திராவிட இயக்க வரலாறு (இரண்டு பாகங்கள்)
ஆர்.முத்துக்குமார்
பாகம் - 1
பக்: 424
விலை : 210/-
முதல் பாகம்: இணையத்தில் வாங்க
பாகம் -2
பக் : 424
விலை: 200/-
இரண்டாம் பாகம் : இணையத்தில் வாங்க
ஆர்.முத்துக்குமார்
பாகம் - 1
பக்: 424
விலை : 210/-
முதல் பாகம்: இணையத்தில் வாங்க
பாகம் -2
பக் : 424
விலை: 200/-
இரண்டாம் பாகம் : இணையத்தில் வாங்க
புத்தகத்திலிருந்து:
29 செப்டெம்பர் 1945. திருச்சி புத்தூர்
மைதானத்தில் பெரியார் தலைமையில் திராவிடர் கழக மாநாடு கூடியது. அந்த மாநாட்டில்
திராவிடர் கழகத்துக்கான லட்சியங்கள் வரையறுக்கப்பட்டன. விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
கழகத்தின் பெயர் திராவிடர் கழகம் என்பது தொடங்கி பல்வேறு விஷயங்கள் தீர்மானம்
செய்யப்பட்டன.
திராவிடர் கழகத்தின்
லட்சியங்கள்
திராவிடநாடு (சென்னை
மாகாணம்) சமுதாயம், பொருளாதாரம், தொழில்துறை, வியாபாரம்
ஆகியவற்றில் பூரண சுதந்தரமும் ஆதிக்கமும் பெறவேண்டும்.
திராவிட நாடும்
திராவிட நாட்டு மக்களும் திராவிட நாட்டவரல்லாத அந்நியர்களின் எந்தவிதமான
சுரண்டல்களில் இருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுக் காப்பாற்றப்படவேண்டும்.
திராவிட நாட்டில்
உள்ள மக்கள் யாவரும் சாதி,
வகுப்பு, அவை சம்பந்தமான
உயர்வு, தாழ்வு
இல்லாமல் சமுதாயத்திலும் சட்டத்திலும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் பெற்றுச்
சமவாழ்வு வாழச் செய்யவேண்டும்.
திராவிட நாட்டு
மக்களுக்குச் சமயம், சமயாசாரம், பழக்கவழக்கம்
என்பனவற்றின் பேரால் இருந்துவரும் பேத உணர்ச்சி, மூட நம்பிக்கை, ஆகியவைகள் மறையச் செய்து, அவர்களைத் தாராள
நோக்கமும் நல்ல அறிவு வளர்ச்சியும் பெற்ற ஒன்றுபட்ட சமுதாய மக்களாகச்
செய்யவேண்டும்.
இவை வெற்றிபெறுகிறவரை
சாதி, சமய, வகுப்புபேதம் ஆகியவை
உள்ள மக்களுக்கு நம்மிடம் (கழகத்தாரிடம்) முழு நம்பிக்கையும் நல்லெண்ணமும்
ஏற்பட்டு, மேற்கண்ட
முயற்சிகளுக்கு நம்மோடு களங்கமற்று ஒத்துழைக்கவேண்டிய அவசியத்துக்காக, அவைகளுக்குத் தக்கபடி
முக்கியமான துறைகளில் எல்லாம் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படிச் செய்யவேண்டும்.
எல்லாவற்றையும்விட
முக்கியமாக, திராவிடரின்
விடுதலைக்காகப் போரிடவும் சகலவித நடவடிக்கைக்கும் தயாராக இருக்கவும் இசையும் ஒரு
மாகாண திராவிட விடுதலைப் படை (Dravidian Freedom
Force) அமைக்கவேண்டும்
என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறதுஎன்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அந்த மாநாட்டில்
கலந்துகொண்டு பேசிய ‘தளபதி’ அண்ணா, திராவிட நாடு ஏன்
தனிநாடாகப் பிரியவேண்டும்?’
என்பதை
விளக்கினார். ஆம். பெரியாருக்குத் தளபதியாக, திராவிட இயக்கத்துக்குத் தளபதியாக மாறியிருந்தார் அண்ணா.
இப்படி ஒரு திராவிட நாடு கதை இருக்காமே. திராவிட நாடும், சுடுகாட்டு பேச்சும்...
ReplyDelete