக்கிலும் மூத்திரப் புரைகளிலும் சொருகப்பட்ட குழாய்களுடன் வாந்தியிலும் மலத்திலும் நீந்திக்கிடக்கின்றன துயர்கள். போர்வையால் மூடப்பட்டு வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களில் கிடத்தப்பட்டிருக்கும் சலனமற்ற உடல்கள், நீக்கமற நிறைந்திருக்கும் மருந்தின் நெடி, சிதறிக்கிடக்கும் மருத்துவக் கழிவுகள், இரத்தக் கவிச்சிகள், பேயாக இயங்கும் ஆயாக்கள், மருத்துவமனை முழுதும் பதற்றத்துடன் அலைந்து கொண்டிருக்கும் உறவினர்கள் என இந்தியாவின் நலிந்துபோன மருத்துவமனைகளின் மாதிரி, இக்காட்சிச் சித்தரிப்புகள்.

குறிப்பாகப் பிரசவ வார்டு பற்றிய விவரணைகள் படிப்பவர்களை நெருடச்செய்வன. பாதுகாப்பற்ற மருத்துவ அறைகளிலும் படுக்க இடமில்லா வராண்டாக்களிலும் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகளின் ஓலங்களும் நின்று பிதுக்கித்தள்ளும் பிரசவங்களும் மனதைப் பிசைவன. அகல வைத்த கால்களுக்கிடையே கனமான ஏதோவொரு பொருள் போன்று சொத்தென்று விழும் சத்தங்களும் கத்திகளால் அவசரகதியில் பிளக்கப்படும் கர்பப்பைகளும் மெல்ல வாய்பிளக்கும் முட்டிய வயிறுகளும் கொப்புளிக்கும் பச்சை இரத்தமும் படிப்பவர் மனதில் கலவரத்தை ஏற்படுத்துவன. மருத்துவம் என்ற பேரில் உடல் சின்னாபின்னப்படுத்தப்படும் கூடங்களாகிப் போய்விட்டன மருத்துவமனைகள். மருத்துவ வாழ்வு இங்கு ஆவணமாக்கப்பட்டுள்ளது. பெண் ஈற்றெய்தபின் ஆண் புணர்வதற்கேற்ப பிறப்புறுப்பை ஒழுங்குபடுத்தும் டாக்டர் தனுஜா “இத்தனை நேரம் நான் செஞ்சதெல்லாம் உன் குழந்தைக்காக இனிமே செய்யப்போறது உன்னோட புருஸனுக்காக” என்றுரைப்பது பெண்ணுடல் சிதையும்போதும் ஆணுக்காகவே தயாரிக்கப்படுகிறது என்பது கசப்பான உண்மைதான். உடல்சிதைவுகளைப் பற்றிய பல பகுதிகள் அப்பட்டமாக எழுதப்பட்டிருந்தாலும் அதற்கெதிர்நிலையில் வைத்து உடல் உறுப்புகளின் ஆற்றல்களும் விதந்துரைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளங்கையளவே இருக்கும் கர்பப்பை நெஞ்சுவரை விரிந்து பெருகும் ஆச்சர்யம், இரத்தமும் சதையுமாகிப்போன மூளையை லட்சுமி தொட்டு ‘வெர்ஜின் டச்’ என்பது போன்ற பல பகுதிகள் ஆசிரியரின் உடலியல் குறித்த துல்லியப் பார்வையைக் காட்டுகின்றன. உடல் உறுப்புகள் குறித்த விவரணைகள் தூலமாக அமைந்திருக்கின்றன. இது வாசகனை அவனது உடல்லுக்குள் உள்நோக்கிப் பார்க்கத் தூண்டும். வாசகன் வரிகளுக்கு ஊடாகப் பயணித்து உடலின் உள்ளுறுப்புகளுக்குள் நடமாடத் தொடங்கிவிடும் அனுபவம் நாவலில் விரவிக் காணப்படுகிறது.

கடைநிலை ஊழியர்களின் பணிகுறித்து நாவல் வரையும் உலகம் அலாதியானது. சடலங்களை இழுத்துப்போட்டு சுத்தம் செய்து பிணவறையையே இருப்புக் கூடமாக்கி உயிர் வாழ்கிறான் சோனா. மண்டையோட்டைத் தேங்காயை உடைப்பது போன்று உடைத்து மூளையை நோண்டி எடுப்பது அவனது அன்றாடத்தொழில். அதிலிருந்து அவன் விரும்பினாலும் விலகமுடியாதவாறு தனது வாழ்வைச் சடலங்களோடு தகவமைத்துக்கொண்டுவிட்டான். ஓய்வில்லாமல் தரைகளைத் துடைத்து, சாக்குகளில் குப்பைகளைச் சேகரித்து, உலவும் போபட், கோணிப்பைகளுடன் சதா அலைந்துகொண்டிருப்பவனாக வடிவுகொண்டுள்ளான். மேரியின் கள்ளங்கபடமற்ற தாதிப்பணி, இறை நம்பிக்கைமிக்கவளானாலும் சக தாதியும் தோழியுமான குஞ்சம்மாளின் ஆசைகளுக்குத் தன்னை, தனது உடலை இசைந்து கொடுக்கும் நட்பிற்குரியவள். குஞ்சம்மாள் பெருங்குற்றங்கள் இழைத்தபோதும் மேரி இறுதிவரை அன்பு பாராட்டுபவளாகவேயிருக்கிறாள். தொழிலதிபர், கணவன், சப்இன்ஸ்பெக்டர், மேரி எனப் பலர் வழியில் தனது காமத்தைக் கடக்க முயல்கிறாள் குஞ்சம்மா. ஆணுலகம் ஏற்படுத்தும் நெருக்கடிகளால் தனது குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்துச் சிறைதண்டனை பெறுகிறாள். சிறையிலிருந்து வெளிவந்து இயல்புமாறாமல் அவள் வாழமுற்படுவது வாழ்வுதரும் ஆச்சர்யங்கள். குஞ்சம்மாள் வார்ப்பு இந்நாவலில் நன்கு கூடிவந்துள்ளது. வாட்ச்மேன் பியாரேலால் நூற்றுக்கணக்கான சைக்கிள்களை ஒழுங்குபடுத்திக் கசங்குபவன். களப்பலிக்காக தவளைகளைக் கூட்டம் கூட்டமாகப் பராமரித்து வாழும் நிலையில் ஒருவன் என விளிம்புக்கதையாடல்கள் நுட்பமாக கவனப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றைய நவீனச் சமூகத்தில் மருத்துவமனையும் மருத்துவர்களின் பணியும் எத்தகையது? எந்த அறமதிப்பீட்டில் அணுகுவது? என்ற கேள்விகளுக்கு எதிர்வினையாற்றியுள்ளது நாவல். இதில் வரும் பெரும்பாலான மருத்துவ மாந்தர்கள் அதிகாரமிக்கவர்களாக, சுயநலவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். நாவல் முழுமையும் மருத்துவமனை குறித்த ஒரு விமர்சனம் எள்ளலாக அமைந்துகிடப்பது நாவலின் பலம். எப்பொழுதும் சம்பள உச்சவரம்புகளைச் சுற்றி அமையும் மருத்துவர்களின் உரையாடல்கள் அவர்களது தொழில்பற்றைக் காட்டுகின்றன. ‘அறிவுஜீவிங்க எருமைமாடுங்க’ என்ற லட்சுமியின் சொற்கள் இங்கு ஆழமானவை. பூக்கோ மருத்துவமனை, சிறைச்சாலைகள் அதிகாரவெளிகளாக இயங்குகின்றன என விமர்சிக்கிறார். இந்நாவல் அவற்றைக் கதையாடல்களாகப் புனைந்துள்ளது. நோயாளிகள் இராணுவத்திற்கு ஆளெடுப்பதுபோல தரம்பிரிக்கப்பட்டு பச்சைச்சீருடை வழங்கி, தனித்தனி எண்களாலே அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு ஓர் அமைப்புக்குள் அவர்களை, ஒழுங்குபடுத்தி அதற்கேற்ப ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதென்பது சிறைச்சாலைக்கு நிகரான ஒரு செயல்பாடாகத்தானிருக்கிறது. நோயாளிகளை வரிசையில் நிற்கவைத்து, மருத்துவர்களை வழிபாட்டுக்குரியவர்களாக்கி மருத்துவத்தொழில் புனிதமாக ஆக்கப்பட்டுள்ளதை நாவல் தொட்டுச்செல்கிறது. மருத்துவமனையில் நுட்பமான அதிகாரவெளி இயங்குவதை நாவலின் சில பகுதிகள் காட்டுகின்றன. மருத்துவப்பணிசார்ந்து ஒரு மாற்று உரையாடலுக்கு இப்பகுதிகள் தளம் அமைத்திருக்கின்றன. டாக்டர் வரும் நேரத்திற்கு முன்பாகவே நோயாளிகள் வாயைத்திறந்து வைத்திருக்கின்றனர். தெர்மாமீட்டரை முரட்டுத்தனமாக நோயாளிகளின் வாய்க்குள் வைத்து அழுத்துகின்றனர். தன்னைச் சுதந்திரத் தன்னிலைகளாகக் கருத உரிமையில்லாத நோயளிகளும் மாணவர் சமூகமும் மருத்துவ அமைப்பில் சூழ்நிலைக் கைதிகளாக, அடிமைகள் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொருள் இழப்பு, பழிவாங்கப்படுதல், பாலியல் சோரம், அவமானங்கள் இவற்றை வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வேண்டியதுதான் இன்றைய நிலை. 'நாயைவிட மோசமான நாய்ங்க’ (ப. 53) என்ற ஆசிரியரின் வசைகளை ஏற்றுக்கொண்டு ஆசிரியர்கள்முன் குலைந்து நிற்கவேண்டியதுதான் மாணவர்களின் கடமை. நோயாளியின் அடிப்படையான கேள்விகளைக்கூட மருத்துவர்கள் உதாசீனப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்வதுதான் நோயாளிகளின் கடமை.

