கேப்டன் கோபிநாத் ஆங்கிலத்தில் எழுதி வெளியான சுயசரிதை நூல் Simply Fly.
கிழக்கு பதிப்பகம் இந்நூலின் தமிழாக்கத்தை வெளியிடுகிறது, வானமே எல்லை என்ற தலைப்பில். இந்தப் புத்தகம் தயாராகிச் சில மாதங்கள் ஆகியிருந்தாலும், கோபிநாத்தே புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்பதால் புத்தகத்தை அச்சிடாது இருந்தோம்.
வரும் புதன் கிழமை, சென்னை ஸ்பென்சர் பிளாஸாவில், மாலை 6.30 மணிக்கு, கேப்டன் கோபிநாத் முன்னிலையில் யுனிவெர்செல் செல்பேசி விற்பனைச் சங்கிலி உரிமையாளர் சதீஷ் பாபு புத்தகத்தை வெளியிட, ட்ரைஜின் டெக்னாலஜிஸ் ல்மிடெட் நிறுவனத்தில் சேர்மன் ஆர். கணபதி புத்தகத்தைப் பெற்றுக்கொள்கிறார். அவர்கள் இருவரும் பேசுவார்கள். அதன்பின் கேப்டன் கோபிநாத்தும் தன் வாழ்க்கைப் பயணம் பற்றிப் பேசுவார். அனைவரையும் இப்புத்தக வெளியீட்டு விழாவுக்கு வரவேற்கிறோம்.
** ஏர் டெக்கான்-தான் இந்தியாவின் முதல் மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனம். விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம் ஏர் டெக்கானை வாங்கி, அதனை கிங்ஃபிஷர் ரெட் என்று பெயர் மாற்றி, சமீபத்தில் இழுத்து மூடிவிட்டது. இப்போது மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமே, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அரசின் நிதியுதவி தேடிச் சென்றுள்ளது.
** கோபிநாத்தின் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான டெக்கான் 360 (http://deccan360.in/) என்பதும் நிதி நெருக்கடியில் உள்ளது.
No comments:
Post a Comment