Search This Blog

Thursday, December 22, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 1)

சென்ற ஆண்டு வெளியான ‘திராவிட இயக்க வரலாறு’ - இரு தொகுதிகளாக வெளியான புத்தகம் பற்றிய உரையாடலில் பத்ரி சேஷாத்ரியுடன், ஆர். முத்துக்குமார். முதல் தொகுதி பற்றிய உரையாடல் மூன்று பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகத்தில் நீதிக் கட்சி உருவாவது. இரண்டாவதில் பெரியார். மூன்றாவது அண்ணா; அவர் கட்சி ஜெயிப்பது, அண்ணாவின் இறப்பு ஆகியவை வரையில். முதல் பாகம் வீடியோ இங்கே

இந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க

அல்லது

தொலைபேசி வழியே புத்தகம் வாங்க: Dial For Books - 94459 012345 | 9445 97 97 97

Wednesday, December 21, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: முல்லைப் பெரியாறு விவாதம்

பத்ரியுடன்,ஊரோடி வீரகுமார் ,முல்லைபெரியாறு பிரச்னைப்பற்றி இன்றைய கிழக்குபாட்காஸ்டில். ஊரோடி வீரகுமார் தேனியில் விவசாயம் செய்பவர். கிழக்கு பதிப்பகத்துக்காக விவசாயம் பற்றி சில புத்தகங்களை எழுதியுள்ளார். முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.  இன்றைய அப்டேட் சேர்த்து,புத்தகம் அடுத்த வாரம் முதல் கிடைக்கும்.

அவருடன் பேசுவதை ஒளிப்பதிவு செய்ய அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பயம் ஏதும் இல்லை, ஆனால் தன் முகம் வெளியே தெரிவதை தான் விரும்புவதில்லை என்றார்.

Tuesday, December 13, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா? (பாகம் 3)

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்ற புத்தகத்தை முன்வைத்து, இந்தியா எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் எவையெவை என்று ஓர் அலசல். புத்தக ஆசிரியர் அரவிந்தன் நீலகண்டனுடன் பத்ரி அதன் வீடியோ இங்கே.

 இந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க

அல்லது

தொலைபேசி வழியே புத்தகம் வாங்க: Dial For Books - 94459 012345 | 9445 97 97 97

Friday, December 9, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா? (பாகம் 1)

இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் அபாயங்கள் எவையெவை? ராஜிவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் எழுதியிருக்கும் உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்ற புத்தகத்தை முன்வைத்து அரவிந்தன் நீலகண்டன் பத்ரியுடன் உரையாடுகிறார். மொத்தம் மூன்று பாகங்களாகச் செல்லும் நீண்ட உரையாடல் இது. முதல் பாகத்தில் ஆரிய, திராவிடம் ஆகியவை எவ்வாறு இனவாதச் சிந்தனைகளாக ஆகின, ஆரியப் படையெடுப்பு என்பது உண்மையா, திராவிடர்கள் யார், லெமூரியா கண்டம் இருந்ததா, விவிலியத் தொன்மங்களின் அடிப்படையில் காலனிய அறிஞர்கள் இந்தியாவை எப்படிப் பார்த்தனர், எல்லிஸ், கால்டுவெல், பர்ரோ, எமினோ, போப், தேவநேயப் பாவாணர், பெரியார், அண்ணா போன்ற பலரையும் இதில் ஒரு பார்வை அதன் வீடியோ இங்கே .

 இந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க

அல்லது

தொலைபேசி வழியே புத்தகம் வாங்க: Dial For Books - 94459 012345 | 9445 97 97 97

Thursday, December 8, 2011

டிசம்பர் 12 - ரஜினி பிறந்தநாளில் ரஜினியின் பன்ச் தந்திரம் ஒரு கலந்துரையாடல்

கிழக்கு பாட்காஸ்ட்: ஐரோம் ஷர்மிளா, மணிப்பூரின் இரும்புப் பெண்மணி

கிழக்கு பாட்காஸ்ட்டில் பத்ரியும், மருதனும் ஐரோம் ஷர்மிளா பற்றிப் பேசியிருக்கிறார்கள். தீப்தி பிரியா மெஹ்ரோத்ரா ஆங்கிலத்தில் எழுதி, ஜெ.ராம்கி தமிழில் மொழிபெயர்த்து, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஐரோம் ஷர்மிளா:

இந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க

அல்லது

தொலைபேசி வழியே புத்தகம் வாங்க: Dial For Books - 94459 012345 | 9445 97 97 97

Wednesday, December 7, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு (2)

ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 2), புத்தகத்தைப் பற்றி இன்றைய பாட்காஸ்டில் பத்ரியும், பிரசன்னாவும் பேசிய வீடியோ இங்கே:

இந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க

அல்லது

தொலைபேசி வழியே புத்தகம் வாங்க: Dial For Books - 94459 012345 | 9445 97 97 97

Tuesday, December 6, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு (1)

ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1), புத்தகத்தைப் பற்றி இன்றைய பாட்காஸ்டில் பத்ரியும், பிரசன்னாவும் பேசிய வீடியோ இங்கே:

இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றிய பாட்காஸ்ட் நாளை வெளியாகும்.

இந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க

அல்லது

தொலைபேசி வழியே புத்தகம் வாங்க: Dial For Books - 94459 012345 | 9445 97 97 97

Monday, December 5, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: ஜெயமோகனின் அண்ணா ஹசாரே

பத்ரியும், பிரசன்னாவும் ஜெயமோகனின்அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் என்ற புத்தகத்தைப் பற்றிப் பேசிய வீடியோ இங்கே:

இந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க

அல்லது

தொலைபேசி வழியே புத்தகம் வாங்க: Dial For Books - 94459 012345 | 9445 97 97 97

Friday, December 2, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: காஷ்மீர் - முதல் யுத்தம்

கிழக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களைப் பற்றிய சில உரையாடல்களை வீடியோ பாட்காஸ்டாக வெளியிட இருக்கிறோம். அந்த வரிசையில், இப்போது அச்சுக்குச் சென்றுள்ள காஷ்மீர் - முதல் யுத்தம் என்ற புத்தகம் பற்றிய பாட்காஸ்ட் இதோ.

Tuesday, November 15, 2011

கேப்டன் கோபிநாத்தின் புத்தக வெளியீடு

கேப்டன் கோபிநாத் ஆங்கிலத்தில் எழுதி வெளியான சுயசரிதை நூல் Simply Fly.

கிழக்கு பதிப்பகம் இந்நூலின் தமிழாக்கத்தை வெளியிடுகிறது, வானமே எல்லை என்ற தலைப்பில். இந்தப் புத்தகம் தயாராகிச் சில மாதங்கள் ஆகியிருந்தாலும், கோபிநாத்தே புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்பதால் புத்தகத்தை அச்சிடாது இருந்தோம்.

வரும் புதன் கிழமை, சென்னை ஸ்பென்சர் பிளாஸாவில், மாலை 6.30 மணிக்கு, கேப்டன் கோபிநாத் முன்னிலையில் யுனிவெர்செல் செல்பேசி விற்பனைச் சங்கிலி உரிமையாளர் சதீஷ் பாபு புத்தகத்தை வெளியிட, ட்ரைஜின் டெக்னாலஜிஸ் ல்மிடெட் நிறுவனத்தில் சேர்மன் ஆர். கணபதி புத்தகத்தைப் பெற்றுக்கொள்கிறார். அவர்கள் இருவரும் பேசுவார்கள். அதன்பின் கேப்டன் கோபிநாத்தும் தன் வாழ்க்கைப் பயணம் பற்றிப் பேசுவார். அனைவரையும் இப்புத்தக வெளியீட்டு விழாவுக்கு வரவேற்கிறோம்.

** ஏர் டெக்கான்-தான் இந்தியாவின் முதல் மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனம். விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம் ஏர் டெக்கானை வாங்கி, அதனை கிங்ஃபிஷர் ரெட் என்று பெயர் மாற்றி, சமீபத்தில் இழுத்து மூடிவிட்டது. இப்போது மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமே, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அரசின் நிதியுதவி தேடிச் சென்றுள்ளது.

** கோபிநாத்தின் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான டெக்கான் 360 (http://deccan360.in/) என்பதும் நிதி நெருக்கடியில் உள்ளது.

Monday, October 17, 2011

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - விமர்சனம் - துக்ளக், அக்டோபர் 12, 2011

12-10-2011 தேதியிட்ட துக்ளக் இதழில், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ஸ்பெக்ட்ரம் சர்ச்சை’ புத்தக விமர்சனம் வெளியாகியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை  புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-625-4.html

Saturday, September 17, 2011

இலங்கையில் கிழக்கு பதிப்பக ஷோரூம்

கிழக்கு பதிப்பக ஷோரூம், கொழும்பிலிருந்து கடுநாயக விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள வத்தளை என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

முகவரி: எண் 209, 1/1, நீர்கொழும்புச் சாலை, வத்தளை

தொடர்புகொள்ள: டியூக், +94714441234
மின்னஞ்சல்: lnenterprises.plc@gmail.com

சில படங்கள் இங்கே:

உணவின் வரலாறு - தொலைக்காட்சித் தொடராக

பா.ராகவன் எழுதி பத்திரிகைத் தொடராக வெளிவந்து பின்னர் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாகப் புத்தகமாக வெளியானது உணவின் வரலாறு. இப்போது அது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வாரா வாரம் தொடராக வெளிவருகிறது.

இதுபற்றிய பா. ராகவனின் அறிவிப்பு இங்கே.

புத்தகத்தை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சித் தொடரைப் பாருங்கள்.

Wednesday, September 7, 2011

உயிர் எழுத்து செப் 2011ல் வெளியாகியுள்ள ‘மருந்து’ நூல் மதிப்புரை

நூல் மதிப்புரை

மருத்துவப் பெருங்கதையாடல்களுக்குள் உருக்குலையும் உதிரிகள்: 'மருந்து’ நாவலை முன்வைத்து ஒரு வரைவு

இரத்தினக்குமார்

கேரள நவீனத்துவப் (ஆதுனிகத) படைப்பாளிகளில் மிக முக்கிய ஆளுமையாகப் பரிணமித்திருப்பவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா. இவரது படைப்புகள் மலையாள எழுத்துலகில் மட்டுமல்லாது தமிழ் இலக்கியப்பரப்பிலும் சமீபமாகக் கவனத்தைப் பெற்று வருகின்றன. மருத்துவராகப் பணிபுரியும் புனத்தில் குஞ்ஞப்துல்லா கோழிக்கோடு மாவட்டம் வடகராப்பள்ளிக்கருகே உள்ள ஒஞ்சியத்தில் பிறந்தவர் சிறுகதை, நாவல், பயணக்கட்டுரைகள், அனுபவக்குறிப்புகள் எனத் தன் எழுத்தின் எல்லைகளை விஸ்தரித்து வருகிறார். சாகித்ய அகாதெமி, முட்டத்து வர்க்கி விருது, விஸ்வதீபம் விருது போன்றவற்றைத் தன்னுடைய எழுத்து வாழ்க்கைக்காகப் பெற்றவர். இவரது மீஸான்கற்கள், கண்யாவனங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழில், தற்போது வெளிவந்திருக்கும் நாவல் ‘மருந்து’. இவரது படைப்புகளில் படைப்பூக்கம் மிகுந்த ஆக்கம் இது.

யமுனைக் கரையில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ஒரு பொது மருத்துவமனையின் அன்றாட நிகழ்வுகளே, மருந்து நாவலின் மைய எடுத்துரைப்பியலாக விரிவு கொண்டுள்ளன. நவீனச் சமூகம் தனது தேவைக்காகத் தோற்றுவித்துக்கொண்ட அறிவியல் தொழிற்பாடு மருத்துவமனை. அது மனிதனது சுயநலத்திற்காகவும் பொருள் சார்ந்த பெரு விருப்பத்திற்காகவும் தனிப்பட்ட பேராசைகளைப் பிரதிபலிக்கும் இடமாகிப் போயிருக்கும் அவலங்களைக் கச்சாப்பொருளாக்கியுள்ளது இந்நாவல். மருத்துவமனையை மையமிட்ட வாழ்வுசார்ப் புனைவுகள் குறைவு. சட்டென்று நினைவில் புரளக்கூடிய படைப்புகளான தாராசங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ (வங்க நாவல்), செகாவின் ‘பதினாறாம் நம்பர் வார்டு (சிறுகதை), அலெக்சாண்டர் சோலிசெனிட்சின் ‘கேன்சர் வார்டு’, நகுலனின் ‘வாக்குமூலம்’, சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். அந்த வரிசையை முன்னகர்த்தும் படைப்பாக்கமாக ‘மருந்து’ அமைந்திருப்பது கவனத்திற்குரியது.

நாவலின் தொடக்கம் அதீதப் புனைவுத்தன்மையுடையது. முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த ஒரு விதவையின் கிளிகள் நோய் தாக்கி இறந்ததைத் தொடர்ந்து அவளும் மரணத்தைத் தழுவுகிறாள். உருவும் அருவுமற்ற மாயமனிதன் ஒருவன் விதைகள் தேடி ஊருக்குள் நுழைந்து இரவும் பகலும் உயிர்களைக் குடிக்கின்றான். விதவையைத் தொடர்ந்து கிராம மனிதர்கள் அனைவரையும் காலரா வடிவில் அவன் அழிக்க, இறுதியில் பெருவெள்ளம் அனைத்தையும் வாரிச்சுருட்டிச் சென்றுவிடுகிறது. இரண்டு குடம் சாராயத்துடன், இரண்டு கடையர்கள் மட்டுமே எஞ்சுகின்றனர். யு.ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’, காம்யுவின் ‘பிளேக்’ ஆகிய நாவல்கள் காட்சிப்படுத்திய பெரும் நோய்ச் சித்திரத்தை 'மருந்து'வின் தொடக்கப்பகுதி கிளர்த்துகிறது. நோய் உடல்களை மட்டுமல்ல உலகில் மனிதவாடையைக்கூட உறிஞ்சிவிடும் வல்லமைபெற்றதென அவதானிக்கச் செய்கிறது இப்பகுதி. மண்ணில் புதைந்த கிராமத்தின் மணல்வெளிக்குமேல், கட்டப்பட்ட பெருங்கட்டடத்தில் நாவலின் பிந்திய கதைநிகழ்வுகள் பின்னப்படுகின்றன.