மருத்துவக்கூடங்களைச் சுற்றிப் படரும் பல நிகழ்வுகளை ஆங்காங்கே அமானுஷ்யத்தன்மையில் எழுதியிருப்பது நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகிறது. எழுத்துகளற்ற புத்தகத்திலிருந்து கண்கள் திறப்பது, மேஜையில் படுத்திருக்கும் சடலம் எழுந்து கண்ணீர் உதிர்ப்பது, தன் உடலிலுள்ள காயங்களைப் பார்த்து அழுவது, உடலிலிருந்து இரத்தம் பீய்ச்சுவது போன்றவை மீமெய்ப் புனைவுகள். இரவுகளில் சடலங்கள் எழுந்து தங்களின் துயரங்களை உரைப்பதோடு, இரத்த வெள்ளத்தில் சடலங்கள் பிரேத கானம் பாடி ஆடுவதென மரணத்திற்குப்பின்னான மர்மங்களையும் சூட்சுமங்களையும் எழுத முற்பட்டிருப்பது சிறப்பு. உயிர்களைக் காவுவாங்க எல்லா இடங்களிலும் உருமாறித் திரிந்து கொண்டிருக்கும் மரணதேவனை அரூபமாகக் காட்டியுள்ளது நாவல். மருத்துவமனையில் மரணிக்கப் போகும் நோயாளிகளின் முன் அரூபி (எமன்) தோன்றி அமைதியாக உலவுகிறான். இங்மர் பெர்க்மெனின் ஜிலீமீ ஷிமீஸ்மீஸீtலீ ஷிமீணீறீ படத்தில் பிளேக் நோய் தாக்கி இறக்கப்போகும் மனிதர்களை இழுத்துச் செல்ல, அவர்களைத் தொடர்வதும் அவர்களோடு பகடையாடுவதுமான மரணதேவனை நினைவுறுத்துகிறது இது. நீக்கமற எங்கும் மீந்து கிடக்கும் சாவின் வெளியை மையமாகக் கொண்டு சுழலும் இவ்வாழ்வை மிகைபுனைவுத் தன்மையிலே எழுத முடியுமென்று தோன்றுகிறது.

விதவையின் மரணத்திலும் காட்டாற்றின் பேரழிவிலும் தொடங்கும் நாவல் இறுதியில் குஞ்சம்மாள் புதைத்த குழந்தையை, மேரி தோண்டியெடுத்துப் பாலூட்ட, அதைப் பார்த்து யமுனை பெருமூச்சுவிடுவதாக முடித்திருப்பது அற்புதம். மரணம் ஜ் பிறப்பு என்ற இரண்டு முனைகளுக்கிடையேயான மானுடச் சுழற்சியை மையப்படிமமாக்கி அதற்குப் பின்புலமாக ஆற்றைச் சித்திரித்திருப்பது இந்நாவலின் முக்கிய அம்சம். மரணத்தில் தொடங்கிப் பிறப்பில் முடியும் அகிரா குரசேவாவின் ஸிணீsஷீனீணீஸீ திரைப்படத்தில் விறகு வெட்டியால் கொலையாளி யார்? என்னும் உண்மையை இறுதிவரை அறிய முடியாது, மானுடம் படர்த்தும் பொய்மைகளினால் அவநம்பிக்கையே அவனது வாழ்வாகிப்போனாலும் இறுதியில் கானகத்தில் கண்டெடுக்கப்பட்ட சிசுவை வளர்க்க அந்த விறகுவெட்டி அதை நம்பிக்கையுடன் எடுத்துச் செல்வதும் மருந்து நாவலில் கன்னி மேரி குழந்தைக்குப் பாலூட்டுவதும் உயிர் வாழ்தலின் ஆதார இச்சைகள். அவ்விச்சைகளே மானுடத்தை வாழ நிர்பந்திக்கின்றன. பெரும் சரிவுகளிலும் அவமானங்களிலும் வாழ்வு தூர்ந்து போனாலும் மனிதன் வாழப்போராடுவதே வாழ்வின் ஆதுரம். அதுவே உயிரியங்கியலின் ஆதார இச்சையும்கூட. இந்த இச்சைக்காக வாழப் போராடும் மனிதத்திரள்களின் பாடுகளையும் துயர்களையும் இந்நாவல் கலையாக்கியுள்ளது.

