Search This Blog

Thursday, June 13, 2013

காஷ்மிர் : முதல் யுத்தத்தின் கதை

சுதந்தரம் பெற்ற காலம் தொடங்கி இன்று வரை தீராத பிரச்னையாக காஷ்மிர் நீடித்துவவருவதற்கான காரணங்களை அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம் ஆண்ட்ரூ வைட்ஹெட் எழுதி பி.ஆர். மகாதேவன் மொழிபெயர்த்திருக்கும் காஷ்மிர்: முதல் யுத்தம்.

புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்.

0

நான் அவரை முதன்முதலாகச் சந்தித்தபோது அவருக்கு 91 வயது ஆகியிருந்தது. அறுபது வருடங்களுக்குமுன் நடந்த சம்பவங்-களை நினைவுகூர்ந்தபோது சோகம் கலந்த புன்னகை அவர் முகத்தில் தவழ்ந்தது. பாரமுல்லாவில் கிறிஸ்தவ மடாலயத்-தின்மீது நடைபெற்ற தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்களில் எமிலியா மோண்ட்வானியும் ஒருவர். இன்று-வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்னை-யின் முதல் தீப்பொறி அவர் கண்முன்னால்தான் பற்றவைக்கப்-பட்டது. அரை நூற்றாண்டு ஆனபிறகும் அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில், இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோட்டுக்கு அருகில் இருக்கும் அந்த மடாலயத்திலேயே வசித்து வந்தார்.

இமயமலைச் சரிவில் வசித்த அவருடைய சோகக் கதை, உலகின் புவி-அரசியல் யுத்தங்களில் மிக மோசமான ஒன்றின் சரித்திரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. காஷ்மீரைப் பாகிஸ்தானுக்காக வென்றெடுக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அவர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்-பட்டனர்? யார் அவர்களுக்குத் தலைமை தாங்கியது? தங்கள் இலக்கில் அவர்கள் எதனால் தோல்வியுற்றனர்? இவைபற்றி இதுவரை யாரும் சொல்லியிராத தகவல்களை எமிலியா என்னுடன் பகிர்ந்துகொண்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கின்மீது உரிமை கொண்டாடுபவர்கள் சொல்லும் சரித்திரங்களை அது சந்திக்கு இழுக்கிறது. தேசியக் கதையாடல்கள், எல்லைக் கோடுகள் என்று பொதுவாகப் பேசப்படும் விஷயங்களுக்கு மாற்றாக இருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு மனிதர்களின் நினைவுகள், எதிர்பார்ப்புகள், வேதனைகள் ஆகியவற்றை மையத்துக்குக் கொண்டுவருகிறது.

0

வன்புணர்ச்சி பற்றிய விவரங்களை அருட்சகோதரியிடம் கேட்கும் மன தைரியம் அன்று என்னிடம் இல்லை. வயது முதிர்ந்த இத்தாலிய அருட்சகோதரி எமிலியா, அன்று நடந்த சம்பவங்களை பெரும் உற்சாகத்துடன் சாகசக் கதை ஒன்றைச் சொல்லும் பாணியில் விவரித்தார். ஆனால், நினைவின் கண்ணி-கள் வயதின் முதிர்ச்சியினால் வலுவிழக்கத் தொடங்கியிருந்தன. இப்போதும் அந்தச் சம்பவங்கள் கொடுங்கனவுகளாக வந்து அவரது தூக்கத்தைக் கலைத்துக்கொண்டிருப்பதாக இன்னொரு கன்யாஸ்திரீ சொன்னார். 1947-ல் பாரமுல்லா கிறிஸ்தவ மடாலயத்தில் இருந்த கன்யாஸ்திரீகளில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற எல்லாருமே ஐரோப்பியர்களாக இருந்தனர். இப்போது, ஐம்பது வருடங்கள் கழித்து அந்த மடாலய மருத்துவமனையில் இருந்த ஒரே ஓர் ஐரோப்பியர் எமிலியா மோண்ட்வானி மட்டுமே. 1930-ல் அவர் இந்தியா வந்தார். செயிண்ட் ஜோசப் மருத்துவமனைக்கு 1933-ல் வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 28. அறுபது வருடங்களுக்கும் மேலாக அதுவே அவருடைய வீடாக இருந்து வந்திருக்கிறது.

தாடியுடன், கறுப்புத் தலைப்பாகை அணிந்து, ஆயுதங்களைத் தாங்கியபடி அருட்சகோதரியின் கொடுங்கனவுகளில் வந்து மிரட்டிக்கொண்டிருப்பவர்கள் பதான் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆஃப்கனிஸ்தானுக்கு அருகில் இருக்கும் பாகிஸ்-தானின் வட மேற்கு எல்லைப் பகுதியில் இருந்து புறப்பட்டு வந்த லஷ்கர் கொள்ளைக்கூட்டத்தினர். இஸ்லாத்தின் பெய-ராலும் பாகிஸ்தானின் பெயராலும் அந்த வன்முறைகளில் ஈடு-பட்டனர். இந்த மலைவாழ் மக்கள் அன்றும் இன்றும் பழங்-குடியினர் என்றே அறியப்படுகின்றனர். பழங்குடி இன, குல அடையாளங்கள், பழக்க வழக்கங்கள், விதிமுறைகள், மத அடையாளம், பெருமிதம் ஆகியவையே அவர்களுடைய இன்றைய வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன.

0

காஷ்மீரில் அமைதி திரும்பவேண்டும் என்று செயிண்ட் ஜோசப் மடாலயத்தில் தினமும் பிரார்த்தனை செய்வதாகக் கன்யாஸ்திரீ ஒருவர் சொன்னார். ‘ஆனால், உண்மையான அமைதி திரும்ப இன்னும் வெகு தூரம் போகவேண்டும். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது’ என்றார் அவர்.

0

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க.

ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

No comments:

Post a Comment