Search This Blog

Wednesday, March 27, 2013

ஸ்ரீ வைஷ்ணவம் - கல்கி விமர்சனம்


ஸ்ரீ வைஷ்ணவம், வேணு சீனுவாசன், கிழக்கு பதிப்பகம், விலை ரூ 200. 
ஆன்லைனில் வாங்க:  https://www.nhm.in/shop/978-81-8493-425-0.html
ஃபோன் மூலம் வாங்க: Dial for books - 94459 01234
திருமண் காப்பிடுவதற்கு விரல்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமாம். அதிலும்கூட நடுவிரலையும் நகத்தையும் பயன்படுத்தக் கூடாதாம். ஸ்ரீ சூர்ணத்தைச் சுமங்கலிப் பெண்கள், கன்னிப் பெண்கள், கைம்பெண்கள் ஆகியோரும் தரித்துக் கொள்ள வேண்டும். கன்னிப் பெண்கள் பூசணி விதை வடிவிலும், சுமங்கலிப் பெண்கள் மூங்கில் இலையைப் போலவும், கைம்பெண்கள் எள்ளின் வடிவத்திலும் ஸ்ரீ சூர்ணம் தரிக்க வேண்டுமாம். கருவுற்ற பெண்ணுக்கு சீமந்தம் என்று ஒரு சடங்கு நடத்துவதுண்டு. சீமந்தம் என்றால் தலையின் வகிட்டுப் பகுதி. அதில் முள்ளம்பன்றியின் முள்ளால் தலையில் குத்தாமல் வகிடு எடுக்கும் நிகழ்வு உண்டு. பெண்ணின் கருவில் உள்ள குழந்தை அந்த முள்ளைப் போல சேதமடையாமல் வலிமையோடு பிறக்க வேண்டும் என்பதற்காக ஏற்பட்டது இது. பூணூல் அணிவிக்கும் வைபத்தின்த்தின் போது குழந்தைக்குப் புத்தாடை அணிவித்து அது விழாமல் இருப்பதற்காக முஞ்சம் புல்லால் மூன்று வடமாகச் செய்யப்பட்ட ‘மேகலை’ கட்டுவார்கள். வேத பாடங்களை முறையாகக் கற்ற நாட்களில் சிலர் அந்தக் குழந்தைகளைத் திட்டக்கூடும். அந்த வசைமொழிகளிலிருந்து குழந்தைகளைக் காத்து, பலம் தர வேண்டும் என்பதற்காக ’ரட்சை’யாகப் கட்டப்படுவதாம் இது. பழைய நாட்களில், மார்கழி மாதம் எழுதுகிற கடிதங்களில் தேதியைக் குறிப்பிடாமல் அந்த நாளுக்குரிய திருப்பாவைப் பாடலின் முதல் வார்த்தையைக் குறிப்பிட்டு எழுதுவார்களாம். அதாவது ‘மாயனை’ என்று ஐந்தாம் பாடலின் முதல் பதத்தைக் குறிப்பிட்டால் ஐந்தாம் தேதி எழுதியதாகப் பொருள். வைஷ்ணவ விளக்கும், தத்துவங்கள், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் என்று நான்கு பகுதிகளாக வகுத்துக் கொண்டு வணவ நெறி தொடர்பான ஏராளமன தகவல்களைத் தொகுத்து தருகிறார் வேணு சீனுவாசன்.

நன்றி: கல்கி(24.3.2013).

No comments:

Post a Comment