நாவலின் பலவீனங்களாக சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. தாராளமயத்திற்குப்பின் மருத்துவமனைகள் நட்சத்திர ஹோட்டல்களாக வடிவம் கொண்டுள்ளன. இந்தியாவில் பணம் கொழிக்கும் தொழில்களில் மருத்துவத் தொழில் முதன்மையானது. பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் மருந்து வியாபாரிகளும் மருத்துவத் தொழிலை நிர்ணயிக்கும் சக்திகளாக வலம் வருகின்றனர். அவர்களது தயவு தாட்சணையைப் பொருத்தே ஒரு நாட்டில் நோயாளிகளின் நிலை தீர்மானிக்கப்படுகின்றது. காலனியம் அமைத்துக்கொடுத்து அலோபதி மருத்துவம் பெரும் நிறுவனமாகிப்போய் வியாபாரமாகிவிட்ட நிலையில் அங்கு தொழில்புரியும் மருத்துவர் பணிகளும் மனிதாபிமானமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் அலோபதி மருத்துவத்தைப் பின்பற்றும் மருத்துவமனைகள், இந்தியாவில் பெரும் கொள்ளைக்கூடங்களாக உருமாறி வருகின்றன. இவை குறித்த எந்த ஒரு குறிப்பும் நாவலில் இல்லை. அலோபதி மருத்துவமுறைகள் இன்று உலகம் முழுவதும் மறுபரிசீலனைக்கு உள்ளாகி வருகின்றன. பாரம்பரிய மரபு வழிப்பட்ட அந்தந்த நிலங்களுக்கேற்ற தாவரங்கள், உணவுமுறைகள், தட்பவெப்பம் போன்ற பின்புலங்களில் மருத்துவமுறைகள் பேசுபொருளாகி வருகின்றன. இவற்றை நாவல் தொட்டுக் காட்டியாவது சென்றிருக்கலாம். பல நூற்றாண்டுப் பாரம்பரியமிக்க இந்திய மருத்துவமுறைகளான மூலிகை, ஆயுர்வேதம், சித்தா போன்றவை குறித்து விவாதிப்பதற்கு ஏற்ற எளிய வழிகளைப் புனைவுப்பரப்பு தன்னகத்தே கொண்டிருந்தாலும் அவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மருத்துவமனைகளின் அமைவிடங்களுக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு, நகரத்திற்கும் மருத்துவமனைக்கும் உள்ள நெருக்கங்கள் எளிய மனிதருக்கும் இந்நகர்சார் நவீனக் கட்டடங்களுக்கும் உள்ள உறவற்றநிலை எதுவும் விவாதிக்கப்படவில்லை. எளிய மனிதர்களுக்கு இக்கட்டடங்களின் அமைப்பே அச்சத்தைப் படர்த்துகிறது. மருத்துவக் கட்டடங்களுக்கு வெளியே புனைவு சிறிதும் நகரவில்லை.

நோயாளிகளோடு கட்டடங்களில் வெளிப்பகுதிகளிலும் வராண்டாக்களிலும் இரவுகளைக் கழிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உளைச்சல்கள் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் தடைகள், குழப்பங்கள், மனப்பதற்றங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. குறிப்பாகப் பொருளாதார நெருக்கடிகள் குறித்தாவது குறைந்தபட்சம் பேசியிருக்கலாம். ஒரு நோயாளியைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தின் குழந்தைமுதல் பெரியவர்வரை படும் துயரம் கடுமையானது. ஒரு கிருமி அல்லது ஒரு கொசு உருவாக்கும் பெரும்நோய் ஒரு குடும்பத்தையே நடுத்தெருவிற்குக் கொண்டுவந்துவிடுகிறது. கடனாளிகளாக ஊரைவிட்டு ஓடும் குடும்பங்கள், குழந்தைகளின் கல்வித்தடைகள், முதியவர்களின் கசங்கல்கள் என நோய் வரையும் குடும்பச்சிதைவுகள் விரிவானவை. இதன் தாத்பர்யங்கள் எள்ளளவும் இந்நாவலில் இல்லை. இதனால் இந்நாவல் முழுமையடையாது மருத்துவ வாழ்வின் ஒரு பகுதியில் மட்டும் சுழன்றுவிட்டு நின்று விடுகிறது.

சுதந்திர இந்தியாவின் மருத்துவ ஊழல்கள் புகழ்பெற்றவை. பணி நியமனங்கள், கட்டடவேலைகள், மருந்துப் பரிமாற்றங்கள், வாங்குவது விற்பது என அனைத்திலும் சுரண்டல் புரையோடியுள்ளது. அரசுச் செயல்பாடு குறித்து நாவல் பெரும் கள்ளமௌனம் சாதிக்கிறது. ஊடகங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் இடையே நடக்கும் இரகசிய பேரங்கள் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. பலமடங்கு விற்கப்படும் மருந்துப் பொருள்கள், போலி மருந்துகள், எளிய நோயாளிகளின் உயிர்களோடும் உடல்களோடும் விளையாடும் வியாபாரிகளின் மோசடிகள் எதையும் பொருட்படுத்தவில்லை. இவையெல்லாம் பட்டவர்த்தனமாக அனைவருக்கும் தெரிந்த உண்மைகள். மருத்துவராக இருக்கும் ஆசிரியர் இவற்றை முழுமையும் அறிந்தும் தவிர்த்துவிட்டாரா எனத் தெரியவில்லை. மருந்து குறித்த பல்வேறுபட்ட பரிமாணங்களைப் பிந்திய முதலாலாளிய சூழலில் வைத்து விவாதித்திருந்தால் நாவலுக்கு வேறொரு பரிமாணம் கிட்டியிருக்கும். அப்பொழுதுதான் மருந்து என்ற தலைப்பு பொருந்தி வரும். எனவே, மருந்து என்பதைவிட மருத்துவமனை என்ற தலைப்பே பொருத்தமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. தாவித் திரியும் முயல் தொகுதிகள், காலிமனைக் கூண்டுகளில் அடைபட்ட நாய்கள், சுண்டெலிகள், பன்றிகள் போன்ற சிற்றுயிர்கள் அலோபதி மருத்துவமனைகள் என்னும் பேரிருப்பைத் தக்கவைக்கக் கொடூரமாகச் சிதைக்கப்படும் சூழல் மருத்துவச் சீரழிவுகளின் ஒரு பகுதி. இவற்றை ஓரிரு இடங்களில் தொட்டுச்செல்கிறது நாவல். இதை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். கானுயிர்களும் உலகறியா சாமான்ய மனிதர்களையும் மருத்துவத்துறைச் சோதனை உடல்களாகச் சிதைத்து வரும் செய்திகள் நிறைய வந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு படைப்பாளியின் கவனம் அவற்றின் மீதும் குவிவது இயல்பாக இருக்கவேண்டிய ஒன்று. இவையெல்லாம் இந்நாவலின் பின்னடைவுகள்.

இருத்தலுக்கான போராட்டங்கள் உணர்வெழுச்சி மிக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன. மருத்துவமனை குறித்த நிகழ்வுகள் எழுத்தாளரின் தொழில் அனுபவத்தில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விரிவாக வரையப்பட்டுள்ளன. உடல்சார் கையறுநிலை உரையாடல்கள் எள்ளல் தொனியில் நாவல் முழுவதும் இழைந்துகொண்டிருக்கின்றன. இருத்தலியல் சித்தரிப்புகள், தத்துவார்த்தக் கூறுமுறைகள், மிகைபுனைவுத் தன்மைகள் (கேரள நவீனத்துவப் (ஆதுனிகத) படைப்பாளிகளில் மிக முக்கிய ஆளுமையாகப் பரிணமித்திருப்பவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா. இவரது படைப்புகள் மலையாள எழுத்துலகில் மட்டுமல்லாது தமிழ் இலக்கியப்பரப்பிலும் சமீபமாகக் கவனத்தைப் பெற்று வருகின்றன. மருத்துவராகப் பணிபுரியும் புனத்தில் குஞ்ஞப்துல்லா கோழிக்கோடு மாவட்டம் வடகராப்பள்ளிக்கருகே உள்ள ஒஞ்சியத்தில் பிறந்தவர் சிறுகதை, நாவல், பயணக்கட்டுரைகள், அனுபவக்குறிப்புகள் எனத் தன் எழுத்தின் எல்லைகளை விஸ்தரித்து வருகிறார். சாகித்ய அகாதெமி, முட்டத்து வர்க்கி விருது, விஸ்வதீபம் விருது போன்றவற்றைத் தன்னுடைய எழுத்து வாழ்க்கைக்காகப் பெற்றவர். இவரது மீஸான்கற்கள், கண்யாவனங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழில், தற்போது வெளிவந்திருக்கும் நாவல் ‘மருந்து’. இவரது படைப்புகளில் படைப்பூக்கம் மிகுந்த ஆக்கம் இது.

