எங்கள் அடுத்த முயற்சியாக, தமிழ்நாட்டில் அதிக வீடுகள் உள்ள அபார்ட்மெண்ட்டுகளில் புத்தகக் கண்காட்சி நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். சென்னையில் ஏற்கெனவே இரண்டு அபார்ட்மெண்ட்டுகளில் இத்தகைய கண்காட்சிகளை நடத்தியிருக்கிறோம். கடந்த வாரம் பெசண்ட் நகரில் உள்ள ஜாஸா அபார்ட்மெண்ட்டில் புத்தகக் கண்காட்சி நடந்தது.
புத்தகம் வாங்கக் கடைக்குச் செல்ல நேரம் இல்லாதவர்களுக்கு இது ஒரு வரம் என்றே சொல்லலாம். அதில்லாமல், பலருக்கும் தமிழில் இப்படிப் பல புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன என்றே தெரியவில்லை. கண்ணில் பட்டால் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களாகத் தேடிச் சென்று புத்தகம் வாங்குவதில்லை. இதனால்தான் அவர்கள் இருக்கும் இடங்களுக்கு நாங்கள் செல்கிறோம்.
குறைந்தது 100 வீடுகளாவது உள்ள அபார்ட்மெண்ட்டுகளை முதலில் தேர்ந்தெடுக்கிறோம். சில அபார்ட்மெண்ட்டுகள் உடனே ஒப்புக்கொண்டு விடுகின்றன. சிலர் தங்கள் அபார்ட்மெண்ட்டுக்கான சங்கத்தில் பேசி முடிவெடுத்துச் சொல்கிறோம் என்கிறார்கள். இதுபோல 80 முதல் 100 வீடுகள் வரை உள்ள அபார்ட்மெண்ட்டுகளில் புத்தகக் கண்காட்சி நடத்த விரும்புவர்கள்,(தமிழ்நாட்டுக்குள் மட்டுமே இப்போது சாத்தியம்)எங்களுக்கு உதவ விரும்பினால் support@nhm.in என்கிற ஐடிக்கு மெயில் அனுப்பலாம்.
புத்தகக் கண்காட்சி என்கிற ஐடியாவை அபார்ட்மெண்ட்டுக்காரர்கள் கொஞ்சம் ஆச்சரியத்தோடும் சந்தோஷத்தோடும் வரவேற்பதை நேரில் பார்த்தால்தான் அதன் பரவசம் புரியும்!
நல்ல முயற்சி நன்றி பத்ரி
ReplyDelete