Search This Blog

Monday, March 28, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - ஞாநியுடன் ஒரு மாலை

நண்பர்களே,

மார்ச் 31ம் தேதி, வியாழன் அன்று மாலை 6.30க்கு மணி கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் ஞாநி பேசுகிறார்.
* இன்றைய கூட்டணி நிலவரமும் அரசியல் நிலவரமும்

* தேர்தலைப் புறக்கணிப்பது சரியா?

* ஓ போடுவது எப்படி?

* வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வாக்களிக்க முடியுமா?

* தேர்தலில் மீடியாவின் இன்றைய பங்கு என்ன?

மேலும் பல விஷயங்கள் குறித்து ஞாநி உரையாடுகிறார். பின்னர் அவருடன் கலந்துரையாடல் நடைபெறும்.

தேதி
மார்ச் 31, 2011 வியாழன்

நேரம்
மாலை 6.30 மணிக்கு.

அனைவரும் வருக!

Wednesday, March 23, 2011

Review of 'Paintings in Tamilnadu - A History' book by S. THEODORE BASKARAN in Frontline

Frontline dated March 26-April 8, 2011 carries a review of 'Paintings in Tamilnadu - A History' published by Oxygen Books. The book is written by Job Thomas and the review is written by the famous writer S. THEODORE BASKARAN.

To read the review, Pl click here. |Fading Colors|


Rs. 300


To order the book line, pl click here. https://www.nhm.in/shop/978-81-8493-487-8.html

Friday, March 18, 2011

கருணாநிதி என்ன கடவுளா - புதிய புத்தகம்

பழ. கருப்பையா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கருணாநிதி என்ன கடவுளா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது. அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.


விலை: ரூ. 120


தினமணி, துக்ளக்கில் வந்தபோது பெரிய அளவில் பேசப்பட்ட கட்டுரைகள் இவை. இரண்டாம் திராவிடச் சிசு, கருணாநிதி என்ன கடவுளா, தமிழ்த்தாய் வரமாட்டாள் போன்ற கட்டுரைகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-651-3.html

Thursday, March 17, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - எழுத்துகளின் கதை - தொடர் கூட்டம்

மொழியும் எழுத்தும் வெவ்வேறானவை. மொழிக்கு எழுத்துகள் இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. வாய்மொழியாகவே பல மொழிகள் ஜீவித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எழுத்துகளுக்கு மொழி அவசியம்.

எழுத்துகள் தோன்றி, படிப்படியாக உருப்பெற்று, நிலைபெற்ற கதை சுவாரஸ்யமானது. மனித குலத்தின் கதையும் நாகரீக வளர்ச்யின் கதையும்கூட இதில் இணைந்தே இருக்கிறது.

எழுத்துகளின் கதை என்னும் வரிசையில் பேரா. சுவாமிநாதன் ஒவ்வொரு மாதமும் எழுத்துகள் குறித்து கிழக்கு மொட்டைமாடியில் உரையாடிக்கொண்டிருக்கிறார். உலக எழுத்துகள் வரிசையில் சீன, எகிப்திய, மிசோ அமெரிக்க எழுத்துகள் குறித்து உரையாடினார்.

இந்திய எழுத்துகள் வரிசையில் பிராமிய, கரோஷ்டி எழுத்துகள் குறித்தும் தற்போது தமிழ்நாட்டு எழுத்துகள் குறித்தும் உரையாடிக்கொண்டிருக்கிறார்.

இன்று மாலை 6.30 மணிக்கு வட்டெழுத்து, தமிழ், கிரந்த எழுத்துகளின் வளர்ச்சி குறித்து பேரா. சுவாமிநாதன் பேசவிருக்கிறார்.

அனைவரும் வருக!

இடம்:
கிழக்கு மொட்டைமாடி
33/15, எல்டாம்ஸ் சாலை
ஆழ்வார்பேட்டை
சென்னை 18

நாள்:
17-மார்ச்-2011, வியாழக் கிழமை

நேரம்:
மாலை 6.30 மணி

Wednesday, March 16, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - பாலுமகேந்திரா

நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளை திரைப்படமாக்குவது குறித்த விவாதங்கள் தமிழில் அடிக்கடி நடைபெறக் காணலாம். நல்ல திரைப்படங்களைத் தந்துகொண்டிருக்கும் மொழிகளில் இத்தகைய ஒரு வழக்கம் தொடர்ச்சியாக இருந்துகொண்டுதான் இருக்கிறது.