யமுனைக் கரையில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ஒரு பொது மருத்துவமனையின் அன்றாட நிகழ்வுகளே, மருந்து நாவலின் மைய எடுத்துரைப்பியலாக விரிவு கொண்டுள்ளன. நவீனச் சமூகம் தனது தேவைக்காகத் தோற்றுவித்துக்கொண்ட அறிவியல் தொழிற்பாடு மருத்துவமனை. அது மனிதனது சுயநலத்திற்காகவும் பொருள் சார்ந்த பெரு விருப்பத்திற்காகவும் தனிப்பட்ட பேராசைகளைப் பிரதிபலிக்கும் இடமாகிப் போயிருக்கும் அவலங்களைக் கச்சாப்பொருளாக்கியுள்ளது இந்நாவல். மருத்துவமனையை மையமிட்ட வாழ்வுசார்ப் புனைவுகள் குறைவு. சட்டென்று நினைவில் புரளக்கூடிய படைப்புகளான தாராசங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ (வங்க நாவல்), செகாவின் ‘பதினாறாம் நம்பர் வார்டு (சிறுகதை), அலெக்சாண்டர் சோலிசெனிட்சின் ‘கேன்சர் வார்டு’, நகுலனின் ‘வாக்குமூலம்’, சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். அந்த வரிசையை முன்னகர்த்தும் படைப்பாக்கமாக ‘மருந்து’ அமைந்திருப்பது கவனத்திற்குரியது.

நாவலின் தொடக்கம் அதீதப் புனைவுத்தன்மையுடையது. முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த ஒரு விதவையின் கிளிகள் நோய் தாக்கி இறந்ததைத் தொடர்ந்து அவளும் மரணத்தைத் தழுவுகிறாள். உருவும் அருவுமற்ற மாயமனிதன் ஒருவன் விதைகள் தேடி ஊருக்குள் நுழைந்து இரவும் பகலும் உயிர்களைக் குடிக்கின்றான். விதவையைத் தொடர்ந்து கிராம மனிதர்கள் அனைவரையும் காலரா வடிவில் அவன் அழிக்க, இறுதியில் பெருவெள்ளம் அனைத்தையும் வாரிச்சுருட்டிச் சென்றுவிடுகிறது. இரண்டு குடம் சாராயத்துடன், இரண்டு கடையர்கள் மட்டுமே எஞ்சுகின்றனர். யு.ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’, காம்யுவின் ‘பிளேக்’ ஆகிய நாவல்கள் காட்சிப்படுத்திய பெரும் நோய்ச் சித்திரத்தை 'மருந்து'வின் தொடக்கப்பகுதி கிளர்த்துகிறது. நோய் உடல்களை மட்டுமல்ல உலகில் மனிதவாடையைக்கூட உறிஞ்சிவிடும் வல்லமைபெற்றதென அவதானிக்கச் செய்கிறது இப்பகுதி. மண்ணில் புதைந்த கிராமத்தின் மணல்வெளிக்குமேல், கட்டப்பட்ட பெருங்கட்டடத்தில் நாவலின் பிந்திய கதைநிகழ்வுகள் பின்னப்படுகின்றன.

மருத்துவப் படிப்பிற்காக அப்பெரும் வளாகத்தில் நுழையும் தேவதாஸ், லட்சுமி இருவரது தோழமையை மையமிட்டு நகரும் கதாச்சுருள் அவர்களின் படிப்பு முடியும் தறுவாயில் நிறைவடைகிறது. தலைவலி முதல் பாலியல்வரை பதினாறு கட்டடங்களில் நடக்கும் மருத்துவ நிகழ்வுகளை நுண்ணிய விவரிப்புத்தன்மையில் பொழிந்துள்ளது நாவல். அப்பொழிதலிற்குப் பின்னிருக்கும் வாழ்வியல் நெருக்கடிகளும் இருத்தலுக்காக நடைபெறும் போராட்டங்களும் அவஸ்தைகளும் பயங்கரமானவை. மரணத்தையும் புலன்களின் நிலையாமையையும் மருத்துவத்துறை கட்டமைக்கும் நுண்ணரசியல் செயல்பாடுகளையும் இணைத்து கிருமிகளால் எளிதில் நசிவடைந்துவிடக்கூடிய இவ்வாழ்வு பெறும் மதிப்பு என்ன? என்ற கேள்வியை முன்வைத்து நகர்ந்துள்ளது மருந்து. கதாநிகழ்வுகள் பல்வேறு சம்பவங்களாகக் கோர்க்கப்பட்டுள்ளன. நட்பு, காதல், தந்தையின் ஆதிக்கம், ஊழல், உடல் வேட்கையைத் தணிக்க அலையும் உடல்கள், அதிகார மீறல்களால் அலைக்கழிக்கப்படும் தாதிகள், நோயாளிகளின் வாதைகள் எனச் சம்பவங்களை உணர்ச்சிகளின் சுழிப்புகளாக்கி லாவகமாகக் கையாள்வதோடு மருத்துவ சக்திகள் தனக்குக் கீழே இயங்கும் உதிரிகள்மீது அதிகாரம் செலுத்தும் இழிநிலைகளையும் கிளைக்கதைகளாகக் கட்டமைத்துள்ளது.