மருத்துவப் படிப்பிற்காக அப்பெரும் வளாகத்தில் நுழையும் தேவதாஸ், லட்சுமி இருவரது தோழமையை மையமிட்டு நகரும் கதாச்சுருள் அவர்களின் படிப்பு முடியும் தறுவாயில் நிறைவடைகிறது. தலைவலி முதல் பாலியல்வரை பதினாறு கட்டடங்களில் நடக்கும் மருத்துவ நிகழ்வுகளை நுண்ணிய விவரிப்புத்தன்மையில் பொழிந்துள்ளது நாவல். அப்பொழிதலிற்குப் பின்னிருக்கும் வாழ்வியல் நெருக்கடிகளும் இருத்தலுக்காக நடைபெறும் போராட்டங்களும் அவஸ்தைகளும் பயங்கரமானவை. மரணத்தையும் புலன்களின் நிலையாமையையும் மருத்துவத்துறை கட்டமைக்கும் நுண்ணரசியல் செயல்பாடுகளையும் இணைத்து கிருமிகளால் எளிதில் நசிவடைந்துவிடக்கூடிய இவ்வாழ்வு பெறும் மதிப்பு என்ன? என்ற கேள்வியை முன்வைத்து நகர்ந்துள்ளது மருந்து. கதாநிகழ்வுகள் பல்வேறு சம்பவங்களாகக் கோர்க்கப்பட்டுள்ளன. நட்பு, காதல், தந்தையின் ஆதிக்கம், ஊழல், உடல் வேட்கையைத் தணிக்க அலையும் உடல்கள், அதிகார மீறல்களால் அலைக்கழிக்கப்படும் தாதிகள், நோயாளிகளின் வாதைகள் எனச் சம்பவங்களை உணர்ச்சிகளின் சுழிப்புகளாக்கி லாவகமாகக் கையாள்வதோடு மருத்துவ சக்திகள் தனக்குக் கீழே இயங்கும் உதிரிகள்மீது அதிகாரம் செலுத்தும் இழிநிலைகளையும் கிளைக்கதைகளாகக் கட்டமைத்துள்ளது.

உடலியல் மருத்துவர் ஸ்ரீகுமார், டாக்டர்கள் க்வாஜா, தனுஜா, ஹெலன்சிங், ஹஸன், எக்ஸாமினர் சௌத்திரி, நுட்ப அறிவுத்திறம் பெற்ற சாந்தகுமார் ஆகிய துறைசார் மருத்துவர்களின் பின்னணிகளைப் பல்வேறு தளங்களில் பதிவு செய்கிறது. தனது சாதுப்பிராணிக்குக் கொடுக்கவேண்டிய மருந்தை, சோதிக்கத் தானே குடித்து உயிரிழந்து ஆய்விற்கு எலும்புக்கூடாய் நிற்கும் டாக்டர் ஹஸன், கஸல் கேட்டு அயற்சியை மறக்கும் டாக்டர் தனுஜாவின் கடும் உழைப்பு முன்னுதாரணமானவைகள். பிணவறையில் சிதைந்த உடல்களோடிருக்கும் சட்டர்ஜி, இசைநிகழ்ச்சிகளையும் அழகிய பூந்தோட்டத்தையும் நடத்திவருவது வாழ்வு தரும் முரண். தன் அழகையும் இளமையையும் தனிமையில் உழற்றி வரும் டாக்டர் மேட்ரன் ஹெலன் சிங், மனதில் கசியும் கடந்துபோன காதலை அகற்றமுடியாமல் பெத்தடின் வழி தனது பிரக்ஞையின் நூலிழைகளை முடைந்து நசியும் மருத்துவர். மேஜர் சர்ஜன் ஆச்சாரியார் லஞ்சம், பாலியல் சுரண்டலுடன் ஆதிக்க மனம் படைத்தவர். அறுவைச் சிகிச்சையில் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே ருசிக்கத் தெரிந்தவர். இவ்வெற்றி பிசகும்போது செல்ல வளர்ப்பு நாயை அறுவைசிகிச்சை செய்யும் மனோவியல் சிக்கலுக்குள்ளாகிறார். அலோபதி மருத்துவம் மனிதனை இயந்திரத்தனமாக்கிவிடுகிறது என்பதற்கு ஆச்சாரியார் மாதிரி. மருத்துவத் துறை தந்த புகழ் அவரை மிருக நிலைக்குக் கொண்டு செல்கிறது. தனது நோய்க்கு, பிறர் மருத்துவம் பார்ப்பதைக்கூட ஏற்றுக் கொள்ளமுடியாமல் நோய்முற்றி மரணிக்கிறார். மருந்தும் நோயைக் குணப்படுத்தாது என்பதற்கு ஆச்சாரியார் ஒரு குறியீடு. “மருந்தும் மரணமும் இணை கலந்த ஒரு பெரிய உலகம். மரணம் நுழைந்துவிட்டால் அங்கு மருந்துக்கு எந்த மதிப்பும் இல்லை. என்றாலும் மரணத்துக்கு மருந்தைக் கண்டால் எப்போதுமே ஒரு பயம்தான். மருந்தின் உலகத்தில் மரணம் ஒரு கழுகைப்போல் வட்டமிட்டுக்கொண்டேஇருக்கும். இறுதியில் வெற்றி பெறுவது மரணம்தான்”...(ப.344) என்ற சொல்லாடல்கள் நாவலின் மையம். உடல்களை முழுமையாகப் படித்த மருத்துவர்கள் தங்களது உடல்களைக் காப்பாற்ற முடியாது நோய்க்கிருமிகளால் சிதைவது மருத்துவத்துறையின் யதார்த்தம். மருத்துவத்துறையின் ஜாம்பவான், ஆச்சாரியாரால் தன் நோயையும் மரணத்தையும் தன்னிலிருந்து விலக்கமுடியவில்லை என்ற புனைவுத்தருக்கம் நுட்பமானது. மனிதன் சேகரிக்கும் புகழ், பணம், அதிகாரம் என்னும் மாய பிம்பங்களைக் கிருமிகள் கலைத்துவிடுகின்றன. அந்தப் பிம்பம் அவர்கள் குடும்பத்தையும் அமைதிப்படுத்துவதில்லை. ஆச்சாரியாரின் மகளும் பயிற்சி மருத்துவருமான இலட்சுமி, தேவதாஸைக் காதலித்துவிட்டுத் தந்தையின் அதிகாரக் கோடுகளைத் தாண்டமுடியாமல் விருப்பமற்ற ஆணை மணந்து, முதல் புணர்வை பலாத்காரமாக உணரும் எத்தனையோ இந்தியப் பெண்களின் பிரதிநிதியாகிப் போகிறாள். தேவதாசும் மனப் பிறழ்விற்குள்ளாகிறான். மருத்துவர்களின் பணிகளும் சரிவுகளும் விரிவாக எழுதப்பட்டுள்ளதால் அவை மாறுபட்ட அனுபவங்களைத் தருகின்றன.

காரிருளில் மூழ்கிக் கிடக்கும் மருத்துவமனையின் அறைகளுக்குள் உடல்வாதைகளால் விழித்துக்கொண்டிருக்கும் நோயாளிகளின் பயங்களும் ஆசைகளும் கடும் துயர்களாகப் பெரும் கட்டடங்கள் முழுதும் கசிந்துகொண்டிருக்கின்றன. வயிற்றுவலியால் இரவெல்லாம் ஓலமிடும் ஜான் பல்தேவ் மிர்ஸா ஒருமுறைகூட அம்மாவையோ, உறவினர் பெயரையோ அழைக்காது அநாதையாக மரணிப்பவன். என்ன நோயென்றே அறியாது நோயளியான ஒருவனின் கதை, (200நோய்களுக்கு மருத்துவத்துறையில் மருந்தில்லையாம்) பைபிளைத் திறந்தாலும் சாத்தான் வெளிக்கிளம்புவதைத் தரிசிக்கும் ஒரு சீக்காளியின் பரிதாபம் என உருக்குலையும் உடல்களிலிருந்து கசப்புகள் பொங்கிப் பிரவகிக்கின்றன. வயிற்று வலியுடன் வரும் மூதாட்டி தொப்புளோடு தங்க நகைகளை மூட்டையாகக் கட்டித் தொடைகளுக்கிடையே தொங்கவிட்டிருக்கிறாள். தனது இறப்புச் சடங்கிற்கு இது இல்லையென்றால் என் பிள்ளைகள் என்னை அழுகிய பிணமாக விட்டுவிடுவார்கள் என்று அவள் அரற்றுவது முதுமையின் அவலம். கணவனால் காயப்படுத்தப்பட்ட இரவுகளில் தன்னை நகைகளால் அலங்கரித்து கண்ணாடிமுன் பேசும் டாக்டர் ஆச்சாரியாவின் மனைவி இராணியம்மாளின் உளச்செயல்பாட்டை எப்படிப் புரிந்துகொள்வது. பெண்கள் தங்கள் சிக்கல்களுக்கு தங்கம் தீர்வாக அமையும் என்று நம்பி வாழும் நம் சமூக அமைப்பு எத்தகையது?. மூக்கிலும் மூத்திரப் புரைகளிலும் சொருகப்பட்ட குழாய்களுடன் வாந்தியிலும் மலத்திலும் நீந்திக்கிடக்கின்றன துயர்கள். போர்வையால் மூடப்பட்டு வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களில் கிடத்தப்பட்டிருக்கும் சலனமற்ற உடல்கள், நீக்கமற நிறைந்திருக்கும் மருந்தின் நெடி, சிதறிக்கிடக்கும் மருத்துவக் கழிவுகள், இரத்தக் கவிச்சிகள், பேயாக இயங்கும் ஆயாக்கள், மருத்துவமனை முழுதும் பதற்றத்துடன் அலைந்து கொண்டிருக்கும் உறவினர்கள் என இந்தியாவின் நலிந்துபோன மருத்துவமனைகளின் மாதிரி, இக்காட்சிச் சித்தரிப்புகள்.

குறிப்பாகப் பிரசவ வார்டு பற்றிய விவரணைகள் படிப்பவர்களை நெருடச்செய்வன. பாதுகாப்பற்ற மருத்துவ அறைகளிலும் படுக்க இடமில்லா வராண்டாக்களிலும் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகளின் ஓலங்களும் நின்று பிதுக்கித்தள்ளும் பிரசவங்களும் மனதைப் பிசைவன. அகல வைத்த கால்களுக்கிடையே கனமான ஏதோவொரு பொருள் போன்று சொத்தென்று விழும் சத்தங்களும் கத்திகளால் அவசரகதியில் பிளக்கப்படும் கர்பப்பைகளும் மெல்ல வாய்பிளக்கும் முட்டிய வயிறுகளும் கொப்புளிக்கும் பச்சை இரத்தமும் படிப்பவர் மனதில் கலவரத்தை ஏற்படுத்துவன. மருத்துவம் என்ற பேரில் உடல் சின்னாபின்னப்படுத்தப்படும் கூடங்களாகிப் போய்விட்டன மருத்துவமனைகள். மருத்துவ வாழ்வு இங்கு ஆவணமாக்கப்பட்டுள்ளது. பெண் ஈற்றெய்தபின் ஆண் புணர்வதற்கேற்ப பிறப்புறுப்பை ஒழுங்குபடுத்தும் டாக்டர் தனுஜா “இத்தனை நேரம் நான் செஞ்சதெல்லாம் உன் குழந்தைக்காக இனிமே செய்யப்போறது உன்னோட புருஸனுக்காக” என்றுரைப்பது பெண்ணுடல் சிதையும்போதும் ஆணுக்காகவே தயாரிக்கப்படுகிறது என்பது கசப்பான உண்மைதான். உடல்சிதைவுகளைப் பற்றிய பல பகுதிகள் அப்பட்டமாக எழுதப்பட்டிருந்தாலும் அதற்கெதிர்நிலையில் வைத்து உடல் உறுப்புகளின் ஆற்றல்களும் விதந்துரைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளங்கையளவே இருக்கும் கர்பப்பை நெஞ்சுவரை விரிந்து பெருகும் ஆச்சர்யம், இரத்தமும் சதையுமாகிப்போன மூளையை லட்சுமி தொட்டு ‘வெர்ஜின் டச்’ என்பது போன்ற பல பகுதிகள் ஆசிரியரின் உடலியல் குறித்த துல்லியப் பார்வையைக் காட்டுகின்றன. உடல் உறுப்புகள் குறித்த விவரணைகள் தூலமாக அமைந்திருக்கின்றன. இது வாசகனை அவனது உடல்லுக்குள் உள்நோக்கிப் பார்க்கத் தூண்டும். வாசகன் வரிகளுக்கு ஊடாகப் பயணித்து உடலின் உள்ளுறுப்புகளுக்குள் நடமாடத் தொடங்கிவிடும் அனுபவம் நாவலில் விரவிக் காணப்படுகிறது.

