Search This Blog

Friday, July 5, 2013

டேவிட் ஒகில்வி : ஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள்

டேவிட் ஒகில்வி : ஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள்
டேவிட் ஒகில்வி
தமிழில் : பத்ரி சேஷத்ரி
பக் : 208
விலை : ரூ 125/-


சர்வதேச அரங்கில் பல விளம்பர விருதுகள் பெற்ற வோடஃபோன், கேட்பரி, டவ், ஃபெவிகால், ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளின் விளம்பரங்களை உருவாக்கிய இந்தியாவின் நம்பர் 1 விளம்பர நிறுவனமான ஒகில்வி மேத்தரின் நிறுவனர், டேவிட் ஒகில்வி.

விளம்பர உலகின் ஜீனியஸ் என்றும் நவீன விளம்பர யுகத்தின் தந்தை என்றும் போற்றப்படும் இவர், உலகின் தலைசிறந்த விளம்பரங்களை உருவாக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இவர் கடைப்பிடித்த தொழில்நுட்பமும் யுக்திகளும் உலகம் முழுவதும் இன்றும் பின்பற்றப்படுகின்றன. ஒரு வெற்றிகரமான விளம்பர நிர்வாகி ஆக விரும்பும் அனைவருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்நூல், விற்பனையில் இதுவரை 10 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது.

விளம்பரத் துறையில் இருப்போருக்கு மட்டுமல்ல, வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கும் தொழில் முனைவோருக்கும் விளம்பரத் துறையைப் புரிந்துகொள்ளவும் முதல்தரமான வழிகாட்டி இந்நூல்.


பந்தைச் சும்மா தட்டிவிட முயற்சி செய்யாதே. மைதானத்தைவிட்டு வெளியே போகுமாறு தூக்கி அடி. அழியா சிரஞ்சீவிகளின் குழுவில் இடம்பெற முயற்சி செய்’
- டேவிட் ஒகில்வி


”கன்ஃபெஷன்ஸ் ஆஃப் அன் அட்வர்டைசிங் மேன்’ என்னுடைய விளம்பர பைபிளாகவும், ராமாயணமாகவும், குர்ஆனாகவும் இருந்துவருகிறது. அது இப்போது தமிழில் வருகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்தப் புத்தகம், காலத்தால் மாறாத விளம்பரக் கோட்பாடுகளுக்கான சிறந்த வழிகாட்டியாக இருப்பதோடு, பொதுவாக, வாழ்க்கைக்கான பல பாடங்களும் இதில் உள்ளன. டேவிட் ஒகில்வி, ஒரு பெரும் கிரியேட்டிவ் மேதை மட்டுமல்ல; தன் வாடிக்கையாளர்களின் பொருள்களைப் பற்றியும் நுகர்வோரின் மனத்தையும் மூளையையும் நன்கு அறிந்த, மிகக் கூர்மையான ஒரு பிசினஸ்மேன்.

அவர், ஒகில்வி இந்தியா நிறுவனத்தின் மிகச் சிறந்த நண்பராக இருந்தார். ஒகில்வி இந்தியா, அவருடைய கொள்கைகளை ஏற்றுக்-கொண்டதோடு, பல ஆண்டுகளாக அவற்றைப் பின்பற்றி வந்துள்ளது; இன்னமும் தொடர்கிறது. இந்தப் புத்தகம், பல கிரியேட்டிவ் ஆட்களுக்கும் பிற துறைகளில் உள்ள விளம்பர ஆட்களுக்கும், இதனால் பயனடையப் போகும் எண்ணற்ற வாடிக்கையாளர்களுக்கும் ஊக்கம் தரும் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு வாசகரும் இந்தப் புத்தகத்திலிருந்து கற்றுக்-கொள்வது மட்டுமல்ல, இதைப் படிப்பதால் மகிழ்ச்சியும் அடைவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.


பீயுஷ் பாண்டே
எக்சிக்யூட்டிவ் சேர்மன், ஒகில்வி அண்ட்  மேத்தர் இந்தியா 
கிரியேட்டிவ் டைரக்டர், தெற்காசியா


No comments:

Post a Comment