உடலியல் மருத்துவர் ஸ்ரீகுமார், டாக்டர்கள் க்வாஜா, தனுஜா, ஹெலன்சிங், ஹஸன், எக்ஸாமினர் சௌத்திரி, நுட்ப அறிவுத்திறம் பெற்ற சாந்தகுமார் ஆகிய துறைசார் மருத்துவர்களின் பின்னணிகளைப் பல்வேறு தளங்களில் பதிவு செய்கிறது. தனது சாதுப்பிராணிக்குக் கொடுக்கவேண்டிய மருந்தை, சோதிக்கத் தானே குடித்து உயிரிழந்து ஆய்விற்கு எலும்புக்கூடாய் நிற்கும் டாக்டர் ஹஸன், கஸல் கேட்டு அயற்சியை மறக்கும் டாக்டர் தனுஜாவின் கடும் உழைப்பு முன்னுதாரணமானவைகள். பிணவறையில் சிதைந்த உடல்களோடிருக்கும் சட்டர்ஜி, இசைநிகழ்ச்சிகளையும் அழகிய பூந்தோட்டத்தையும் நடத்திவருவது வாழ்வு தரும் முரண். தன் அழகையும் இளமையையும் தனிமையில் உழற்றி வரும் டாக்டர் மேட்ரன் ஹெலன் சிங், மனதில் கசியும் கடந்துபோன காதலை அகற்றமுடியாமல் பெத்தடின் வழி தனது பிரக்ஞையின் நூலிழைகளை முடைந்து நசியும் மருத்துவர். மேஜர் சர்ஜன் ஆச்சாரியார் லஞ்சம், பாலியல் சுரண்டலுடன் ஆதிக்க மனம் படைத்தவர். அறுவைச் சிகிச்சையில் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே ருசிக்கத் தெரிந்தவர். இவ்வெற்றி பிசகும்போது செல்ல வளர்ப்பு நாயை அறுவைசிகிச்சை செய்யும் மனோவியல் சிக்கலுக்குள்ளாகிறார். அலோபதி மருத்துவம் மனிதனை இயந்திரத்தனமாக்கிவிடுகிறது என்பதற்கு ஆச்சாரியார் மாதிரி. மருத்துவத் துறை தந்த புகழ் அவரை மிருக நிலைக்குக் கொண்டு செல்கிறது. தனது நோய்க்கு, பிறர் மருத்துவம் பார்ப்பதைக்கூட ஏற்றுக் கொள்ளமுடியாமல் நோய்முற்றி மரணிக்கிறார். மருந்தும் நோயைக் குணப்படுத்தாது என்பதற்கு ஆச்சாரியார் ஒரு குறியீடு. “மருந்தும் மரணமும் இணை கலந்த ஒரு பெரிய உலகம். மரணம் நுழைந்துவிட்டால் அங்கு மருந்துக்கு எந்த மதிப்பும் இல்லை. என்றாலும் மரணத்துக்கு மருந்தைக் கண்டால் எப்போதுமே ஒரு பயம்தான். மருந்தின் உலகத்தில் மரணம் ஒரு கழுகைப்போல் வட்டமிட்டுக்கொண்டேஇருக்கும். இறுதியில் வெற்றி பெறுவது மரணம்தான்”...(ப.344) என்ற சொல்லாடல்கள் நாவலின் மையம். உடல்களை முழுமையாகப் படித்த மருத்துவர்கள் தங்களது உடல்களைக் காப்பாற்ற முடியாது நோய்க்கிருமிகளால் சிதைவது மருத்துவத்துறையின் யதார்த்தம். மருத்துவத்துறையின் ஜாம்பவான், ஆச்சாரியாரால் தன் நோயையும் மரணத்தையும் தன்னிலிருந்து விலக்கமுடியவில்லை என்ற புனைவுத்தருக்கம் நுட்பமானது. மனிதன் சேகரிக்கும் புகழ், பணம், அதிகாரம் என்னும் மாய பிம்பங்களைக் கிருமிகள் கலைத்துவிடுகின்றன. அந்தப் பிம்பம் அவர்கள் குடும்பத்தையும் அமைதிப்படுத்துவதில்லை. ஆச்சாரியாரின் மகளும் பயிற்சி மருத்துவருமான இலட்சுமி, தேவதாஸைக் காதலித்துவிட்டுத் தந்தையின் அதிகாரக் கோடுகளைத் தாண்டமுடியாமல் விருப்பமற்ற ஆணை மணந்து, முதல் புணர்வை பலாத்காரமாக உணரும் எத்தனையோ இந்தியப் பெண்களின் பிரதிநிதியாகிப் போகிறாள். தேவதாசும் மனப் பிறழ்விற்குள்ளாகிறான். மருத்துவர்களின் பணிகளும் சரிவுகளும் விரிவாக எழுதப்பட்டுள்ளதால் அவை மாறுபட்ட அனுபவங்களைத் தருகின்றன.

காரிருளில் மூழ்கிக் கிடக்கும் மருத்துவமனையின் அறைகளுக்குள் உடல்வாதைகளால் விழித்துக்கொண்டிருக்கும் நோயாளிகளின் பயங்களும் ஆசைகளும் கடும் துயர்களாகப் பெரும் கட்டடங்கள் முழுதும் கசிந்துகொண்டிருக்கின்றன. வயிற்றுவலியால் இரவெல்லாம் ஓலமிடும் ஜான் பல்தேவ் மிர்ஸா ஒருமுறைகூட அம்மாவையோ, உறவினர் பெயரையோ அழைக்காது அநாதையாக மரணிப்பவன். என்ன நோயென்றே அறியாது நோயளியான ஒருவனின் கதை, (200நோய்களுக்கு மருத்துவத்துறையில் மருந்தில்லையாம்) பைபிளைத் திறந்தாலும் சாத்தான் வெளிக்கிளம்புவதைத் தரிசிக்கும் ஒரு சீக்காளியின் பரிதாபம் என உருக்குலையும் உடல்களிலிருந்து கசப்புகள் பொங்கிப் பிரவகிக்கின்றன. வயிற்று வலியுடன் வரும் மூதாட்டி தொப்புளோடு தங்க நகைகளை மூட்டையாகக் கட்டித் தொடைகளுக்கிடையே தொங்கவிட்டிருக்கிறாள். தனது இறப்புச் சடங்கிற்கு இது இல்லையென்றால் என் பிள்ளைகள் என்னை அழுகிய பிணமாக விட்டுவிடுவார்கள் என்று அவள் அரற்றுவது முதுமையின் அவலம். கணவனால் காயப்படுத்தப்பட்ட இரவுகளில் தன்னை நகைகளால் அலங்கரித்து கண்ணாடிமுன் பேசும் டாக்டர் ஆச்சாரியாவின் மனைவி இராணியம்மாளின் உளச்செயல்பாட்டை எப்படிப் புரிந்துகொள்வது. பெண்கள் தங்கள் சிக்கல்களுக்கு தங்கம் தீர்வாக அமையும் என்று நம்பி வாழும் நம் சமூக அமைப்பு எத்தகையது?. மூக்கிலும் மூத்திரப் புரைகளிலும் சொருகப்பட்ட குழாய்களுடன் வாந்தியிலும் மலத்திலும் நீந்திக்கிடக்கின்றன துயர்கள். போர்வையால் மூடப்பட்டு வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களில் கிடத்தப்பட்டிருக்கும் சலனமற்ற உடல்கள், நீக்கமற நிறைந்திருக்கும் மருந்தின் நெடி, சிதறிக்கிடக்கும் மருத்துவக் கழிவுகள், இரத்தக் கவிச்சிகள், பேயாக இயங்கும் ஆயாக்கள், மருத்துவமனை முழுதும் பதற்றத்துடன் அலைந்து கொண்டிருக்கும் உறவினர்கள் என இந்தியாவின் நலிந்துபோன மருத்துவமனைகளின் மாதிரி, இக்காட்சிச் சித்தரிப்புகள்.

குறிப்பாகப் பிரசவ வார்டு பற்றிய விவரணைகள் படிப்பவர்களை நெருடச்செய்வன. பாதுகாப்பற்ற மருத்துவ அறைகளிலும் படுக்க இடமில்லா வராண்டாக்களிலும் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகளின் ஓலங்களும் நின்று பிதுக்கித்தள்ளும் பிரசவங்களும் மனதைப் பிசைவன. அகல வைத்த கால்களுக்கிடையே கனமான ஏதோவொரு பொருள் போன்று சொத்தென்று விழும் சத்தங்களும் கத்திகளால் அவசரகதியில் பிளக்கப்படும் கர்பப்பைகளும் மெல்ல வாய்பிளக்கும் முட்டிய வயிறுகளும் கொப்புளிக்கும் பச்சை இரத்தமும் படிப்பவர் மனதில் கலவரத்தை ஏற்படுத்துவன. மருத்துவம் என்ற பேரில் உடல் சின்னாபின்னப்படுத்தப்படும் கூடங்களாகிப் போய்விட்டன மருத்துவமனைகள். மருத்துவ வாழ்வு இங்கு ஆவணமாக்கப்பட்டுள்ளது. பெண் ஈற்றெய்தபின் ஆண் புணர்வதற்கேற்ப பிறப்புறுப்பை ஒழுங்குபடுத்தும் டாக்டர் தனுஜா “இத்தனை நேரம் நான் செஞ்சதெல்லாம் உன் குழந்தைக்காக இனிமே செய்யப்போறது உன்னோட புருஸனுக்காக” என்றுரைப்பது பெண்ணுடல் சிதையும்போதும் ஆணுக்காகவே தயாரிக்கப்படுகிறது என்பது கசப்பான உண்மைதான். உடல்சிதைவுகளைப் பற்றிய பல பகுதிகள் அப்பட்டமாக எழுதப்பட்டிருந்தாலும் அதற்கெதிர்நிலையில் வைத்து உடல் உறுப்புகளின் ஆற்றல்களும் விதந்துரைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளங்கையளவே இருக்கும் கர்பப்பை நெஞ்சுவரை விரிந்து பெருகும் ஆச்சர்யம், இரத்தமும் சதையுமாகிப்போன மூளையை லட்சுமி தொட்டு ‘வெர்ஜின் டச்’ என்பது போன்ற பல பகுதிகள் ஆசிரியரின் உடலியல் குறித்த துல்லியப் பார்வையைக் காட்டுகின்றன. உடல் உறுப்புகள் குறித்த விவரணைகள் தூலமாக அமைந்திருக்கின்றன. இது வாசகனை அவனது உடல்லுக்குள் உள்நோக்கிப் பார்க்கத் தூண்டும். வாசகன் வரிகளுக்கு ஊடாகப் பயணித்து உடலின் உள்ளுறுப்புகளுக்குள் நடமாடத் தொடங்கிவிடும் அனுபவம் நாவலில் விரவிக் காணப்படுகிறது.