கடைநிலை ஊழியர்களின் பணிகுறித்து நாவல் வரையும் உலகம் அலாதியானது. சடலங்களை இழுத்துப்போட்டு சுத்தம் செய்து பிணவறையையே இருப்புக் கூடமாக்கி உயிர் வாழ்கிறான் சோனா. மண்டையோட்டைத் தேங்காயை உடைப்பது போன்று உடைத்து மூளையை நோண்டி எடுப்பது அவனது அன்றாடத்தொழில். அதிலிருந்து அவன் விரும்பினாலும் விலகமுடியாதவாறு தனது வாழ்வைச் சடலங்களோடு தகவமைத்துக்கொண்டுவிட்டான். ஓய்வில்லாமல் தரைகளைத் துடைத்து, சாக்குகளில் குப்பைகளைச் சேகரித்து, உலவும் போபட், கோணிப்பைகளுடன் சதா அலைந்துகொண்டிருப்பவனாக வடிவுகொண்டுள்ளான். மேரியின் கள்ளங்கபடமற்ற தாதிப்பணி, இறை நம்பிக்கைமிக்கவளானாலும் சக தாதியும் தோழியுமான குஞ்சம்மாளின் ஆசைகளுக்குத் தன்னை, தனது உடலை இசைந்து கொடுக்கும் நட்பிற்குரியவள். குஞ்சம்மாள் பெருங்குற்றங்கள் இழைத்தபோதும் மேரி இறுதிவரை அன்பு பாராட்டுபவளாகவேயிருக்கிறாள். தொழிலதிபர், கணவன், சப்இன்ஸ்பெக்டர், மேரி எனப் பலர் வழியில் தனது காமத்தைக் கடக்க முயல்கிறாள் குஞ்சம்மா. ஆணுலகம் ஏற்படுத்தும் நெருக்கடிகளால் தனது குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்துச் சிறைதண்டனை பெறுகிறாள். சிறையிலிருந்து வெளிவந்து இயல்புமாறாமல் அவள் வாழமுற்படுவது வாழ்வுதரும் ஆச்சர்யங்கள். குஞ்சம்மாள் வார்ப்பு இந்நாவலில் நன்கு கூடிவந்துள்ளது. வாட்ச்மேன் பியாரேலால் நூற்றுக்கணக்கான சைக்கிள்களை ஒழுங்குபடுத்திக் கசங்குபவன். களப்பலிக்காக தவளைகளைக் கூட்டம் கூட்டமாகப் பராமரித்து வாழும் நிலையில் ஒருவன் என விளிம்புக்கதையாடல்கள் நுட்பமாக கவனப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றைய நவீனச் சமூகத்தில் மருத்துவமனையும் மருத்துவர்களின் பணியும் எத்தகையது? எந்த அறமதிப்பீட்டில் அணுகுவது? என்ற கேள்விகளுக்கு எதிர்வினையாற்றியுள்ளது நாவல். இதில் வரும் பெரும்பாலான மருத்துவ மாந்தர்கள் அதிகாரமிக்கவர்களாக, சுயநலவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். நாவல் முழுமையும் மருத்துவமனை குறித்த ஒரு விமர்சனம் எள்ளலாக அமைந்துகிடப்பது நாவலின் பலம். எப்பொழுதும் சம்பள உச்சவரம்புகளைச் சுற்றி அமையும் மருத்துவர்களின் உரையாடல்கள் அவர்களது தொழில்பற்றைக் காட்டுகின்றன. ‘அறிவுஜீவிங்க எருமைமாடுங்க’ என்ற லட்சுமியின் சொற்கள் இங்கு ஆழமானவை. பூக்கோ மருத்துவமனை, சிறைச்சாலைகள் அதிகாரவெளிகளாக இயங்குகின்றன என விமர்சிக்கிறார். இந்நாவல் அவற்றைக் கதையாடல்களாகப் புனைந்துள்ளது. நோயாளிகள் இராணுவத்திற்கு ஆளெடுப்பதுபோல தரம்பிரிக்கப்பட்டு பச்சைச்சீருடை வழங்கி, தனித்தனி எண்களாலே அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு ஓர் அமைப்புக்குள் அவர்களை, ஒழுங்குபடுத்தி அதற்கேற்ப ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதென்பது சிறைச்சாலைக்கு நிகரான ஒரு செயல்பாடாகத்தானிருக்கிறது. நோயாளிகளை வரிசையில் நிற்கவைத்து, மருத்துவர்களை வழிபாட்டுக்குரியவர்களாக்கி மருத்துவத்தொழில் புனிதமாக ஆக்கப்பட்டுள்ளதை நாவல் தொட்டுச்செல்கிறது. மருத்துவமனையில் நுட்பமான அதிகாரவெளி இயங்குவதை நாவலின் சில பகுதிகள் காட்டுகின்றன. மருத்துவப்பணிசார்ந்து ஒரு மாற்று உரையாடலுக்கு இப்பகுதிகள் தளம் அமைத்திருக்கின்றன. டாக்டர் வரும் நேரத்திற்கு முன்பாகவே நோயாளிகள் வாயைத்திறந்து வைத்திருக்கின்றனர். தெர்மாமீட்டரை முரட்டுத்தனமாக நோயாளிகளின் வாய்க்குள் வைத்து அழுத்துகின்றனர். தன்னைச் சுதந்திரத் தன்னிலைகளாகக் கருத உரிமையில்லாத நோயளிகளும் மாணவர் சமூகமும் மருத்துவ அமைப்பில் சூழ்நிலைக் கைதிகளாக, அடிமைகள் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொருள் இழப்பு, பழிவாங்கப்படுதல், பாலியல் சோரம், அவமானங்கள் இவற்றை வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வேண்டியதுதான் இன்றைய நிலை. 'நாயைவிட மோசமான நாய்ங்க’ (ப. 53) என்ற ஆசிரியரின் வசைகளை ஏற்றுக்கொண்டு ஆசிரியர்கள்முன் குலைந்து நிற்கவேண்டியதுதான் மாணவர்களின் கடமை. நோயாளியின் அடிப்படையான கேள்விகளைக்கூட மருத்துவர்கள் உதாசீனப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்வதுதான் நோயாளிகளின் கடமை.

மருத்துவக்கூடங்களைச் சுற்றிப் படரும் பல நிகழ்வுகளை ஆங்காங்கே அமானுஷ்யத்தன்மையில் எழுதியிருப்பது நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகிறது. எழுத்துகளற்ற புத்தகத்திலிருந்து கண்கள் திறப்பது, மேஜையில் படுத்திருக்கும் சடலம் எழுந்து கண்ணீர் உதிர்ப்பது, தன் உடலிலுள்ள காயங்களைப் பார்த்து அழுவது, உடலிலிருந்து இரத்தம் பீய்ச்சுவது போன்றவை மீமெய்ப் புனைவுகள். இரவுகளில் சடலங்கள் எழுந்து தங்களின் துயரங்களை உரைப்பதோடு, இரத்த வெள்ளத்தில் சடலங்கள் பிரேத கானம் பாடி ஆடுவதென மரணத்திற்குப்பின்னான மர்மங்களையும் சூட்சுமங்களையும் எழுத முற்பட்டிருப்பது சிறப்பு. உயிர்களைக் காவுவாங்க எல்லா இடங்களிலும் உருமாறித் திரிந்து கொண்டிருக்கும் மரணதேவனை அரூபமாகக் காட்டியுள்ளது நாவல். மருத்துவமனையில் மரணிக்கப் போகும் நோயாளிகளின் முன் அரூபி (எமன்) தோன்றி அமைதியாக உலவுகிறான். இங்மர் பெர்க்மெனின் ஜிலீமீ ஷிமீஸ்மீஸீtலீ ஷிமீணீறீ படத்தில் பிளேக் நோய் தாக்கி இறக்கப்போகும் மனிதர்களை இழுத்துச் செல்ல, அவர்களைத் தொடர்வதும் அவர்களோடு பகடையாடுவதுமான மரணதேவனை நினைவுறுத்துகிறது இது. நீக்கமற எங்கும் மீந்து கிடக்கும் சாவின் வெளியை மையமாகக் கொண்டு சுழலும் இவ்வாழ்வை மிகைபுனைவுத் தன்மையிலே எழுத முடியுமென்று தோன்றுகிறது.

விதவையின் மரணத்திலும் காட்டாற்றின் பேரழிவிலும் தொடங்கும் நாவல் இறுதியில் குஞ்சம்மாள் புதைத்த குழந்தையை, மேரி தோண்டியெடுத்துப் பாலூட்ட, அதைப் பார்த்து யமுனை பெருமூச்சுவிடுவதாக முடித்திருப்பது அற்புதம். மரணம் ஜ் பிறப்பு என்ற இரண்டு முனைகளுக்கிடையேயான மானுடச் சுழற்சியை மையப்படிமமாக்கி அதற்குப் பின்புலமாக ஆற்றைச் சித்திரித்திருப்பது இந்நாவலின் முக்கிய அம்சம். மரணத்தில் தொடங்கிப் பிறப்பில் முடியும் அகிரா குரசேவாவின் ஸிணீsஷீனீணீஸீ திரைப்படத்தில் விறகு வெட்டியால் கொலையாளி யார்? என்னும் உண்மையை இறுதிவரை அறிய முடியாது, மானுடம் படர்த்தும் பொய்மைகளினால் அவநம்பிக்கையே அவனது வாழ்வாகிப்போனாலும் இறுதியில் கானகத்தில் கண்டெடுக்கப்பட்ட சிசுவை வளர்க்க அந்த விறகுவெட்டி அதை நம்பிக்கையுடன் எடுத்துச் செல்வதும் மருந்து நாவலில் கன்னி மேரி குழந்தைக்குப் பாலூட்டுவதும் உயிர் வாழ்தலின் ஆதார இச்சைகள். அவ்விச்சைகளே மானுடத்தை வாழ நிர்பந்திக்கின்றன. பெரும் சரிவுகளிலும் அவமானங்களிலும் வாழ்வு தூர்ந்து போனாலும் மனிதன் வாழப்போராடுவதே வாழ்வின் ஆதுரம். அதுவே உயிரியங்கியலின் ஆதார இச்சையும்கூட. இந்த இச்சைக்காக வாழப் போராடும் மனிதத்திரள்களின் பாடுகளையும் துயர்களையும் இந்நாவல் கலையாக்கியுள்ளது.

நாவலின் பலவீனங்களாக சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. தாராளமயத்திற்குப்பின் மருத்துவமனைகள் நட்சத்திர ஹோட்டல்களாக வடிவம் கொண்டுள்ளன. இந்தியாவில் பணம் கொழிக்கும் தொழில்களில் மருத்துவத் தொழில் முதன்மையானது. பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் மருந்து வியாபாரிகளும் மருத்துவத் தொழிலை நிர்ணயிக்கும் சக்திகளாக வலம் வருகின்றனர். அவர்களது தயவு தாட்சணையைப் பொருத்தே ஒரு நாட்டில் நோயாளிகளின் நிலை தீர்மானிக்கப்படுகின்றது. காலனியம் அமைத்துக்கொடுத்து அலோபதி மருத்துவம் பெரும் நிறுவனமாகிப்போய் வியாபாரமாகிவிட்ட நிலையில் அங்கு தொழில்புரியும் மருத்துவர் பணிகளும் மனிதாபிமானமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் அலோபதி மருத்துவத்தைப் பின்பற்றும் மருத்துவமனைகள், இந்தியாவில் பெரும் கொள்ளைக்கூடங்களாக உருமாறி வருகின்றன. இவை குறித்த எந்த ஒரு குறிப்பும் நாவலில் இல்லை. அலோபதி மருத்துவமுறைகள் இன்று உலகம் முழுவதும் மறுபரிசீலனைக்கு உள்ளாகி வருகின்றன. பாரம்பரிய மரபு வழிப்பட்ட அந்தந்த நிலங்களுக்கேற்ற தாவரங்கள், உணவுமுறைகள், தட்பவெப்பம் போன்ற பின்புலங்களில் மருத்துவமுறைகள் பேசுபொருளாகி வருகின்றன. இவற்றை நாவல் தொட்டுக் காட்டியாவது சென்றிருக்கலாம். பல நூற்றாண்டுப் பாரம்பரியமிக்க இந்திய மருத்துவமுறைகளான மூலிகை, ஆயுர்வேதம், சித்தா போன்றவை குறித்து விவாதிப்பதற்கு ஏற்ற எளிய வழிகளைப் புனைவுப்பரப்பு தன்னகத்தே கொண்டிருந்தாலும் அவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மருத்துவமனைகளின் அமைவிடங்களுக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு, நகரத்திற்கும் மருத்துவமனைக்கும் உள்ள நெருக்கங்கள் எளிய மனிதருக்கும் இந்நகர்சார் நவீனக் கட்டடங்களுக்கும் உள்ள உறவற்றநிலை எதுவும் விவாதிக்கப்படவில்லை. எளிய மனிதர்களுக்கு இக்கட்டடங்களின் அமைப்பே அச்சத்தைப் படர்த்துகிறது. மருத்துவக் கட்டடங்களுக்கு வெளியே புனைவு சிறிதும் நகரவில்லை.

நோயாளிகளோடு கட்டடங்களில் வெளிப்பகுதிகளிலும் வராண்டாக்களிலும் இரவுகளைக் கழிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உளைச்சல்கள் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் தடைகள், குழப்பங்கள், மனப்பதற்றங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. குறிப்பாகப் பொருளாதார நெருக்கடிகள் குறித்தாவது குறைந்தபட்சம் பேசியிருக்கலாம். ஒரு நோயாளியைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தின் குழந்தைமுதல் பெரியவர்வரை படும் துயரம் கடுமையானது. ஒரு கிருமி அல்லது ஒரு கொசு உருவாக்கும் பெரும்நோய் ஒரு குடும்பத்தையே நடுத்தெருவிற்குக் கொண்டுவந்துவிடுகிறது. கடனாளிகளாக ஊரைவிட்டு ஓடும் குடும்பங்கள், குழந்தைகளின் கல்வித்தடைகள், முதியவர்களின் கசங்கல்கள் என நோய் வரையும் குடும்பச்சிதைவுகள் விரிவானவை. இதன் தாத்பர்யங்கள் எள்ளளவும் இந்நாவலில் இல்லை. இதனால் இந்நாவல் முழுமையடையாது மருத்துவ வாழ்வின் ஒரு பகுதியில் மட்டும் சுழன்றுவிட்டு நின்று விடுகிறது.