திரைப்படங்கள் என்றல்ல, குறும்படம், நாடகம் என எதையும் இப்படி எழுதப்பட்ட புனைவுகளில் இருந்து எடுக்கும்போது, அதன் கதைத்தளம் நல்ல வலுவாக அமைந்துவிடும் சாத்தியங்கள் உண்டு. இப்படி இல்லாமல் சமசரம் என்ற பெயரில், படைப்பின் மூலத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்துவிட்ட படங்களும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

தொலைக்காட்சி நாடகங்கள் என்ற பெயரில் வந்துகொண்டிருந்த நாடகங்களுக்கு மத்தியில் பாலுமகேந்திராவின் கதை நேரம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் யதார்த்தமாகவும் இருந்து தொலைக்காட்சி நாடகங்களுக்கே ஒரு மரியாதை தேடித் தந்தது. அந்த கதை நேரத்தில் பாலுமகேந்திரா எடுத்த அத்தனை நாடகங்களும், எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளே. சிறுகதைகளின் தாக்கம் சிறிதும் கெடாமல் படமாக்கப்பட்ட விந்தையைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை. சில நாடகங்கள் சிறுகதைகளையும் மிஞ்சி நின்றன. தொலைக்காட்சி நாடகங்கள்தானே என்ற எண்னம் இல்லாமல், ஒரு திரைப்படத்துக்கு உண்டான உழைப்பை அதில் நாம் பார்க்கமுடியும். காலம் கடந்து ஒரு படைப்பு நிற்க, அதன் உள்ளடக்கமும் தரமும்தான் முக்கியமே ஒழிய, அது தொலைக்காட்சி நாடகமா திரைப்படமா குறும்படமா என்ற அவசியம் இல்லை என்று பெரிய அளவில் உணர்த்தியவை பாலுமகேந்திராவின் கதை நேரம் நாடகங்களே. அதன் சில நாடகங்களில், இந்தக் கதையை திரைக்கதையாக மாற்ற இயலுமா என்று நம்மை ஆச்சரியப்படுத்தி இருப்பார் பாலுமகேந்திரா.

உலகின் உன்னதமான திரைப்படங்கள் வரிசையில் வைக்கத்தக்க படங்களான வீடு, சந்தியா ராகம் படங்களைத் தந்தவர் பாலுமகேந்திரா என்பது நாம் அறிந்த ஒன்றே.

ஒரு படைப்பிலிருந்து திரைக்கு எப்படிச் செல்வது என்பது குறித்துத் தெளிவோடு பேசுவதற்குச் சரியான ஆளுமையும் அவர்தான்.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

‘எழுத்திலிருந்து திரைக்கு...’ என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா உரையாற்றுகிறார்.

குறும்படம் திரையிடலும், கலந்துரையாடலும் உண்டு.

தவறவிடக்கூடாத கூட்டம் இது.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்
நாள்: 18.03.2011 வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணி.
இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடி, 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600018.

Saturday, March 12, 2011

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - கிழக்கு பதிப்பக வெளியீடாக.

சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றான ‘ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’ புத்தகம் கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் கடைகளிலும் ஆன்லைனிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.


விலை: 80 ரூபாய்


புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.

Friday, March 11, 2011

தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு - புதிய புத்தகம்

விலை: 40 ரூபாய்


பொதுத் தேர்தல் நேரத்தில் மக்கள் அதிகம் தேடுகிற விஷயம், புள்ளிவிவரங்கள். முந்தைய தேர்தல்களில் நடந்த விறுவிறுப்பான காட்சிகள், தொகுதி வாரியாக ஜெயித்தவர், தோற்றவர் குறித்த விவரங்கள், வாக்குகளின் சதவீதம், வேட்பாளர்களின் பின்னணி, முன்னணித் தகவல்கள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணங்கள் இன்னபிற.

இந்தப் புத்தகம், சுதந்தரத்துக்குப் பிறகு நடைபெற்ற தமிழக சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்கிறது. ஒவ்வொரு தேர்தலுக்குமான காரணம் தொடங்கி, கூட்டணி, பிளவு, தொகுதிப் பங்கீடு, பிரசாரங்கள், பிரச்னைகள், புதிய கட்சிகள் உருவாக்கம், வாக்குறுதிகள், வியூகங்கள் என்று அனைத்தையும் காட்சிப்படுத்துகிறது.

தேர்தல் நடைபெற்ற ஆண்டு வாரியான புள்ளிவிவரங்களும் அட்டவணைகளும் இணைக்கப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு. அவசியம் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் உள்ளடக்கிய ஆவணம் இது.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-643-8.html

இப்புத்தகத்தை எழுதிய ஆர்.முத்துக்குமாரின் பிற புத்தகங்களை வாங்க இங்கே சொடுக்கவும்.

20-20 சுருக் நறுக் கிரிக்கெட் கார்ட்டூன்கள் புத்தக விமர்சனம் - தினமணி - 7-மார்ச்-2011

7-மார்ச்-2011 அன்று தினமணியில் வெளியான ‘20-20 சுருக் நறுக் கிரிக்கெட் கார்ட்டூன்கள்’ புத்தகத்தின் விமர்சனம்.புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/978-81-8493-693-1.html

Thursday, March 10, 2011

இதய நோயாளிகளுக்கான உணவும் உணவு முறைகளும் புத்தக விமர்சனம் - The Hindu - 8-மார்ச்-2011

இதய நோயாளிகளுக்கான உணவும் உணவு முறைகளும் புத்தகம் பற்றிய விமர்சனம், The Hindu நாளிதழில் 8-மார்ச்-2011 அன்று வெளியானது.
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-580-6.html

Kizhakku pathippagam Book Fairs in Apartments!