கடைநிலை ஊழியர்களின் பணிகுறித்து நாவல் வரையும் உலகம் அலாதியானது. சடலங்களை இழுத்துப்போட்டு சுத்தம் செய்து பிணவறையையே இருப்புக் கூடமாக்கி உயிர் வாழ்கிறான் சோனா. மண்டையோட்டைத் தேங்காயை உடைப்பது போன்று உடைத்து மூளையை நோண்டி எடுப்பது அவனது அன்றாடத்தொழில். அதிலிருந்து அவன் விரும்பினாலும் விலகமுடியாதவாறு தனது வாழ்வைச் சடலங்களோடு தகவமைத்துக்கொண்டுவிட்டான். ஓய்வில்லாமல் தரைகளைத் துடைத்து, சாக்குகளில் குப்பைகளைச் சேகரித்து, உலவும் போபட், கோணிப்பைகளுடன் சதா அலைந்துகொண்டிருப்பவனாக வடிவுகொண்டுள்ளான். மேரியின் கள்ளங்கபடமற்ற தாதிப்பணி, இறை நம்பிக்கைமிக்கவளானாலும் சக தாதியும் தோழியுமான குஞ்சம்மாளின் ஆசைகளுக்குத் தன்னை, தனது உடலை இசைந்து கொடுக்கும் நட்பிற்குரியவள். குஞ்சம்மாள் பெருங்குற்றங்கள் இழைத்தபோதும் மேரி இறுதிவரை அன்பு பாராட்டுபவளாகவேயிருக்கிறாள். தொழிலதிபர், கணவன், சப்இன்ஸ்பெக்டர், மேரி எனப் பலர் வழியில் தனது காமத்தைக் கடக்க முயல்கிறாள் குஞ்சம்மா. ஆணுலகம் ஏற்படுத்தும் நெருக்கடிகளால் தனது குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்துச் சிறைதண்டனை பெறுகிறாள். சிறையிலிருந்து வெளிவந்து இயல்புமாறாமல் அவள் வாழமுற்படுவது வாழ்வுதரும் ஆச்சர்யங்கள். குஞ்சம்மாள் வார்ப்பு இந்நாவலில் நன்கு கூடிவந்துள்ளது. வாட்ச்மேன் பியாரேலால் நூற்றுக்கணக்கான சைக்கிள்களை ஒழுங்குபடுத்திக் கசங்குபவன். களப்பலிக்காக தவளைகளைக் கூட்டம் கூட்டமாகப் பராமரித்து வாழும் நிலையில் ஒருவன் என விளிம்புக்கதையாடல்கள் நுட்பமாக கவனப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றைய நவீனச் சமூகத்தில் மருத்துவமனையும் மருத்துவர்களின் பணியும் எத்தகையது? எந்த அறமதிப்பீட்டில் அணுகுவது? என்ற கேள்விகளுக்கு எதிர்வினையாற்றியுள்ளது நாவல். இதில் வரும் பெரும்பாலான மருத்துவ மாந்தர்கள் அதிகாரமிக்கவர்களாக, சுயநலவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். நாவல் முழுமையும் மருத்துவமனை குறித்த ஒரு விமர்சனம் எள்ளலாக அமைந்துகிடப்பது நாவலின் பலம். எப்பொழுதும் சம்பள உச்சவரம்புகளைச் சுற்றி அமையும் மருத்துவர்களின் உரையாடல்கள் அவர்களது தொழில்பற்றைக் காட்டுகின்றன. ‘அறிவுஜீவிங்க எருமைமாடுங்க’ என்ற லட்சுமியின் சொற்கள் இங்கு ஆழமானவை. பூக்கோ மருத்துவமனை, சிறைச்சாலைகள் அதிகாரவெளிகளாக இயங்குகின்றன என விமர்சிக்கிறார். இந்நாவல் அவற்றைக் கதையாடல்களாகப் புனைந்துள்ளது. நோயாளிகள் இராணுவத்திற்கு ஆளெடுப்பதுபோல தரம்பிரிக்கப்பட்டு பச்சைச்சீருடை வழங்கி, தனித்தனி எண்களாலே அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு ஓர் அமைப்புக்குள் அவர்களை, ஒழுங்குபடுத்தி அதற்கேற்ப ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதென்பது சிறைச்சாலைக்கு நிகரான ஒரு செயல்பாடாகத்தானிருக்கிறது. நோயாளிகளை வரிசையில் நிற்கவைத்து, மருத்துவர்களை வழிபாட்டுக்குரியவர்களாக்கி மருத்துவத்தொழில் புனிதமாக ஆக்கப்பட்டுள்ளதை நாவல் தொட்டுச்செல்கிறது. மருத்துவமனையில் நுட்பமான அதிகாரவெளி இயங்குவதை நாவலின் சில பகுதிகள் காட்டுகின்றன. மருத்துவப்பணிசார்ந்து ஒரு மாற்று உரையாடலுக்கு இப்பகுதிகள் தளம் அமைத்திருக்கின்றன. டாக்டர் வரும் நேரத்திற்கு முன்பாகவே நோயாளிகள் வாயைத்திறந்து வைத்திருக்கின்றனர். தெர்மாமீட்டரை முரட்டுத்தனமாக நோயாளிகளின் வாய்க்குள் வைத்து அழுத்துகின்றனர். தன்னைச் சுதந்திரத் தன்னிலைகளாகக் கருத உரிமையில்லாத நோயளிகளும் மாணவர் சமூகமும் மருத்துவ அமைப்பில் சூழ்நிலைக் கைதிகளாக, அடிமைகள் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொருள் இழப்பு, பழிவாங்கப்படுதல், பாலியல் சோரம், அவமானங்கள் இவற்றை வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வேண்டியதுதான் இன்றைய நிலை. 'நாயைவிட மோசமான நாய்ங்க’ (ப. 53) என்ற ஆசிரியரின் வசைகளை ஏற்றுக்கொண்டு ஆசிரியர்கள்முன் குலைந்து நிற்கவேண்டியதுதான் மாணவர்களின் கடமை. நோயாளியின் அடிப்படையான கேள்விகளைக்கூட மருத்துவர்கள் உதாசீனப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்வதுதான் நோயாளிகளின் கடமை.