சுதந்திர இந்தியாவின் மருத்துவ ஊழல்கள் புகழ்பெற்றவை. பணி நியமனங்கள், கட்டடவேலைகள், மருந்துப் பரிமாற்றங்கள், வாங்குவது விற்பது என அனைத்திலும் சுரண்டல் புரையோடியுள்ளது. அரசுச் செயல்பாடு குறித்து நாவல் பெரும் கள்ளமௌனம் சாதிக்கிறது. ஊடகங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் இடையே நடக்கும் இரகசிய பேரங்கள் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. பலமடங்கு விற்கப்படும் மருந்துப் பொருள்கள், போலி மருந்துகள், எளிய நோயாளிகளின் உயிர்களோடும் உடல்களோடும் விளையாடும் வியாபாரிகளின் மோசடிகள் எதையும் பொருட்படுத்தவில்லை. இவையெல்லாம் பட்டவர்த்தனமாக அனைவருக்கும் தெரிந்த உண்மைகள். மருத்துவராக இருக்கும் ஆசிரியர் இவற்றை முழுமையும் அறிந்தும் தவிர்த்துவிட்டாரா எனத் தெரியவில்லை. மருந்து குறித்த பல்வேறுபட்ட பரிமாணங்களைப் பிந்திய முதலாலாளிய சூழலில் வைத்து விவாதித்திருந்தால் நாவலுக்கு வேறொரு பரிமாணம் கிட்டியிருக்கும். அப்பொழுதுதான் மருந்து என்ற தலைப்பு பொருந்தி வரும். எனவே, மருந்து என்பதைவிட மருத்துவமனை என்ற தலைப்பே பொருத்தமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. தாவித் திரியும் முயல் தொகுதிகள், காலிமனைக் கூண்டுகளில் அடைபட்ட நாய்கள், சுண்டெலிகள், பன்றிகள் போன்ற சிற்றுயிர்கள் அலோபதி மருத்துவமனைகள் என்னும் பேரிருப்பைத் தக்கவைக்கக் கொடூரமாகச் சிதைக்கப்படும் சூழல் மருத்துவச் சீரழிவுகளின் ஒரு பகுதி. இவற்றை ஓரிரு இடங்களில் தொட்டுச்செல்கிறது நாவல். இதை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். கானுயிர்களும் உலகறியா சாமான்ய மனிதர்களையும் மருத்துவத்துறைச் சோதனை உடல்களாகச் சிதைத்து வரும் செய்திகள் நிறைய வந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு படைப்பாளியின் கவனம் அவற்றின் மீதும் குவிவது இயல்பாக இருக்கவேண்டிய ஒன்று. இவையெல்லாம் இந்நாவலின் பின்னடைவுகள்.

இருத்தலுக்கான போராட்டங்கள் உணர்வெழுச்சி மிக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன. மருத்துவமனை குறித்த நிகழ்வுகள் எழுத்தாளரின் தொழில் அனுபவத்தில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விரிவாக வரையப்பட்டுள்ளன. உடல்சார் கையறுநிலை உரையாடல்கள் எள்ளல் தொனியில் நாவல் முழுவதும் இழைந்துகொண்டிருக்கின்றன. இருத்தலியல் சித்தரிப்புகள், தத்துவார்த்தக் கூறுமுறைகள், மிகைபுனைவுத் தன்மைகள் (கேரள நவீனத்துவப் (ஆதுனிகத) படைப்பாளிகளில் மிக முக்கிய ஆளுமையாகப் பரிணமித்திருப்பவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா. இவரது படைப்புகள் மலையாள எழுத்துலகில் மட்டுமல்லாது தமிழ் இலக்கியப்பரப்பிலும் சமீபமாகக் கவனத்தைப் பெற்று வருகின்றன. மருத்துவராகப் பணிபுரியும் புனத்தில் குஞ்ஞப்துல்லா கோழிக்கோடு மாவட்டம் வடகராப்பள்ளிக்கருகே உள்ள ஒஞ்சியத்தில் பிறந்தவர் சிறுகதை, நாவல், பயணக்கட்டுரைகள், அனுபவக்குறிப்புகள் எனத் தன் எழுத்தின் எல்லைகளை விஸ்தரித்து வருகிறார். சாகித்ய அகாதெமி, முட்டத்து வர்க்கி விருது, விஸ்வதீபம் விருது போன்றவற்றைத் தன்னுடைய எழுத்து வாழ்க்கைக்காகப் பெற்றவர். இவரது மீஸான்கற்கள், கண்யாவனங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழில், தற்போது வெளிவந்திருக்கும் நாவல் ‘மருந்து’. இவரது படைப்புகளில் படைப்பூக்கம் மிகுந்த ஆக்கம் இது.

யமுனைக் கரையில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ஒரு பொது மருத்துவமனையின் அன்றாட நிகழ்வுகளே, மருந்து நாவலின் மைய எடுத்துரைப்பியலாக விரிவு கொண்டுள்ளன. நவீனச் சமூகம் தனது தேவைக்காகத் தோற்றுவித்துக்கொண்ட அறிவியல் தொழிற்பாடு மருத்துவமனை. அது மனிதனது சுயநலத்திற்காகவும் பொருள் சார்ந்த பெரு விருப்பத்திற்காகவும் தனிப்பட்ட பேராசைகளைப் பிரதிபலிக்கும் இடமாகிப் போயிருக்கும் அவலங்களைக் கச்சாப்பொருளாக்கியுள்ளது இந்நாவல். மருத்துவமனையை மையமிட்ட வாழ்வுசார்ப் புனைவுகள் குறைவு. சட்டென்று நினைவில் புரளக்கூடிய படைப்புகளான தாராசங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ (வங்க நாவல்), செகாவின் ‘பதினாறாம் நம்பர் வார்டு (சிறுகதை), அலெக்சாண்டர் சோலிசெனிட்சின் ‘கேன்சர் வார்டு’, நகுலனின் ‘வாக்குமூலம்’, சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். அந்த வரிசையை முன்னகர்த்தும் படைப்பாக்கமாக ‘மருந்து’ அமைந்திருப்பது கவனத்திற்குரியது.

நாவலின் தொடக்கம் அதீதப் புனைவுத்தன்மையுடையது. முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த ஒரு விதவையின் கிளிகள் நோய் தாக்கி இறந்ததைத் தொடர்ந்து அவளும் மரணத்தைத் தழுவுகிறாள். உருவும் அருவுமற்ற மாயமனிதன் ஒருவன் விதைகள் தேடி ஊருக்குள் நுழைந்து இரவும் பகலும் உயிர்களைக் குடிக்கின்றான். விதவையைத் தொடர்ந்து கிராம மனிதர்கள் அனைவரையும் காலரா வடிவில் அவன் அழிக்க, இறுதியில் பெருவெள்ளம் அனைத்தையும் வாரிச்சுருட்டிச் சென்றுவிடுகிறது. இரண்டு குடம் சாராயத்துடன், இரண்டு கடையர்கள் மட்டுமே எஞ்சுகின்றனர். யு.ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’, காம்யுவின் ‘பிளேக்’ ஆகிய நாவல்கள் காட்சிப்படுத்திய பெரும் நோய்ச் சித்திரத்தை 'மருந்து'வின் தொடக்கப்பகுதி கிளர்த்துகிறது. நோய் உடல்களை மட்டுமல்ல உலகில் மனிதவாடையைக்கூட உறிஞ்சிவிடும் வல்லமைபெற்றதென அவதானிக்கச் செய்கிறது இப்பகுதி. மண்ணில் புதைந்த கிராமத்தின் மணல்வெளிக்குமேல், கட்டப்பட்ட பெருங்கட்டடத்தில் நாவலின் பிந்திய கதைநிகழ்வுகள் பின்னப்படுகின்றன.

மருத்துவப் படிப்பிற்காக அப்பெரும் வளாகத்தில் நுழையும் தேவதாஸ், லட்சுமி இருவரது தோழமையை மையமிட்டு நகரும் கதாச்சுருள் அவர்களின் படிப்பு முடியும் தறுவாயில் நிறைவடைகிறது. தலைவலி முதல் பாலியல்வரை பதினாறு கட்டடங்களில் நடக்கும் மருத்துவ நிகழ்வுகளை நுண்ணிய விவரிப்புத்தன்மையில் பொழிந்துள்ளது நாவல். அப்பொழிதலிற்குப் பின்னிருக்கும் வாழ்வியல் நெருக்கடிகளும் இருத்தலுக்காக நடைபெறும் போராட்டங்களும் அவஸ்தைகளும் பயங்கரமானவை. மரணத்தையும் புலன்களின் நிலையாமையையும் மருத்துவத்துறை கட்டமைக்கும் நுண்ணரசியல் செயல்பாடுகளையும் இணைத்து கிருமிகளால் எளிதில் நசிவடைந்துவிடக்கூடிய இவ்வாழ்வு பெறும் மதிப்பு என்ன? என்ற கேள்வியை முன்வைத்து நகர்ந்துள்ளது மருந்து. கதாநிகழ்வுகள் பல்வேறு சம்பவங்களாகக் கோர்க்கப்பட்டுள்ளன. நட்பு, காதல், தந்தையின் ஆதிக்கம், ஊழல், உடல் வேட்கையைத் தணிக்க அலையும் உடல்கள், அதிகார மீறல்களால் அலைக்கழிக்கப்படும் தாதிகள், நோயாளிகளின் வாதைகள் எனச் சம்பவங்களை உணர்ச்சிகளின் சுழிப்புகளாக்கி லாவகமாகக் கையாள்வதோடு மருத்துவ சக்திகள் தனக்குக் கீழே இயங்கும் உதிரிகள்மீது அதிகாரம் செலுத்தும் இழிநிலைகளையும் கிளைக்கதைகளாகக் கட்டமைத்துள்ளது.

உடலியல் மருத்துவர் ஸ்ரீகுமார், டாக்டர்கள் க்வாஜா, தனுஜா, ஹெலன்சிங், ஹஸன், எக்ஸாமினர் சௌத்திரி, நுட்ப அறிவுத்திறம் பெற்ற சாந்தகுமார் ஆகிய துறைசார் மருத்துவர்களின் பின்னணிகளைப் பல்வேறு தளங்களில் பதிவு செய்கிறது. தனது சாதுப்பிராணிக்குக் கொடுக்கவேண்டிய மருந்தை, சோதிக்கத் தானே குடித்து உயிரிழந்து ஆய்விற்கு எலும்புக்கூடாய் நிற்கும் டாக்டர் ஹஸன், கஸல் கேட்டு அயற்சியை மறக்கும் டாக்டர் தனுஜாவின் கடும் உழைப்பு முன்னுதாரணமானவைகள். பிணவறையில் சிதைந்த உடல்களோடிருக்கும் சட்டர்ஜி, இசைநிகழ்ச்சிகளையும் அழகிய பூந்தோட்டத்தையும் நடத்திவருவது வாழ்வு தரும் முரண். தன் அழகையும் இளமையையும் தனிமையில் உழற்றி வரும் டாக்டர் மேட்ரன் ஹெலன் சிங், மனதில் கசியும் கடந்துபோன காதலை அகற்றமுடியாமல் பெத்தடின் வழி தனது பிரக்ஞையின் நூலிழைகளை முடைந்து நசியும் மருத்துவர். மேஜர் சர்ஜன் ஆச்சாரியார் லஞ்சம், பாலியல் சுரண்டலுடன் ஆதிக்க மனம் படைத்தவர். அறுவைச் சிகிச்சையில் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே ருசிக்கத் தெரிந்தவர். இவ்வெற்றி பிசகும்போது செல்ல வளர்ப்பு நாயை அறுவைசிகிச்சை செய்யும் மனோவியல் சிக்கலுக்குள்ளாகிறார். அலோபதி மருத்துவம் மனிதனை இயந்திரத்தனமாக்கிவிடுகிறது என்பதற்கு ஆச்சாரியார் மாதிரி. மருத்துவத் துறை தந்த புகழ் அவரை மிருக நிலைக்குக் கொண்டு செல்கிறது. தனது நோய்க்கு, பிறர் மருத்துவம் பார்ப்பதைக்கூட ஏற்றுக் கொள்ளமுடியாமல் நோய்முற்றி மரணிக்கிறார். மருந்தும் நோயைக் குணப்படுத்தாது என்பதற்கு ஆச்சாரியார் ஒரு குறியீடு. “மருந்தும் மரணமும் இணை கலந்த ஒரு பெரிய உலகம். மரணம் நுழைந்துவிட்டால் அங்கு மருந்துக்கு எந்த மதிப்பும் இல்லை. என்றாலும் மரணத்துக்கு மருந்தைக் கண்டால் எப்போதுமே ஒரு பயம்தான். மருந்தின் உலகத்தில் மரணம் ஒரு கழுகைப்போல் வட்டமிட்டுக்கொண்டேஇருக்கும். இறுதியில் வெற்றி பெறுவது மரணம்தான்”...(ப.344) என்ற சொல்லாடல்கள் நாவலின் மையம். உடல்களை முழுமையாகப் படித்த மருத்துவர்கள் தங்களது உடல்களைக் காப்பாற்ற முடியாது நோய்க்கிருமிகளால் சிதைவது மருத்துவத்துறையின் யதார்த்தம். மருத்துவத்துறையின் ஜாம்பவான், ஆச்சாரியாரால் தன் நோயையும் மரணத்தையும் தன்னிலிருந்து விலக்கமுடியவில்லை என்ற புனைவுத்தருக்கம் நுட்பமானது. மனிதன் சேகரிக்கும் புகழ், பணம், அதிகாரம் என்னும் மாய பிம்பங்களைக் கிருமிகள் கலைத்துவிடுகின்றன. அந்தப் பிம்பம் அவர்கள் குடும்பத்தையும் அமைதிப்படுத்துவதில்லை. ஆச்சாரியாரின் மகளும் பயிற்சி மருத்துவருமான இலட்சுமி, தேவதாஸைக் காதலித்துவிட்டுத் தந்தையின் அதிகாரக் கோடுகளைத் தாண்டமுடியாமல் விருப்பமற்ற ஆணை மணந்து, முதல் புணர்வை பலாத்காரமாக உணரும் எத்தனையோ இந்தியப் பெண்களின் பிரதிநிதியாகிப் போகிறாள். தேவதாசும் மனப் பிறழ்விற்குள்ளாகிறான். மருத்துவர்களின் பணிகளும் சரிவுகளும் விரிவாக எழுதப்பட்டுள்ளதால் அவை மாறுபட்ட அனுபவங்களைத் தருகின்றன.