எங்கள் அடுத்த முயற்சியாக, தமிழ்நாட்டில் அதிக வீடுகள் உள்ள அபார்ட்மெண்ட்டுகளில் புத்தகக் கண்காட்சி நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். சென்னையில் ஏற்கெனவே இரண்டு அபார்ட்மெண்ட்டுகளில் இத்தகைய கண்காட்சிகளை நடத்தியிருக்கிறோம். கடந்த வாரம் பெசண்ட் நகரில் உள்ள ஜாஸா அபார்ட்மெண்ட்டில் புத்தகக் கண்காட்சி நடந்தது.புத்தகம் வாங்கக் கடைக்குச் செல்ல நேரம் இல்லாதவர்களுக்கு இது ஒரு வரம் என்றே சொல்லலாம். அதில்லாமல், பலருக்கும் தமிழில் இப்படிப் பல புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன என்றே தெரியவில்லை. கண்ணில் பட்டால் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களாகத் தேடிச் சென்று புத்தகம் வாங்குவதில்லை. இதனால்தான் அவர்கள் இருக்கும் இடங்களுக்கு நாங்கள் செல்கிறோம்.

குறைந்தது 100 வீடுகளாவது உள்ள அபார்ட்மெண்ட்டுகளை முதலில் தேர்ந்தெடுக்கிறோம். சில அபார்ட்மெண்ட்டுகள் உடனே ஒப்புக்கொண்டு விடுகின்றன. சிலர் தங்கள் அபார்ட்மெண்ட்டுக்கான சங்கத்தில் பேசி முடிவெடுத்துச் சொல்கிறோம் என்கிறார்கள். இதுபோல 80 முதல் 100 வீடுகள் வரை உள்ள அபார்ட்மெண்ட்டுகளில் புத்தகக் கண்காட்சி நடத்த விரும்புவர்கள்,(தமிழ்நாட்டுக்குள் மட்டுமே இப்போது சாத்தியம்)எங்களுக்கு உதவ விரும்பினால் support@nhm.in என்கிற ஐடிக்கு மெயில் அனுப்பலாம்.

புத்தகக் கண்காட்சி என்கிற ஐடியாவை அபார்ட்மெண்ட்டுக்காரர்கள் கொஞ்சம் ஆச்சரியத்தோடும் சந்தோஷத்தோடும் வரவேற்பதை நேரில் பார்த்தால்தான் அதன் பரவசம் புரியும்!

சுஜாதாவின் இரண்டு புத்தகங்கள்

சுஜாதாவின் புத்தகங்களை கிழக்கு பதிப்பகம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியான இரண்டு நாவல்கள்.

விரும்பிச் சொன்ன பொய்கள்ஆதலினால் காதல் செய்வீர்

Saturday, March 5, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு - தினமலர் விளம்பரம் - 5 மார்ச் 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு புத்தகம் பற்றி தினமலரில் வெளியான சிறிய விளம்பரம்.
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-638-4.html

Friday, March 4, 2011

வலிப்பு நோய்கள் விமர்சனம் - துக்ளக் - 02 மார்ச் 2011

02 மார்ச் 2011 தேதியிட்ட துக்ளக் இதழில் ‘நலம் வெளியீடு’ வெளியிட்டிருக்கும் ‘வலிப்பு நோய்கள்’ புத்தகம் பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது.’வலிப்பு நோய்கள்’ புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-601-8.html

கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் - 3 மார்ச் 2011 - வானவியல் பற்றி த.வி. வெங்கடேஸ்வரன்

4-மார்ச் 2011

நேற்று கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

த.வி. வெங்கடேஸ்வரன், இந்திய பண்டைய வானிவியல் ஆய்வுகளைப் பற்றியும், இந்திய வானிவியல் அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் பற்றியும் மிகவும் சிறப்பாகப் பேசினார். கூடவே அதே காலகட்டத்தில் உலகில் நடந்த வானவியல் முன்னேற்றங்களைப் பற்றியும் பேசினார்.

கடிகாரம், தொலைபேசி போன்ற கண்டுபிடிப்புகள் இல்லாத நாள்களில், நம் முன்னோர்கள் பெற்றிருந்த வானவியல் அறிவு உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துவதாக இருந்தது. நாள், வாரம், மாதம், வருடம் என ஒவ்வொரு கணக்குக்குப் பின்னும் உள்ள அறிவியல் பூர்வமான சிந்தனைகள் குறித்து அவர் விளக்கியது அருமையாக இருந்தது.

6.30க்குத் தொடங்கிய அவர் பேச்சு சுமார் 8 மணி வரை நீடித்தது. அதற்குப் பின்னர் 9 மணி வரை பார்வையாளர்கள் சுவாரஸ்யம் குறையாமல் அவருடன் உரையாடியது ஆச்சரியம்.

இனி இதேபோல் தொடர்ந்து கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் நடத்த உத்தேசித்துள்ளோம்.

வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

பத்ரியின் பதிவில் காணொளி (வீடியோ) வலையேற்றப்பட்ட பின்பு, இங்கேயும் அதனைப் பகிர்ந்துகொள்வோம்.