மருத்துவக்கூடங்களைச் சுற்றிப் படரும் பல நிகழ்வுகளை ஆங்காங்கே அமானுஷ்யத்தன்மையில் எழுதியிருப்பது நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகிறது. எழுத்துகளற்ற புத்தகத்திலிருந்து கண்கள் திறப்பது, மேஜையில் படுத்திருக்கும் சடலம் எழுந்து கண்ணீர் உதிர்ப்பது, தன் உடலிலுள்ள காயங்களைப் பார்த்து அழுவது, உடலிலிருந்து இரத்தம் பீய்ச்சுவது போன்றவை மீமெய்ப் புனைவுகள். இரவுகளில் சடலங்கள் எழுந்து தங்களின் துயரங்களை உரைப்பதோடு, இரத்த வெள்ளத்தில் சடலங்கள் பிரேத கானம் பாடி ஆடுவதென மரணத்திற்குப்பின்னான மர்மங்களையும் சூட்சுமங்களையும் எழுத முற்பட்டிருப்பது சிறப்பு. உயிர்களைக் காவுவாங்க எல்லா இடங்களிலும் உருமாறித் திரிந்து கொண்டிருக்கும் மரணதேவனை அரூபமாகக் காட்டியுள்ளது நாவல். மருத்துவமனையில் மரணிக்கப் போகும் நோயாளிகளின் முன் அரூபி (எமன்) தோன்றி அமைதியாக உலவுகிறான். இங்மர் பெர்க்மெனின் The Seventh Seal படத்தில் பிளேக் நோய் தாக்கி இறக்கப்போகும் மனிதர்களை இழுத்துச் செல்ல, அவர்களைத் தொடர்வதும் அவர்களோடு பகடையாடுவதுமான மரணதேவனை நினைவுறுத்துகிறது இது. நீக்கமற எங்கும் மீந்து கிடக்கும் சாவின் வெளியை மையமாகக் கொண்டு சுழலும் இவ்வாழ்வை மிகைபுனைவுத் தன்மையிலே எழுத முடியுமென்று தோன்றுகிறது.

விதவையின் மரணத்திலும் காட்டாற்றின் பேரழிவிலும் தொடங்கும் நாவல் இறுதியில் குஞ்சம்மாள் புதைத்த குழந்தையை, மேரி தோண்டியெடுத்துப் பாலூட்ட, அதைப் பார்த்து யமுனை பெருமூச்சுவிடுவதாக முடித்திருப்பது அற்புதம். மரணம் ஜ் பிறப்பு என்ற இரண்டு முனைகளுக்கிடையேயான மானுடச் சுழற்சியை மையப்படிமமாக்கி அதற்குப் பின்புலமாக ஆற்றைச் சித்திரித்திருப்பது இந்நாவலின் முக்கிய அம்சம். மரணத்தில் தொடங்கிப் பிறப்பில் முடியும் அகிரா குரசேவாவின் Rasoman திரைப்படத்தில் விறகு வெட்டியால் கொலையாளி யார்? என்னும் உண்மையை இறுதிவரை அறிய முடியாது, மானுடம் படர்த்தும் பொய்மைகளினால் அவநம்பிக்கையே அவனது வாழ்வாகிப்போனாலும் இறுதியில் கானகத்தில் கண்டெடுக்கப்பட்ட சிசுவை வளர்க்க அந்த விறகுவெட்டி அதை நம்பிக்கையுடன் எடுத்துச் செல்வதும் மருந்து நாவலில் கன்னி மேரி குழந்தைக்குப் பாலூட்டுவதும் உயிர் வாழ்தலின் ஆதார இச்சைகள். அவ்விச்சைகளே மானுடத்தை வாழ நிர்பந்திக்கின்றன. பெரும் சரிவுகளிலும் அவமானங்களிலும் வாழ்வு தூர்ந்து போனாலும் மனிதன் வாழப்போராடுவதே வாழ்வின் ஆதுரம். அதுவே உயிரியங்கியலின் ஆதார இச்சையும்கூட. இந்த இச்சைக்காக வாழப் போராடும் மனிதத்திரள்களின் பாடுகளையும் துயர்களையும் இந்நாவல் கலையாக்கியுள்ளது.

நாவலின் பலவீனங்களாக சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. தாராளமயத்திற்குப்பின் மருத்துவமனைகள் நட்சத்திர ஹோட்டல்களாக வடிவம் கொண்டுள்ளன. இந்தியாவில் பணம் கொழிக்கும் தொழில்களில் மருத்துவத் தொழில் முதன்மையானது. பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் மருந்து வியாபாரிகளும் மருத்துவத் தொழிலை நிர்ணயிக்கும் சக்திகளாக வலம் வருகின்றனர். அவர்களது தயவு தாட்சணையைப் பொருத்தே ஒரு நாட்டில் நோயாளிகளின் நிலை தீர்மானிக்கப்படுகின்றது. காலனியம் அமைத்துக்கொடுத்து அலோபதி மருத்துவம் பெரும் நிறுவனமாகிப்போய் வியாபாரமாகிவிட்ட நிலையில் அங்கு தொழில்புரியும் மருத்துவர் பணிகளும் மனிதாபிமானமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் அலோபதி மருத்துவத்தைப் பின்பற்றும் மருத்துவமனைகள், இந்தியாவில் பெரும் கொள்ளைக்கூடங்களாக உருமாறி வருகின்றன. இவை குறித்த எந்த ஒரு குறிப்பும் நாவலில் இல்லை. அலோபதி மருத்துவமுறைகள் இன்று உலகம் முழுவதும் மறுபரிசீலனைக்கு உள்ளாகி வருகின்றன. பாரம்பரிய மரபு வழிப்பட்ட அந்தந்த நிலங்களுக்கேற்ற தாவரங்கள், உணவுமுறைகள், தட்பவெப்பம் போன்ற பின்புலங்களில் மருத்துவமுறைகள் பேசுபொருளாகி வருகின்றன. இவற்றை நாவல் தொட்டுக் காட்டியாவது சென்றிருக்கலாம். பல நூற்றாண்டுப் பாரம்பரியமிக்க இந்திய மருத்துவமுறைகளான மூலிகை, ஆயுர்வேதம், சித்தா போன்றவை குறித்து விவாதிப்பதற்கு ஏற்ற எளிய வழிகளைப் புனைவுப்பரப்பு தன்னகத்தே கொண்டிருந்தாலும் அவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மருத்துவமனைகளின் அமைவிடங்களுக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு, நகரத்திற்கும் மருத்துவமனைக்கும் உள்ள நெருக்கங்கள் எளிய மனிதருக்கும் இந்நகர்சார் நவீனக் கட்டடங்களுக்கும் உள்ள உறவற்றநிலை எதுவும் விவாதிக்கப்படவில்லை. எளிய மனிதர்களுக்கு இக்கட்டடங்களின் அமைப்பே அச்சத்தைப் படர்த்துகிறது. மருத்துவக் கட்டடங்களுக்கு வெளியே புனைவு சிறிதும் நகரவில்லை.

நோயாளிகளோடு கட்டடங்களில் வெளிப்பகுதிகளிலும் வராண்டாக்களிலும் இரவுகளைக் கழிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உளைச்சல்கள் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் தடைகள், குழப்பங்கள், மனப்பதற்றங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. குறிப்பாகப் பொருளாதார நெருக்கடிகள் குறித்தாவது குறைந்தபட்சம் பேசியிருக்கலாம். ஒரு நோயாளியைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தின் குழந்தைமுதல் பெரியவர்வரை படும் துயரம் கடுமையானது. ஒரு கிருமி அல்லது ஒரு கொசு உருவாக்கும் பெரும்நோய் ஒரு குடும்பத்தையே நடுத்தெருவிற்குக் கொண்டுவந்துவிடுகிறது. கடனாளிகளாக ஊரைவிட்டு ஓடும் குடும்பங்கள், குழந்தைகளின் கல்வித்தடைகள், முதியவர்களின் கசங்கல்கள் என நோய் வரையும் குடும்பச்சிதைவுகள் விரிவானவை. இதன் தாத்பர்யங்கள் எள்ளளவும் இந்நாவலில் இல்லை. இதனால் இந்நாவல் முழுமையடையாது மருத்துவ வாழ்வின் ஒரு பகுதியில் மட்டும் சுழன்றுவிட்டு நின்று விடுகிறது.