காரிருளில் மூழ்கிக் கிடக்கும் மருத்துவமனையின் அறைகளுக்குள் உடல்வாதைகளால் விழித்துக்கொண்டிருக்கும் நோயாளிகளின் பயங்களும் ஆசைகளும் கடும் துயர்களாகப் பெரும் கட்டடங்கள் முழுதும் கசிந்துகொண்டிருக்கின்றன. வயிற்றுவலியால் இரவெல்லாம் ஓலமிடும் ஜான் பல்தேவ் மிர்ஸா ஒருமுறைகூட அம்மாவையோ, உறவினர் பெயரையோ அழைக்காது அநாதையாக மரணிப்பவன். என்ன நோயென்றே அறியாது நோயளியான ஒருவனின் கதை, (200நோய்களுக்கு மருத்துவத்துறையில் மருந்தில்லையாம்) பைபிளைத் திறந்தாலும் சாத்தான் வெளிக்கிளம்புவதைத் தரிசிக்கும் ஒரு சீக்காளியின் பரிதாபம் என உருக்குலையும் உடல்களிலிருந்து கசப்புகள் பொங்கிப் பிரவகிக்கின்றன. வயிற்று வலியுடன் வரும் மூதாட்டி தொப்புளோடு தங்க நகைகளை மூட்டையாகக் கட்டித் தொடைகளுக்கிடையே தொங்கவிட்டிருக்கிறாள். தனது இறப்புச் சடங்கிற்கு இது இல்லையென்றால் என் பிள்ளைகள் என்னை அழுகிய பிணமாக விட்டுவிடுவார்கள் என்று அவள் அரற்றுவது முதுமையின் அவலம். கணவனால் காயப்படுத்தப்பட்ட இரவுகளில் தன்னை நகைகளால் அலங்கரித்து கண்ணாடிமுன் பேசும் டாக்டர் ஆச்சாரியாவின் மனைவி இராணியம்மாளின் உளச்செயல்பாட்டை எப்படிப் புரிந்துகொள்வது. பெண்கள் தங்கள் சிக்கல்களுக்கு தங்கம் தீர்வாக அமையும் என்று நம்பி வாழும் நம் சமூக அமைப்பு எத்தகையது?. மூக்கிலும் மூத்திரப் புரைகளிலும் சொருகப்பட்ட குழாய்களுடன் வாந்தியிலும் மலத்திலும் நீந்திக்கிடக்கின்றன துயர்கள். போர்வையால் மூடப்பட்டு வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களில் கிடத்தப்பட்டிருக்கும் சலனமற்ற உடல்கள், நீக்கமற நிறைந்திருக்கும் மருந்தின் நெடி, சிதறிக்கிடக்கும் மருத்துவக் கழிவுகள், இரத்தக் கவிச்சிகள், பேயாக இயங்கும் ஆயாக்கள், மருத்துவமனை முழுதும் பதற்றத்துடன் அலைந்து கொண்டிருக்கும் உறவினர்கள் என இந்தியாவின் நலிந்துபோன மருத்துவமனைகளின் மாதிரி, இக்காட்சிச் சித்தரிப்புகள்.

குறிப்பாகப் பிரசவ வார்டு பற்றிய விவரணைகள் படிப்பவர்களை நெருடச்செய்வன. பாதுகாப்பற்ற மருத்துவ அறைகளிலும் படுக்க இடமில்லா வராண்டாக்களிலும் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகளின் ஓலங்களும் நின்று பிதுக்கித்தள்ளும் பிரசவங்களும் மனதைப் பிசைவன. அகல வைத்த கால்களுக்கிடையே கனமான ஏதோவொரு பொருள் போன்று சொத்தென்று விழும் சத்தங்களும் கத்திகளால் அவசரகதியில் பிளக்கப்படும் கர்பப்பைகளும் மெல்ல வாய்பிளக்கும் முட்டிய வயிறுகளும் கொப்புளிக்கும் பச்சை இரத்தமும் படிப்பவர் மனதில் கலவரத்தை ஏற்படுத்துவன. மருத்துவம் என்ற பேரில் உடல் சின்னாபின்னப்படுத்தப்படும் கூடங்களாகிப் போய்விட்டன மருத்துவமனைகள். மருத்துவ வாழ்வு இங்கு ஆவணமாக்கப்பட்டுள்ளது. பெண் ஈற்றெய்தபின் ஆண் புணர்வதற்கேற்ப பிறப்புறுப்பை ஒழுங்குபடுத்தும் டாக்டர் தனுஜா “இத்தனை நேரம் நான் செஞ்சதெல்லாம் உன் குழந்தைக்காக இனிமே செய்யப்போறது உன்னோட புருஸனுக்காக” என்றுரைப்பது பெண்ணுடல் சிதையும்போதும் ஆணுக்காகவே தயாரிக்கப்படுகிறது என்பது கசப்பான உண்மைதான். உடல்சிதைவுகளைப் பற்றிய பல பகுதிகள் அப்பட்டமாக எழுதப்பட்டிருந்தாலும் அதற்கெதிர்நிலையில் வைத்து உடல் உறுப்புகளின் ஆற்றல்களும் விதந்துரைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளங்கையளவே இருக்கும் கர்பப்பை நெஞ்சுவரை விரிந்து பெருகும் ஆச்சர்யம், இரத்தமும் சதையுமாகிப்போன மூளையை லட்சுமி தொட்டு ‘வெர்ஜின் டச்’ என்பது போன்ற பல பகுதிகள் ஆசிரியரின் உடலியல் குறித்த துல்லியப் பார்வையைக் காட்டுகின்றன. உடல் உறுப்புகள் குறித்த விவரணைகள் தூலமாக அமைந்திருக்கின்றன. இது வாசகனை அவனது உடல்லுக்குள் உள்நோக்கிப் பார்க்கத் தூண்டும். வாசகன் வரிகளுக்கு ஊடாகப் பயணித்து உடலின் உள்ளுறுப்புகளுக்குள் நடமாடத் தொடங்கிவிடும் அனுபவம் நாவலில் விரவிக் காணப்படுகிறது.

கடைநிலை ஊழியர்களின் பணிகுறித்து நாவல் வரையும் உலகம் அலாதியானது. சடலங்களை இழுத்துப்போட்டு சுத்தம் செய்து பிணவறையையே இருப்புக் கூடமாக்கி உயிர் வாழ்கிறான் சோனா. மண்டையோட்டைத் தேங்காயை உடைப்பது போன்று உடைத்து மூளையை நோண்டி எடுப்பது அவனது அன்றாடத்தொழில். அதிலிருந்து அவன் விரும்பினாலும் விலகமுடியாதவாறு தனது வாழ்வைச் சடலங்களோடு தகவமைத்துக்கொண்டுவிட்டான். ஓய்வில்லாமல் தரைகளைத் துடைத்து, சாக்குகளில் குப்பைகளைச் சேகரித்து, உலவும் போபட், கோணிப்பைகளுடன் சதா அலைந்துகொண்டிருப்பவனாக வடிவுகொண்டுள்ளான். மேரியின் கள்ளங்கபடமற்ற தாதிப்பணி, இறை நம்பிக்கைமிக்கவளானாலும் சக தாதியும் தோழியுமான குஞ்சம்மாளின் ஆசைகளுக்குத் தன்னை, தனது உடலை இசைந்து கொடுக்கும் நட்பிற்குரியவள். குஞ்சம்மாள் பெருங்குற்றங்கள் இழைத்தபோதும் மேரி இறுதிவரை அன்பு பாராட்டுபவளாகவேயிருக்கிறாள். தொழிலதிபர், கணவன், சப்இன்ஸ்பெக்டர், மேரி எனப் பலர் வழியில் தனது காமத்தைக் கடக்க முயல்கிறாள் குஞ்சம்மா. ஆணுலகம் ஏற்படுத்தும் நெருக்கடிகளால் தனது குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்துச் சிறைதண்டனை பெறுகிறாள். சிறையிலிருந்து வெளிவந்து இயல்புமாறாமல் அவள் வாழமுற்படுவது வாழ்வுதரும் ஆச்சர்யங்கள். குஞ்சம்மாள் வார்ப்பு இந்நாவலில் நன்கு கூடிவந்துள்ளது. வாட்ச்மேன் பியாரேலால் நூற்றுக்கணக்கான சைக்கிள்களை ஒழுங்குபடுத்திக் கசங்குபவன். களப்பலிக்காக தவளைகளைக் கூட்டம் கூட்டமாகப் பராமரித்து வாழும் நிலையில் ஒருவன் என விளிம்புக்கதையாடல்கள் நுட்பமாக கவனப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றைய நவீனச் சமூகத்தில் மருத்துவமனையும் மருத்துவர்களின் பணியும் எத்தகையது? எந்த அறமதிப்பீட்டில் அணுகுவது? என்ற கேள்விகளுக்கு எதிர்வினையாற்றியுள்ளது நாவல். இதில் வரும் பெரும்பாலான மருத்துவ மாந்தர்கள் அதிகாரமிக்கவர்களாக, சுயநலவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். நாவல் முழுமையும் மருத்துவமனை குறித்த ஒரு விமர்சனம் எள்ளலாக அமைந்துகிடப்பது நாவலின் பலம். எப்பொழுதும் சம்பள உச்சவரம்புகளைச் சுற்றி அமையும் மருத்துவர்களின் உரையாடல்கள் அவர்களது தொழில்பற்றைக் காட்டுகின்றன. ‘அறிவுஜீவிங்க எருமைமாடுங்க’ என்ற லட்சுமியின் சொற்கள் இங்கு ஆழமானவை. பூக்கோ மருத்துவமனை, சிறைச்சாலைகள் அதிகாரவெளிகளாக இயங்குகின்றன என விமர்சிக்கிறார். இந்நாவல் அவற்றைக் கதையாடல்களாகப் புனைந்துள்ளது. நோயாளிகள் இராணுவத்திற்கு ஆளெடுப்பதுபோல தரம்பிரிக்கப்பட்டு பச்சைச்சீருடை வழங்கி, தனித்தனி எண்களாலே அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு ஓர் அமைப்புக்குள் அவர்களை, ஒழுங்குபடுத்தி அதற்கேற்ப ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதென்பது சிறைச்சாலைக்கு நிகரான ஒரு செயல்பாடாகத்தானிருக்கிறது. நோயாளிகளை வரிசையில் நிற்கவைத்து, மருத்துவர்களை வழிபாட்டுக்குரியவர்களாக்கி மருத்துவத்தொழில் புனிதமாக ஆக்கப்பட்டுள்ளதை நாவல் தொட்டுச்செல்கிறது. மருத்துவமனையில் நுட்பமான அதிகாரவெளி இயங்குவதை நாவலின் சில பகுதிகள் காட்டுகின்றன. மருத்துவப்பணிசார்ந்து ஒரு மாற்று உரையாடலுக்கு இப்பகுதிகள் தளம் அமைத்திருக்கின்றன. டாக்டர் வரும் நேரத்திற்கு முன்பாகவே நோயாளிகள் வாயைத்திறந்து வைத்திருக்கின்றனர். தெர்மாமீட்டரை முரட்டுத்தனமாக நோயாளிகளின் வாய்க்குள் வைத்து அழுத்துகின்றனர். தன்னைச் சுதந்திரத் தன்னிலைகளாகக் கருத உரிமையில்லாத நோயளிகளும் மாணவர் சமூகமும் மருத்துவ அமைப்பில் சூழ்நிலைக் கைதிகளாக, அடிமைகள் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொருள் இழப்பு, பழிவாங்கப்படுதல், பாலியல் சோரம், அவமானங்கள் இவற்றை வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வேண்டியதுதான் இன்றைய நிலை. 'நாயைவிட மோசமான நாய்ங்க’ (ப. 53) என்ற ஆசிரியரின் வசைகளை ஏற்றுக்கொண்டு ஆசிரியர்கள்முன் குலைந்து நிற்கவேண்டியதுதான் மாணவர்களின் கடமை. நோயாளியின் அடிப்படையான கேள்விகளைக்கூட மருத்துவர்கள் உதாசீனப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்வதுதான் நோயாளிகளின் கடமை.