சுதந்திர இந்தியாவின் மருத்துவ ஊழல்கள் புகழ்பெற்றவை. பணி நியமனங்கள், கட்டடவேலைகள், மருந்துப் பரிமாற்றங்கள், வாங்குவது விற்பது என அனைத்திலும் சுரண்டல் புரையோடியுள்ளது. அரசுச் செயல்பாடு குறித்து நாவல் பெரும் கள்ளமௌனம் சாதிக்கிறது. ஊடகங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் இடையே நடக்கும் இரகசிய பேரங்கள் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. பலமடங்கு விற்கப்படும் மருந்துப் பொருள்கள், போலி மருந்துகள், எளிய நோயாளிகளின் உயிர்களோடும் உடல்களோடும் விளையாடும் வியாபாரிகளின் மோசடிகள் எதையும் பொருட்படுத்தவில்லை. இவையெல்லாம் பட்டவர்த்தனமாக அனைவருக்கும் தெரிந்த உண்மைகள். மருத்துவராக இருக்கும் ஆசிரியர் இவற்றை முழுமையும் அறிந்தும் தவிர்த்துவிட்டாரா எனத் தெரியவில்லை. மருந்து குறித்த பல்வேறுபட்ட பரிமாணங்களைப் பிந்திய முதலாலாளிய சூழலில் வைத்து விவாதித்திருந்தால் நாவலுக்கு வேறொரு பரிமாணம் கிட்டியிருக்கும். அப்பொழுதுதான் மருந்து என்ற தலைப்பு பொருந்தி வரும். எனவே, மருந்து என்பதைவிட மருத்துவமனை என்ற தலைப்பே பொருத்தமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. தாவித் திரியும் முயல் தொகுதிகள், காலிமனைக் கூண்டுகளில் அடைபட்ட நாய்கள், சுண்டெலிகள், பன்றிகள் போன்ற சிற்றுயிர்கள் அலோபதி மருத்துவமனைகள் என்னும் பேரிருப்பைத் தக்கவைக்கக் கொடூரமாகச் சிதைக்கப்படும் சூழல் மருத்துவச் சீரழிவுகளின் ஒரு பகுதி. இவற்றை ஓரிரு இடங்களில் தொட்டுச்செல்கிறது நாவல். இதை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். கானுயிர்களும் உலகறியா சாமான்ய மனிதர்களையும் மருத்துவத்துறைச் சோதனை உடல்களாகச் சிதைத்து வரும் செய்திகள் நிறைய வந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு படைப்பாளியின் கவனம் அவற்றின் மீதும் குவிவது இயல்பாக இருக்கவேண்டிய ஒன்று. இவையெல்லாம் இந்நாவலின் பின்னடைவுகள்.

இருத்தலுக்கான போராட்டங்கள் உணர்வெழுச்சி மிக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன. மருத்துவமனை குறித்த நிகழ்வுகள் எழுத்தாளரின் தொழில் அனுபவத்தில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விரிவாக வரையப்பட்டுள்ளன. உடல்சார் கையறுநிலை உரையாடல்கள் எள்ளல் தொனியில் நாவல் முழுவதும் இழைந்துகொண்டிருக்கின்றன. இருத்தலியல் சித்தரிப்புகள், தத்துவார்த்தக் கூறுமுறைகள், மிகைபுனைவுத் தன்மைகள் (Fantasy) நுண்மொழிபுகள் (Micro Narration), மருத்துவமுறை குறித்த உதிரித்தகவல்கள், சரளமான மொழிப்பிரயோகம் போன்றவை இந்நாவலை தனித்தன்மையுடையதாக ஆக்குகிறது.

விறுவிறுப்பான மொழிநடையில் மிகக்கவனமாகப் பாராட்டும்படி மொழிபெயர்த்திருக்கிறார் சு.ராமன்.

(மருந்து - புனத்தில் குஞ்ஞப்துல்லா. தமிழில் சு. ராமன். பக்கம்: 416 முதல்பதிப்பு 2010 கிழக்குப் பதிப்பகம், சென்னை -18)

Dial For Books: 94459 01234 | 9445 97 97 97
)

Monday, April 25, 2011

2011 - சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு - தினமலர் - 24 ஏப்ரல் 2011

24 ஏபரல் 2011 தினமலர் நாளிதழில் ‘2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு’ புத்தக மதிப்புரை வெளிவந்துள்ளது.

புத்தகத்திலிருந்து ஒரு பகுதி...

2011-Sarvathikarathilirundhu jananayagaththukku - Tamil

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-644-5.html

Friday, April 22, 2011

காந்தி கொலை வழக்கு - புத்தக மதிப்புரை - 20-4-11 - தினத்தந்தி

20-4-2011 தினத்தந்தியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘காந்தி கொலை வழக்கு’ புத்தகத்தின் புத்தக மதிப்புரை வெளியாகியுள்ளது.

புத்தகத்திலிருந்து ஒரு பகுதி:

Gandhi Kolai Vazhakku_Tamil_kizhakku

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-596-7.html

Monday, April 11, 2011

சீனா விலகும் திரை - வெங்கட் சாமிநாதன் விமர்சனம் - யுகமாயினி இதழ், மார்ச் 2011

China Vilagum thirai (Tamil) book review

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-164-8.html

கருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011

13-4-2011 தேதியிட்ட துக்ளக் இதழில், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘கருணாநிதி என்ன கடவுளா?’ புத்தக விமர்சனம் வெளியாகியுள்ளது.

புத்தகத்திலிருந்து ஒரு கட்டுரை:

Karunanidhi Enna Kadavula_Devar Katturai

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-651-3.html

Wednesday, April 6, 2011

தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு புத்தக விமர்சனம் - தினத்தந்தி - ஏப்ரல் 6, 2011

ஏப்ரல் 6, 2011 அன்று வெளியான தினத்தந்தி நாளிதழில் ‘தமிழகப் பொதுத்தேர்தல்கள் வரலாறு’ புத்தகத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-643-8.html

கம்யூட்டர் கையேடு புத்தக விமர்சனம் - தினமலர் - ஏப்ரல் 3 2011

ஏப்ரல் 3, 2011 அன்று வெளியான தினமலரில் கம்ப்யூட்டர் கையேடு புத்தகம் பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது.

Rs. 100

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-525-7.html

Friday, March 11, 2011

20-20 சுருக் நறுக் கிரிக்கெட் கார்ட்டூன்கள் புத்தக விமர்சனம் - தினமணி - 7-மார்ச்-2011

7-மார்ச்-2011 அன்று தினமணியில் வெளியான ‘20-20 சுருக் நறுக் கிரிக்கெட் கார்ட்டூன்கள்’ புத்தகத்தின் விமர்சனம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/978-81-8493-693-1.html

Thursday, March 10, 2011

இதய நோயாளிகளுக்கான உணவும் உணவு முறைகளும் புத்தக விமர்சனம் - The Hindu - 8-மார்ச்-2011

இதய நோயாளிகளுக்கான உணவும் உணவு முறைகளும் புத்தகம் பற்றிய விமர்சனம், The Hindu நாளிதழில் 8-மார்ச்-2011 அன்று வெளியானது.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-580-6.html

Friday, March 4, 2011

வலிப்பு நோய்கள் விமர்சனம் - துக்ளக் - 02 மார்ச் 2011

02 மார்ச் 2011 தேதியிட்ட துக்ளக் இதழில் ‘நலம் வெளியீடு’ வெளியிட்டிருக்கும் ‘வலிப்பு நோய்கள்’ புத்தகம் பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது.

’வலிப்பு நோய்கள்’ புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-601-8.html