மருத்துவக்கூடங்களைச் சுற்றிப் படரும் பல நிகழ்வுகளை ஆங்காங்கே அமானுஷ்யத்தன்மையில் எழுதியிருப்பது நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகிறது. எழுத்துகளற்ற புத்தகத்திலிருந்து கண்கள் திறப்பது, மேஜையில் படுத்திருக்கும் சடலம் எழுந்து கண்ணீர் உதிர்ப்பது, தன் உடலிலுள்ள காயங்களைப் பார்த்து அழுவது, உடலிலிருந்து இரத்தம் பீய்ச்சுவது போன்றவை மீமெய்ப் புனைவுகள். இரவுகளில் சடலங்கள் எழுந்து தங்களின் துயரங்களை உரைப்பதோடு, இரத்த வெள்ளத்தில் சடலங்கள் பிரேத கானம் பாடி ஆடுவதென மரணத்திற்குப்பின்னான மர்மங்களையும் சூட்சுமங்களையும் எழுத முற்பட்டிருப்பது சிறப்பு. உயிர்களைக் காவுவாங்க எல்லா இடங்களிலும் உருமாறித் திரிந்து கொண்டிருக்கும் மரணதேவனை அரூபமாகக் காட்டியுள்ளது நாவல். மருத்துவமனையில் மரணிக்கப் போகும் நோயாளிகளின் முன் அரூபி (எமன்) தோன்றி அமைதியாக உலவுகிறான். இங்மர் பெர்க்மெனின் The Seventh Seal படத்தில் பிளேக் நோய் தாக்கி இறக்கப்போகும் மனிதர்களை இழுத்துச் செல்ல, அவர்களைத் தொடர்வதும் அவர்களோடு பகடையாடுவதுமான மரணதேவனை நினைவுறுத்துகிறது இது. நீக்கமற எங்கும் மீந்து கிடக்கும் சாவின் வெளியை மையமாகக் கொண்டு சுழலும் இவ்வாழ்வை மிகைபுனைவுத் தன்மையிலே எழுத முடியுமென்று தோன்றுகிறது.

விதவையின் மரணத்திலும் காட்டாற்றின் பேரழிவிலும் தொடங்கும் நாவல் இறுதியில் குஞ்சம்மாள் புதைத்த குழந்தையை, மேரி தோண்டியெடுத்துப் பாலூட்ட, அதைப் பார்த்து யமுனை பெருமூச்சுவிடுவதாக முடித்திருப்பது அற்புதம். மரணம் ஜ் பிறப்பு என்ற இரண்டு முனைகளுக்கிடையேயான மானுடச் சுழற்சியை மையப்படிமமாக்கி அதற்குப் பின்புலமாக ஆற்றைச் சித்திரித்திருப்பது இந்நாவலின் முக்கிய அம்சம். மரணத்தில் தொடங்கிப் பிறப்பில் முடியும் அகிரா குரசேவாவின் Rasoman திரைப்படத்தில் விறகு வெட்டியால் கொலையாளி யார்? என்னும் உண்மையை இறுதிவரை அறிய முடியாது, மானுடம் படர்த்தும் பொய்மைகளினால் அவநம்பிக்கையே அவனது வாழ்வாகிப்போனாலும் இறுதியில் கானகத்தில் கண்டெடுக்கப்பட்ட சிசுவை வளர்க்க அந்த விறகுவெட்டி அதை நம்பிக்கையுடன் எடுத்துச் செல்வதும் மருந்து நாவலில் கன்னி மேரி குழந்தைக்குப் பாலூட்டுவதும் உயிர் வாழ்தலின் ஆதார இச்சைகள். அவ்விச்சைகளே மானுடத்தை வாழ நிர்பந்திக்கின்றன. பெரும் சரிவுகளிலும் அவமானங்களிலும் வாழ்வு தூர்ந்து போனாலும் மனிதன் வாழப்போராடுவதே வாழ்வின் ஆதுரம். அதுவே உயிரியங்கியலின் ஆதார இச்சையும்கூட. இந்த இச்சைக்காக வாழப் போராடும் மனிதத்திரள்களின் பாடுகளையும் துயர்களையும் இந்நாவல் கலையாக்கியுள்ளது.

நாவலின் பலவீனங்களாக சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. தாராளமயத்திற்குப்பின் மருத்துவமனைகள் நட்சத்திர ஹோட்டல்களாக வடிவம் கொண்டுள்ளன. இந்தியாவில் பணம் கொழிக்கும் தொழில்களில் மருத்துவத் தொழில் முதன்மையானது. பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் மருந்து வியாபாரிகளும் மருத்துவத் தொழிலை நிர்ணயிக்கும் சக்திகளாக வலம் வருகின்றனர். அவர்களது தயவு தாட்சணையைப் பொருத்தே ஒரு நாட்டில் நோயாளிகளின் நிலை தீர்மானிக்கப்படுகின்றது. காலனியம் அமைத்துக்கொடுத்து அலோபதி மருத்துவம் பெரும் நிறுவனமாகிப்போய் வியாபாரமாகிவிட்ட நிலையில் அங்கு தொழில்புரியும் மருத்துவர் பணிகளும் மனிதாபிமானமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் அலோபதி மருத்துவத்தைப் பின்பற்றும் மருத்துவமனைகள், இந்தியாவில் பெரும் கொள்ளைக்கூடங்களாக உருமாறி வருகின்றன. இவை குறித்த எந்த ஒரு குறிப்பும் நாவலில் இல்லை. அலோபதி மருத்துவமுறைகள் இன்று உலகம் முழுவதும் மறுபரிசீலனைக்கு உள்ளாகி வருகின்றன. பாரம்பரிய மரபு வழிப்பட்ட அந்தந்த நிலங்களுக்கேற்ற தாவரங்கள், உணவுமுறைகள், தட்பவெப்பம் போன்ற பின்புலங்களில் மருத்துவமுறைகள் பேசுபொருளாகி வருகின்றன. இவற்றை நாவல் தொட்டுக் காட்டியாவது சென்றிருக்கலாம். பல நூற்றாண்டுப் பாரம்பரியமிக்க இந்திய மருத்துவமுறைகளான மூலிகை, ஆயுர்வேதம், சித்தா போன்றவை குறித்து விவாதிப்பதற்கு ஏற்ற எளிய வழிகளைப் புனைவுப்பரப்பு தன்னகத்தே கொண்டிருந்தாலும் அவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மருத்துவமனைகளின் அமைவிடங்களுக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு, நகரத்திற்கும் மருத்துவமனைக்கும் உள்ள நெருக்கங்கள் எளிய மனிதருக்கும் இந்நகர்சார் நவீனக் கட்டடங்களுக்கும் உள்ள உறவற்றநிலை எதுவும் விவாதிக்கப்படவில்லை. எளிய மனிதர்களுக்கு இக்கட்டடங்களின் அமைப்பே அச்சத்தைப் படர்த்துகிறது. மருத்துவக் கட்டடங்களுக்கு வெளியே புனைவு சிறிதும் நகரவில்லை.

நோயாளிகளோடு கட்டடங்களில் வெளிப்பகுதிகளிலும் வராண்டாக்களிலும் இரவுகளைக் கழிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உளைச்சல்கள் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் தடைகள், குழப்பங்கள், மனப்பதற்றங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. குறிப்பாகப் பொருளாதார நெருக்கடிகள் குறித்தாவது குறைந்தபட்சம் பேசியிருக்கலாம். ஒரு நோயாளியைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தின் குழந்தைமுதல் பெரியவர்வரை படும் துயரம் கடுமையானது. ஒரு கிருமி அல்லது ஒரு கொசு உருவாக்கும் பெரும்நோய் ஒரு குடும்பத்தையே நடுத்தெருவிற்குக் கொண்டுவந்துவிடுகிறது. கடனாளிகளாக ஊரைவிட்டு ஓடும் குடும்பங்கள், குழந்தைகளின் கல்வித்தடைகள், முதியவர்களின் கசங்கல்கள் என நோய் வரையும் குடும்பச்சிதைவுகள் விரிவானவை. இதன் தாத்பர்யங்கள் எள்ளளவும் இந்நாவலில் இல்லை. இதனால் இந்நாவல் முழுமையடையாது மருத்துவ வாழ்வின் ஒரு பகுதியில் மட்டும் சுழன்றுவிட்டு நின்று விடுகிறது.

சுதந்திர இந்தியாவின் மருத்துவ ஊழல்கள் புகழ்பெற்றவை. பணி நியமனங்கள், கட்டடவேலைகள், மருந்துப் பரிமாற்றங்கள், வாங்குவது விற்பது என அனைத்திலும் சுரண்டல் புரையோடியுள்ளது. அரசுச் செயல்பாடு குறித்து நாவல் பெரும் கள்ளமௌனம் சாதிக்கிறது. ஊடகங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் இடையே நடக்கும் இரகசிய பேரங்கள் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. பலமடங்கு விற்கப்படும் மருந்துப் பொருள்கள், போலி மருந்துகள், எளிய நோயாளிகளின் உயிர்களோடும் உடல்களோடும் விளையாடும் வியாபாரிகளின் மோசடிகள் எதையும் பொருட்படுத்தவில்லை. இவையெல்லாம் பட்டவர்த்தனமாக அனைவருக்கும் தெரிந்த உண்மைகள். மருத்துவராக இருக்கும் ஆசிரியர் இவற்றை முழுமையும் அறிந்தும் தவிர்த்துவிட்டாரா எனத் தெரியவில்லை. மருந்து குறித்த பல்வேறுபட்ட பரிமாணங்களைப் பிந்திய முதலாலாளிய சூழலில் வைத்து விவாதித்திருந்தால் நாவலுக்கு வேறொரு பரிமாணம் கிட்டியிருக்கும். அப்பொழுதுதான் மருந்து என்ற தலைப்பு பொருந்தி வரும். எனவே, மருந்து என்பதைவிட மருத்துவமனை என்ற தலைப்பே பொருத்தமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. தாவித் திரியும் முயல் தொகுதிகள், காலிமனைக் கூண்டுகளில் அடைபட்ட நாய்கள், சுண்டெலிகள், பன்றிகள் போன்ற சிற்றுயிர்கள் அலோபதி மருத்துவமனைகள் என்னும் பேரிருப்பைத் தக்கவைக்கக் கொடூரமாகச் சிதைக்கப்படும் சூழல் மருத்துவச் சீரழிவுகளின் ஒரு பகுதி. இவற்றை ஓரிரு இடங்களில் தொட்டுச்செல்கிறது நாவல். இதை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். கானுயிர்களும் உலகறியா சாமான்ய மனிதர்களையும் மருத்துவத்துறைச் சோதனை உடல்களாகச் சிதைத்து வரும் செய்திகள் நிறைய வந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு படைப்பாளியின் கவனம் அவற்றின் மீதும் குவிவது இயல்பாக இருக்கவேண்டிய ஒன்று. இவையெல்லாம் இந்நாவலின் பின்னடைவுகள்.

இருத்தலுக்கான போராட்டங்கள் உணர்வெழுச்சி மிக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன. மருத்துவமனை குறித்த நிகழ்வுகள் எழுத்தாளரின் தொழில் அனுபவத்தில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விரிவாக வரையப்பட்டுள்ளன. உடல்சார் கையறுநிலை உரையாடல்கள் எள்ளல் தொனியில் நாவல் முழுவதும் இழைந்துகொண்டிருக்கின்றன. இருத்தலியல் சித்தரிப்புகள், தத்துவார்த்தக் கூறுமுறைகள், மிகைபுனைவுத் தன்மைகள் (Fantasy) நுண்மொழிபுகள் (Micro Narration), மருத்துவமுறை குறித்த உதிரித்தகவல்கள், சரளமான மொழிப்பிரயோகம் போன்றவை இந்நாவலை தனித்தன்மையுடையதாக ஆக்குகிறது.

விறுவிறுப்பான மொழிநடையில் மிகக்கவனமாகப் பாராட்டும்படி மொழிபெயர்த்திருக்கிறார் சு.ராமன்.

(மருந்து - புனத்தில் குஞ்ஞப்துல்லா. தமிழில் சு. ராமன். பக்கம்: 416 முதல்பதிப்பு 2010 கிழக்குப் பதிப்பகம், சென்னை -18)

Dial For Books: 94459 01234 | 9445 97 97 97
)

Friday, August 26, 2011

கிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்

ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையிலிருந்து குடிபெயர்ந்து அவ்வை சண்முகம் சாலை எனப்படும் லாயிட்ஸ் சாலை அலுவலகத்துக்கு கிழக்கு பதிப்பகம் குடிபெயர்ந்துள்ளது.

புதிய முகவரி:
கிழக்கு பதிப்பகம்
177/103, அம்பாள் கட்டடம், முதல் மாடி
அவ்வை சண்முகம் சாலை (லாயிட்ஸ் ரோட்)
ராயப்பேட்டை, சென்னை 600014

தொலைபேசி: 4200-9601, தொலைநகல்: 4300-9701

அதேபோல, கிழக்கு பதிப்பகத்தின் புத்தகக் கிடங்கு (வேர்ஹவுஸ்) இடம் மாறியுள்ளது. புதிய முகவரி:

கிழக்கு பதிப்பகம்
ப்ளாட் எண் 11, 12, முதல் மாடி
மீனாம்பாள் சாலை, அபிராமி அவென்யூ
கவியரசு கண்ணதாசன் நகர்
சென்னை 600118
தொ.பே: 4284-5464, 4284-5494

Wednesday, August 3, 2011

ரஜினியின் பன்ச் தந்திரம் புத்தகத்துடன் ஒரு மாலை

அனைவரும் வருக.

நாள்: 05 - ஆகஸ்ட் - 2011, வெள்ளி கிழமை

நேரம்: மாலை 6 மணி

இடம்: லேண்ட் மார்க், அம்பா ஸ்கை வாக்

சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையில் கிழக்கு புத்தகக் கண்காட்சி

சென்ற வாரம் இரு தினங்கள் சென்னை மறைமலைநகர் ஃபோர்ட் கார் தொழிற்சாலையில் கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்தியது. இதுவரையில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, காக்னசெண்ட் போன்ற பல ஐடி நிறுவனங்களில் புத்தகக் கண்காட்சி நடத்தியுள்ளோம். சில மாதங்களுக்குமுன் டி.ஐ சைக்கிள்ஸ் தொழிற்சாலையில் கண்காட்சி நடத்தினோம். இவை எல்லாமே நல்ல விற்பனையைக் கொடுத்துள்ளன. தமிழ் வாசகர்கள் பலர் புத்தகக் கடைகளுக்குச் செல்ல நேரம் இல்லாது இருக்கின்றனர். எனவேதான் வாசகர்களை நேரடியாக அணுகி, புத்தகங்களை அவர்களது பார்வைக்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

அலுவலகமோ, தொழிற்சாலையோ எதில் நீங்கள் வேலை செய்தாலும், நாங்கள் நேராக உங்கள் அலுவலகத்துக்கு வந்து இரண்டு நாள் (அல்லது ஒரு நாள்) புத்தகக் காட்சியை நடத்தவேண்டும் என்று விரும்பினால், support@nhm.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

Friday, June 17, 2011

கிழக்கு மொட்டைமாடி: சமச்சீர் கல்வி பற்றி பேரா. முத்துக்குமரன்

11 ஜூன் 2011 அன்று கிழக்கு மொட்டைமாடியில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் சமச்சீர் கல்விக்குழுவின் தலைவராக இருந்தவருமான பேரா. ச. முத்துக்குமரன் பேசியதன் காணொளி:

Thursday, June 9, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - சமச்சீர் கல்வி

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் தமிழக அரசு நிறுவிய சமச்சீர் கல்விக் குழுவின் தலைவராக இருந்தவருமான பேராசிரியர் ச. முத்துக்குமரன், சென்னை ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பக மொட்டைமாடிக் கூட்டத்தில் 11 ஜூன் 2011, சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு, ‘சமச்சீர் கல்வி’ என்ற தலைப்பில் பேச உள்ளார்.

சமச்சீர் கல்வி தொடர்பாக பேரா. முத்துக்குமரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு முறையான சில பரிந்துரைகளை அளித்தது. திமுக அரசு, அதன் அடிப்படையில், மெட்ரிக் பாடத்திட்டம், ஸ்டேட் போர்ட் பாடத்திட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தக் கல்வியாண்டில் இதன் அடிப்படையில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் அளிக்கப்பட இருந்த நிலையில் தேர்தலில் அஇஅதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய அரசு, சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. இது தொடர்பான ஒரு வழக்கு இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. பல லட்சம் மாணவர்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.

பேரா. முத்துக்குமரன், தான் தலைமை தாங்கிய குழு ஏன் அமைக்கப்பட்டது, அந்தக் குழு எவற்றையெல்லாம் பரிசீலித்து என்னென்ன பரிந்துரைகளை வழங்கினர் என்று நம்மிடையே உரையாடுவார். தமிழகத்தின் கல்வி அமைப்பில் என்னென்ன குறைகளை அவர்கள் கண்டனர், அவற்றை எப்படி சமச்சீர் கல்விக்குழுவின் பரிந்துரைகள் களைய முற்படும் என்பதையும் விளக்குவார்.

சமச்சீர் கல்விக்குழுவின் பரிந்துரைகளைப் புரிந்துகொள்வதன்மூலம் பெற்றோர்களும் கல்வியாளர்களும், இம்முறை ஏன் பரிந்துரைக்கப்பட்டது, செயல்முறைக்கு வந்தது எந்த வகையில் பரிந்துரையிலிருந்து வேறுபட்டுள்ளது ஆகியவற்றைப் புரிந்துகொள்ளலாம். மேலும் இது தொடர்பாக எம்மாதிரியான, புரிந்துணர்வுடனான நிலையை எடுக்கவேண்டும் என்று பெற்றோர்களும் கல்வியாளர்களும் முடிவு செய்யலாம்.

நாள்: 11 - ஜூன் - 2011, சனிக்கிழமை
இடம்: 33/15, எல்டாம்ஸ் ரோடு, கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 18.
நேரம்: மாலை 6 மணி.

அனைவரும் வருக!

Friday, May 20, 2011

31 பர்மியப் போராளிகள் விடுதலை

பார்க்க: தி ஹிந்து செய்தி

வழக்கறிஞர் நந்திதா ஹக்சர் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கமான வஞ்சக உளவாளி: பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய ராணுவம் என்பதை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்தது.

பர்மிய ராணுவத்தை எதிர்த்துப் போராடி வந்த இந்த இனச் சிறுபான்மையினரிடம் பல உதவிகளைப் பெற்றுவந்த இந்திய ராணுவத்தின் ஒரு வஞ்சக உளவாளி, இவர்களை ஏமாற்றி, பணம் பிடுங்கிக்கொண்டு, அந்தமான் அழைத்துச் சென்று இவர்களின் தலைவர்கள் சிலரைச் சுட்டுக்கொன்று மீதிப்பேரை சிறையில் அடைக்கச் செய்தார். பின் அவர் இந்தியாவிலிருந்து காணாமல் போய்விட்டார்.

மனித நேயப் போராளிகள் சிலர் இந்த பர்மிய சிறைக் கைதிகளை வெளியில் எடுக்கப் பல முயற்சிகளைச் செய்தனர். நந்திதா ஹக்சர் இந்த வழக்கில் ஈடுப்பட்டது இப்படியாகத்தான். தன் புத்தகத்தில் பர்மியப் போராட்டத்தை விளக்கும் அதே நேரம் இந்தக் கைதிகள் படும் இன்னல்களையும் ஹக்சர் விவரிக்கிறார். தமிழாக்கம் நடக்கும்போது அதற்கென கடைசி அத்தியாயத்தை சற்றே மாற்றித் தந்தார் ஹக்சர். அப்போதும்கூட இந்தக் கைதிகளுக்கு என்ன ஆகும் என்று தெரியவில்லை, எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இல்லை என்று சொன்னார்.

ஆனால் இன்றைய செய்தி, இவர்கள் அனைவரும் பல ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பின் விடுதலை செய்யப்பட்டதாகச் சொல்கிறது. மனித நேயம் மிக்க இந்தியர்கள் அனைவரும் மகிழவேண்டிய நாள். அத்துடன் இத்தனை நாள் வஞ்சிக்கப்பட்டு சிறையில் வாடிய இவர்களுக்காக நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய நாளும்கூட.

இந்தியா இனியாவது பர்மியப் போராட்டத்தில் நீதியின் பாதையைத் தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியம்.

Monday, May 16, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகள்

14 மே 2011 அன்று கிழக்கு மொட்டைமாடியில் பி.சந்திரசேகரன் ‘அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் பேசியதன் வீடியோ:

ஒலிப்பதிவு மட்டும் போதும் என்றால் இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: சூரிய கிரகணம்

இது பழைய நிகழ்வு ஒன்றின் Slidecast. பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் + ஆடியோ. ராமதுரை 2009-ல் நிகழ்த்தியது.

Friday, May 6, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள்

14 மே 2011, சனிக்கிழமை அன்று, சென்னை, ஆழ்வார்பேட்டை, கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடியில் மாலை 6.30 மணிக்கு பி.சந்திரசேகரன் ‘அம்பேத்கர் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஆதரித்தவரா?’ என்ற தலைப்பில் பேச உள்ளார்.

அம்பேத்கர் ஒரு வழக்கறிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவில் முக்கியப் பங்கு வகித்தவராக ஆவதற்குமுன்பே ஒரு பொருளாதார நிபுணராக இருந்தவர். இன்று அவர் ஒரு தலித் தலைவராக மட்டுமே பார்க்கப்படுகிறார். ஆனால் பலரும் அவரை (தலித் சமூகத்தில் பிறந்த) பொருளாதார நிபுணர் என்று அவரைப் பார்ப்பதில்லை. அவரது பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிப் பேசும் சிலர்கூட அவர் முதலாளித்துவத்துக்கு எதிரானவர் என்றும் சோசலிசம் பக்கம் சாய்ந்தவர் என்றுமே குறிப்பிடுகிறார்கள். அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவின் சோசலிச அரசியலுக்கு எதிராக இருக்கும் காரணத்தால், மைய நீரோட்டவாதிகள் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை; தலித்துகளோ அவற்றைத் தவறாகத் திரித்துவிடுகிறார்கள்.

பொருளாதாரச் சீர்திருத்தம் வேகமாக நடைபெற்றுவரும் இந்தியாவில் அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகளை நாம் மீண்டும் படிப்பது அவசியமாகிறது. முக்கியமாக கட்டற்ற சந்தைக் கொள்கை, மையக்குவிப்பில்லாத வளர்ச்சிக்கான திட்டமிடுதல், சமூகம் எதிர்கொள்ளும் அறிவுசார் பிரச்னைகள், நாடுகளுக்கு இடையேயான நிதி தொடர்பான பிரச்னைகள் ஆகியவை கவனம் பெறத்தக்கவை.

இது தொடர்பான பல கருத்துகளை மையமாகக் கொண்டு பி. சந்திரசேகரன் சென்ற மாதம், லுட்விக் ஃபான் மீசஸ் இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆஸ்திரியன் நிபுணர்கள் மாநாடு 2011-ல் ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அந்தக் கட்டுரை, அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய தவறான கருத்துகள் பலவற்றையும் தகர்க்கிறது.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சந்திரசேகரன் இந்தக் கருத்துகளை விரித்துப் பேச இருக்கிறார். பேச்சு தமிழில் இருக்கும்.

சந்திரசேகரன் விழுப்புரம் அருகில் பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.ஏ, எம்.ஏ பட்டங்களைப் பெற்றவர். 2005-ல், மோவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சமூக அறிவியலுக்கான தேசியக் கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார். இவர் எழுதிய ‘வளரும் நாடுகளிலும் இந்தியாவிலும் உலகமயமாதலின் தாக்கம்’ என்ற கட்டுரை 2004-ம் ஆண்டில் பொருளாதாரத்துக்கான மொஃபாட் பரிசுக்காக (The 2004 Moffatt Prize in Economics (USA)) பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகளில் ஒன்றாக இருந்தது. 2006-ம் ஆண்டில் அதிகம் படிக்கப்பட்ட 10 பொருளாதாரக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்று டாக்டர் மொஃபாட்டால் குறிப்பிடப்பட்டது.

தேசிய, சர்வதேச மாநாடுகள் பலவற்றில் பங்குபெற்றுள்ள இவர், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அம்பேத்கர், ஹயெக், லுட்விக் ஃபான் மீசஸ், அம்பிராஜன் ஆகியோரின் எழுத்துகளின் தாக்கம் இவரிடம் உள்ளது. http://hayekorder.blogspot.com/ என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார்.

-- பத்ரி சேஷாத்ரி

Tuesday, May 3, 2011

கிழக்கு மொட்டைமாடி: 2ஜி, சிபிஐ ஆகியவை பற்றி கே. ரகோத்தமன்

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சிபிஐயிலிருந்து ஓய்வுபெற்ற திரு. கே. ரகோத்தமன் பங்கேற்றுப் பேசினார். ராஜிவ் காந்தி கொலை வழக்கு என்ற பிரபலமான புத்தகத்தை எழுதிப் புகழ் பெற்றவர் இவர். இந்தப் பேச்சின்போது சிபிஐ உருவான வரலாறு, இந்திரா காந்தியைக் கைது செய்தபோது நடந்தது என்ன, 2ஜி வழக்கில் இப்போது சிபிஐ செய்வது என்ன போன்ற பல விவரங்களை அவர் தொட்டுச் சென்றார். கேள்வி - பதில் பகுதியுடன் கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் நீண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் 2 மணி நேரங்கள் வீடியோவாகவும் கடைசி அரை மணி நேரம் ஆடியோவாகவும் கீழே கிடைக்கின்றன.

Wednesday, April 27, 2011

Tuesday, April 26, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - கே. ரகோத்தமன் சிபிஐ (ஓய்வு) பங்கேற்பு

* சிபிஐ எப்படி இயங்குகிறது?
* வழக்கு விசாரணை எப்படி நடைபெறுகிறது?
* ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ நடத்திவரும் விசாரணைகள்.
* சமீபத்திய சாதிக் பாஷா கொலை வழக்கை சிபிஐ கையாண்ட விதம், சாதிக் பாஷா மரணத்தால் சிபிஐக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு.

மேற்கண்ட விஷயங்கள் குறித்து உரையாட ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரியும் 'ராஜீவ் கொலை வழக்கு' புத்தகத்தின் ஆசிரியருமான கே. ரகோத்தமன் வரும் வெள்ளிக்கிழமை அன்று கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்துக்கு வருகை தருகிறார்.

மத்திய புலனாய்வுக் கழகம் இயங்கும் விதம் குறித்தும் முக்கிய வழக்குகள் பற்றிய விசாரணைகள் குறித்தும் அவர் உரையாடுவார்.

கலந்துரையாடலும் உண்டு.

அனைவரும் வருக!

தேதி : ஏப்ரல் 29, 2011

நேரம் : மாலை 6.30

இடம் : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18

Monday, April 25, 2011

2011 - சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு - தினமலர் - 24 ஏப்ரல் 2011

24 ஏபரல் 2011 தினமலர் நாளிதழில் ‘2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு’ புத்தக மதிப்புரை வெளிவந்துள்ளது.

புத்தகத்திலிருந்து ஒரு பகுதி...

2011-Sarvathikarathilirundhu jananayagaththukku - Tamil

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-644-5.html

Friday, April 22, 2011

காந்தி கொலை வழக்கு - புத்தக மதிப்புரை - 20-4-11 - தினத்தந்தி

20-4-2011 தினத்தந்தியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘காந்தி கொலை வழக்கு’ புத்தகத்தின் புத்தக மதிப்புரை வெளியாகியுள்ளது.

புத்தகத்திலிருந்து ஒரு பகுதி:

Gandhi Kolai Vazhakku_Tamil_kizhakku

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-596-7.html

Monday, April 11, 2011

சீனா விலகும் திரை - வெங்கட் சாமிநாதன் விமர்சனம் - யுகமாயினி இதழ், மார்ச் 2011

China Vilagum thirai (Tamil) book review

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-164-8.html

கருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011

13-4-2011 தேதியிட்ட துக்ளக் இதழில், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘கருணாநிதி என்ன கடவுளா?’ புத்தக விமர்சனம் வெளியாகியுள்ளது.

புத்தகத்திலிருந்து ஒரு கட்டுரை:

Karunanidhi Enna Kadavula_Devar Katturai

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-651-3.html

Sunday, April 10, 2011

நரேஷ் குப்தா பேச்சு - வீடியோ

ஞாநியின் குரல்கள் அமைப்பும் கிழக்கு பதிப்பகமும் இணைந்து நடத்திய நிகழ்வில், முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேசினார். அந்த நிகழ்வின் ஒளிப்பதிவு இதோ.

Saturday, April 9, 2011

ஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ

ஒளி, ஒலிப்பதிவின் தரம் ஒன்றும் பிரமாதமில்லை. மன்னிக்கவும்!

Thursday, April 7, 2011

கிழக்கு மொட்டைமாடி: பாலு மகேந்திரா - எழுத்திலிருந்து சினிமாவுக்கு

19 மார்ச் 2011 அன்று நடந்த நிகழ்வின் ஒளிப்பதிவு

ஜப்பான் அணு உலைகளில் நடந்தது என்ன? எல்.வி.கிருஷ்ணன் (வீடியோ)

ஏப்ரல் 6ம் தேதி மாலை கிழக்கு மொட்டைமாடியில் எல்.வி.கிருஷ்ணன், ஜப்பான் அணு உலைகள் தொடர்பாகப் பேசியதன் முழு வீடியோ இங்கே:

இரண்டு அறிவிப்புகள்: நாடகம் - ஞாநி - கேணி

அறிவிப்பு 1:

"ஆப்புக்கு ஆப்பு நாடகம் சாதாரண வாக்காளருக்கு வானளாவிய அதிகாரம் கிடைப்பது பற்றிய ஒரு பிரும்மாண்டமான கற்பனை. இதில் வரும் கற்பனைப் பாத்திரங்கள், நிகழ்ச்சிகள் உண்மையை பிரதிபலித்தால் அதனால் ஏற்படும் அவமதிப்புக்கு அந்த உண்மைகளே பொறுப்பேயன்றி நாங்கள் அல்ல."

பரீக்‌ஷா நாடகக்குழு
(1978லிருந்து அரங்கில்)

மற்றும்

கிழக்கு பதிப்பகம்

இணைந்து வழங்கும்

தேர்தல் ‘சிரிப்பு’ நாடகம்

ஆப்புக்கு ஆப்பு

எழுத்து, இயக்கம்: ஞாநி

நாள்: ஏப்ரல் 9, சனிக்கிழமை மாலை 6 மணி

ஸ்பேசஸ், 1 எலியட் பீச், பெசண்ட் நகர் சென்னை 90

அனைவரும் வருக.

அறிவிப்பு 2:

கிழக்கு பதிப்பகம் மற்றும் குரல்கள் (Voices) அமைப்பு இணைந்து நடத்தும் கேணி கூட்டம். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா பேசுகிறார்.

நாள்: ஏப்ரல் 10, ஞாயிறு
இடம்: கேணி, 39, அழகிரிசாமி ரோடு, கேகே நகர், சென்னை.
நேரம்: மாலை 4 மணி்

Wednesday, April 6, 2011

’நீதியின் கொலை - ராஜன் பிள்ளையின் கதை’ - புத்தக விமர்சனம் - தினத்தந்தி - ஏப்ரல் 6, 2011

’நீதியின்கொலை - ராஜன் பிள்ளையின் கதை’ புத்தக விமர்சனம், ஏப்ரல் 6, 2011 தினத்தந்தி இதழில் வெளியாகியுள்ளது.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-563-9.html

தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு புத்தக விமர்சனம் - தினத்தந்தி - ஏப்ரல் 6, 2011

ஏப்ரல் 6, 2011 அன்று வெளியான தினத்தந்தி நாளிதழில் ‘தமிழகப் பொதுத்தேர்தல்கள் வரலாறு’ புத்தகத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-643-8.html

கம்யூட்டர் கையேடு புத்தக விமர்சனம் - தினமலர் - ஏப்ரல் 3 2011

ஏப்ரல் 3, 2011 அன்று வெளியான தினமலரில் கம்ப்யூட்டர் கையேடு புத்தகம் பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது.

Rs. 100

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-525-7.html

Monday, April 4, 2011

ஜப்பான் அணு உலைகளில் என்னதான் நடக்கிறது? - கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் தாக்கப்பட்டு தள்ளாடிக்கொண்டிருக்கும் ஜப்பானின் தற்போதைய கவலை, புகைந்துகொண்டிருக்கும் அதன் அணு உலைகள்.

தாக்குதலுக்கு உள்ளான Fukushima Daiichi அணு ஆலையின் தற்போதைய நிலை என்ன? வெடித்துவிடாது பயப்படவேண்டாம் என்று ஜப்பான் சமாதானப்படுத்தினாலும், பீதியும் குழப்பமும் குறையவே இல்லை.

என்ன நடந்தது? தாக்குதலுக்கு உள்ளான உலையில் இருந்து கதிர்வீச்சு பரவிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா?

ஜப்பானில் நடந்தது போல் இந்தியாவிலும் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளதா? இத்தனை பயத்திலும் அணு உலைகளை நாம் வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன?

நாளை மறுநாள் புதன் கிழமை நடைபெற இருக்கும் கிழக்கு மொட்டைமாடிக்கூட்டத்தில் எல்.வி. கிருஷ்ணன் 'ஜப்பான் அணு உலைகளில் நடந்தது என்ன?' என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார். மேலே குறிப்பிடப்பட்ட கேள்விகளுக்கும் அவர் விடையளிக்கிறார்.எல்.வி. கிருஷ்ணன், கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் Safety Research Group பிரிவின் டைரக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கலந்துரையாடலும் உண்டு.

தேதி
ஏப்ரல் 6, புதன் கிழமை

நேரம்
மாலை 6.30 மணிக்கு

இடம்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை - 600 018

அனைவரும் வருக.

Monday, March 28, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - ஞாநியுடன் ஒரு மாலை

நண்பர்களே,

மார்ச் 31ம் தேதி, வியாழன் அன்று மாலை 6.30க்கு மணி கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் ஞாநி பேசுகிறார்.

* இன்றைய கூட்டணி நிலவரமும் அரசியல் நிலவரமும்

* தேர்தலைப் புறக்கணிப்பது சரியா?

* ஓ போடுவது எப்படி?

* வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வாக்களிக்க முடியுமா?

* தேர்தலில் மீடியாவின் இன்றைய பங்கு என்ன?

மேலும் பல விஷயங்கள் குறித்து ஞாநி உரையாடுகிறார். பின்னர் அவருடன் கலந்துரையாடல் நடைபெறும்.

தேதி
மார்ச் 31, 2011 வியாழன்

நேரம்
மாலை 6.30 மணிக்கு.

அனைவரும் வருக!

Wednesday, March 23, 2011

Review of 'Paintings in Tamilnadu - A History' book by S. THEODORE BASKARAN in Frontline

Frontline dated March 26-April 8, 2011 carries a review of 'Paintings in Tamilnadu - A History' published by Oxygen Books. The book is written by Job Thomas and the review is written by the famous writer S. THEODORE BASKARAN.

To read the review, Pl click here. |Fading Colors|

Rs. 300

To order the book line, pl click here. https://www.nhm.in/shop/978-81-8493-487-8.html

Friday, March 18, 2011

கருணாநிதி என்ன கடவுளா - புதிய புத்தகம்

பழ. கருப்பையா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கருணாநிதி என்ன கடவுளா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது. அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

விலை: ரூ. 120

தினமணி, துக்ளக்கில் வந்தபோது பெரிய அளவில் பேசப்பட்ட கட்டுரைகள் இவை. இரண்டாம் திராவிடச் சிசு, கருணாநிதி என்ன கடவுளா, தமிழ்த்தாய் வரமாட்டாள் போன்ற கட்டுரைகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-651-3.html

Thursday, March 17, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - எழுத்துகளின் கதை - தொடர் கூட்டம்

மொழியும் எழுத்தும் வெவ்வேறானவை. மொழிக்கு எழுத்துகள் இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. வாய்மொழியாகவே பல மொழிகள் ஜீவித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எழுத்துகளுக்கு மொழி அவசியம்.

எழுத்துகள் தோன்றி, படிப்படியாக உருப்பெற்று, நிலைபெற்ற கதை சுவாரஸ்யமானது. மனித குலத்தின் கதையும் நாகரீக வளர்ச்யின் கதையும்கூட இதில் இணைந்தே இருக்கிறது.

எழுத்துகளின் கதை என்னும் வரிசையில் பேரா. சுவாமிநாதன் ஒவ்வொரு மாதமும் எழுத்துகள் குறித்து கிழக்கு மொட்டைமாடியில் உரையாடிக்கொண்டிருக்கிறார். உலக எழுத்துகள் வரிசையில் சீன, எகிப்திய, மிசோ அமெரிக்க எழுத்துகள் குறித்து உரையாடினார்.

இந்திய எழுத்துகள் வரிசையில் பிராமிய, கரோஷ்டி எழுத்துகள் குறித்தும் தற்போது தமிழ்நாட்டு எழுத்துகள் குறித்தும் உரையாடிக்கொண்டிருக்கிறார்.

இன்று மாலை 6.30 மணிக்கு வட்டெழுத்து, தமிழ், கிரந்த எழுத்துகளின் வளர்ச்சி குறித்து பேரா. சுவாமிநாதன் பேசவிருக்கிறார்.

அனைவரும் வருக!

இடம்:
கிழக்கு மொட்டைமாடி
33/15, எல்டாம்ஸ் சாலை
ஆழ்வார்பேட்டை
சென்னை 18

நாள்:
17-மார்ச்-2011, வியாழக் கிழமை

நேரம்:
மாலை 6.30 மணி

Wednesday, March 16, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - பாலுமகேந்திரா

நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளை திரைப்படமாக்குவது குறித்த விவாதங்கள் தமிழில் அடிக்கடி நடைபெறக் காணலாம். நல்ல திரைப்படங்களைத் தந்துகொண்டிருக்கும் மொழிகளில் இத்தகைய ஒரு வழக்கம் தொடர்ச்சியாக இருந்துகொண்டுதான் இருக்கிறது.

திரைப்படங்கள் என்றல்ல, குறும்படம், நாடகம் என எதையும் இப்படி எழுதப்பட்ட புனைவுகளில் இருந்து எடுக்கும்போது, அதன் கதைத்தளம் நல்ல வலுவாக அமைந்துவிடும் சாத்தியங்கள் உண்டு. இப்படி இல்லாமல் சமசரம் என்ற பெயரில், படைப்பின் மூலத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்துவிட்ட படங்களும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

தொலைக்காட்சி நாடகங்கள் என்ற பெயரில் வந்துகொண்டிருந்த நாடகங்களுக்கு மத்தியில் பாலுமகேந்திராவின் கதை நேரம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் யதார்த்தமாகவும் இருந்து தொலைக்காட்சி நாடகங்களுக்கே ஒரு மரியாதை தேடித் தந்தது. அந்த கதை நேரத்தில் பாலுமகேந்திரா எடுத்த அத்தனை நாடகங்களும், எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளே. சிறுகதைகளின் தாக்கம் சிறிதும் கெடாமல் படமாக்கப்பட்ட விந்தையைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை. சில நாடகங்கள் சிறுகதைகளையும் மிஞ்சி நின்றன. தொலைக்காட்சி நாடகங்கள்தானே என்ற எண்னம் இல்லாமல், ஒரு திரைப்படத்துக்கு உண்டான உழைப்பை அதில் நாம் பார்க்கமுடியும். காலம் கடந்து ஒரு படைப்பு நிற்க, அதன் உள்ளடக்கமும் தரமும்தான் முக்கியமே ஒழிய, அது தொலைக்காட்சி நாடகமா திரைப்படமா குறும்படமா என்ற அவசியம் இல்லை என்று பெரிய அளவில் உணர்த்தியவை பாலுமகேந்திராவின் கதை நேரம் நாடகங்களே. அதன் சில நாடகங்களில், இந்தக் கதையை திரைக்கதையாக மாற்ற இயலுமா என்று நம்மை ஆச்சரியப்படுத்தி இருப்பார் பாலுமகேந்திரா.

உலகின் உன்னதமான திரைப்படங்கள் வரிசையில் வைக்கத்தக்க படங்களான வீடு, சந்தியா ராகம் படங்களைத் தந்தவர் பாலுமகேந்திரா என்பது நாம் அறிந்த ஒன்றே.

ஒரு படைப்பிலிருந்து திரைக்கு எப்படிச் செல்வது என்பது குறித்துத் தெளிவோடு பேசுவதற்குச் சரியான ஆளுமையும் அவர்தான்.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

‘எழுத்திலிருந்து திரைக்கு...’ என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா உரையாற்றுகிறார்.

குறும்படம் திரையிடலும், கலந்துரையாடலும் உண்டு.

தவறவிடக்கூடாத கூட்டம் இது.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்
நாள்: 18.03.2011 வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணி.
இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடி, 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600018.